இறுதிக்கட்டம் என்ற இலங்கை சார்பு ஆவணப்படம்! ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது
இலங்கை தொடர்பில் இறுதிக்கட்டம் என்ற பெயரிலான ஆவணப்படம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக திரையிடப்பட்டது. பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது
இதன்போது இராஜதந்திரிகள், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சிலர் மற்றும் இலங்கையின் நண்பர் குழுவினர் பிரசன்னமாயிருந்தனர்.
இந்த ஆவணப்படத்தில் ஜெயவதனி என்ற முன்னாள் போராளி ஒருவர் செஞ்சோலையில் வளர்ந்த விதம் பின்னர் போராளியாக உருவானமை போன்ற அம்சங்கள் காட்சியாக்கப்பட்டிருந்தன.
ஜீவன் சந்திமல் என்பவர் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்த ஆவணப்பட காட்சியின் பின்னர் கருத்துரைத்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வான் ஓர்டன் என்ற உறுப்பினர், இலங்கையில் படையினரின் நடவடிக்கைகளை காட்டிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் காரணமாகவே அதிகமான தமிழர்களின் மரணங்கள் ஏற்பட்டன என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் குறித்த ஆவணப்படத்தை மேலும் பல இடங்களில் திரையிட்டு சமநிலை செய்தியிடலை உறுதிப்படுத்தவேண்டும் என்று நிகழ்வில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.