இந்திய அரசியலின் அதிகார பீடமாக விளங்கியவர் காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர். 2004 செப்டம்பரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஊழியர் சங்கரராமன் கொலையில் இவருக்கு உள்ள தொடர்பை முதன்முதலில் வெளியிட்டது நக்கீரன்தான். அதிகார மையமாக விளங்கும் பீடாதிபதி மீது ஜெ. அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற
கேள்வி எல்லாத் தரப்பிலும் இருந்தது. ஹைதராபாத்தில் இருந்த ஜெயேந் திரரை 2004 நவம்பர் 11 தீபாவளி நாளில் ஸ்பெஷல் ஃப்ளைட்டில் போலீசாரை அனுப்பி கைது செய்தது ஜெ.அரசு. தொடர்ந்து, இளைய பீடாதிபதி விஜயேந்திரரும் மற்ற குற்றவாளிகளும் சங்கரராமன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டனர்.
ஜெயேந்திரரிடமும் இத்தகைய நம்பிக்கை தெரிவதாகச் சொல்கிறார்கள் மடத்தின் நிர்வாகிகள். எனினும், தீர்ப்பு வேறுவிதமாக அமைந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் சிறை செல்ல நேரிட்டால் மடத்தில் தடங்கலின்றி நடை பெறவேண்டிய சந்திரமவுலீஸ்வரர் பூஜையைத் தொடர் வதற்காக மத்தூர் சுவாமிகள் எனப்படும் ஞான பிரசுனேந்திர சரஸ்வதியை அழைத்து வர மடத்துக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் டீம் தீவிர முயற்சியில் இருக்கிறது.
அரசுத் தரப்பு மற்றும் ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்களிடம் நாம் பேசியபோது, ""சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பலரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் பல்டி அடித்துவிட்டார்கள். ஜெ. அரசும் ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை பின்னர் காட்டவில்லை. ஒருவேளை, இந்துக்கள் ஓட்டு பற்றிய அக்கறையாக இருக்கலாம். வழக்கை விசாரிக்கும் நீதிபதி சி.எஸ்.முருகன் சட்டப்படி செயல்படக்கூடியவர். வழக்கின் தன்மை, ஆவணங்கள், சாட்சியங்கள் எல்லாவற்றையும் கவனித்து தீர்ப்பளிக்கக் கூடியவர்'' என்கிறார்கள். ஜெயேந்திரர் தரப்பு வழக்கறி ஞர்களிடம் உற்சாக மனநிலை தென்பட்டாலும், அரசு வழக்கறிஞர் தேவதாஸ், "நிச்சயம் நீதி வெல்லும்' என்கிறார் நம்பிக்கையுடன்.