புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013

நோர்வேயில் எழுச்சியோடு நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு

நோர்வேயில் ஒஸ்லோ, ஓலசுண்ட், பேர்கன், ஸ்தவங்கர், துரண்கைம், மோல்டே ஆகிய நகரங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது.
ஒஸ்லோவில் நேற்று மதியம் 12:45மணிக்கு கிருஸ்ண சென்ரர் மண்டபத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்வில் கலந்துகெண்டனர்.
தமிழ் மக்களுக்காக, தமிழீழத்திற்காக, தமிழ் மொழிக்காக தங்களின் இளைய உயிர்களை தியாகம் தந்த சீலர்களின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் கல்லறைகளுக்கு கார்த்திகை பூக்களால் மரியாதை செய்து மாவீரர்களின் எண்ணங்களை ஈடேற்ற சுடர்வணக்கம் ஏற்றி மக்கள் சத்தியம் செய்துகொண்டனர்.
2008 ஆண்டு மாவீரர்நாள், உரையில் தேசியத் தலைவரின் ஆணைக்கு ஏற்ப முழுக்க முழக்க இளையவர்கள் முன்னின்று மாவீரர்நாளை மிகச்சிறப்பாக நடாத்தியுள்ளார்கள்.
மரணத்தை கண்டு அஞ்சாத மாண்புகளை கொண்ட மாமனிதர்களின் புனிதநாளில் சிறப்பு விருந்தினராக பேர்லின் இருந்து வருகைதந்த மக்களவையின் செயற்பாட்டாளர் சங்கர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்.
அவர் தனது உரையில் தெரிவிக்கையில்,
மொறீசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டமைப்பும் அனைத்துலக மக்களவையும் இணைந்து நடாத்திய தமிழர் மாநாடும் அதன் பிற்பாடு நடைபெற்ற அரச அதிகாரிகளுடனான சந்திப்பும்தான் அந்நாட்டு ஜனாதிபதியிலிருந்து அதிகாரிகள்வரை கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் விடுவதற்கான காரணமாக அமைந்தது எனவும் இதேபோன்ற அரசியல் வேலைகளை அவசரமாக செய்யவேண்டிய தேவை காலத்தின் கட்டாயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மாவீரர் நாள் கலை நிகழ்சிகளின் மகுடமாக இருந்தவர்கள் இளையவர்கள் மிகவும் எழுச்சியான நடனங்களை வழங்கி உணர்வையும் உறுதியையும் தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேசப் புதல்வர்கள் கருவறையில் கருத்தரிக்கும் நாளில் விடுதலைப் போரை நகர்த்தி செல்வதர்க்கு பக்க பலமாக இருந்த மக்களுக்கும் இந்நாளை சிறப்புற நடாத்துவதர்கு நிகழ்சிகளை தந்துதவிய றொம்மன் அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடம், தொய்யன் அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடம், றம்மன் அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடம், நர்த்தனகாவிய நடனப்பள்ளி தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் மற்றும் எல்லாவகையிலும் விடுதலைக்கு வடம் பிடித்த அனைவருக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

ad

ad