புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013



(141) 

              மூகத்தின் உயர்ந்த மனிதர்கள் இழைக்கும் இழிவான குற்றங்களின் களமாக இந்தியா மாறி விட்டது. அவற்றின் ஆபாசக் கதைகள் ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவம் எடுத்து வருகின்றன. அவை நம் காலத்தில் எழுதப்பட்ட எந்த ஒரு துப்பறியும் கதையையும்விட மர்ம
முடிச்சுகள் மிகுந்ததாக இருக் கின்றன. நரேந்திர மோடி ஒரு இளம் பெண்ணை உளவு பார்த்த விவகாரம் பற்றி சென்ற இதழில் விரிவாக எழுதியிருந்தோம். அதில் மோடியின் அந்தரங்க விவகாரங்கள் பற்றி தயங்கித் தயங்கி சொன்ன விஷயங்கள் எல்லாம் இப்போது தேசிய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயங்களாகிவிட்டன. 

அமித்ஷா சட்டவிரோதமாக மான்ஸி சோனியை உளவுபார்த்த விவகாரத்தில் இது வரை ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.எஸ்.சிங்காலுக்கும் அமித்ஷாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள்தான் ஒரே சாட்சியமாக இருந்தன. ஆனால் இப்போது மான்ஸி சோனியின் நண்பராக இருந்த குற்றத்திற்காக பழிவாங்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ப்ரதீப் சர்மா இளம்பெண் வேவு பார்க்கப் பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

அந்த பிரமாணப் பத்திரம் மோடியை நேரடி யாகவே குற்றம் சாட்டுகிறது. பெண் விவகாரம் காரணமாக தான் உளவு பார்க்கப்பட்டதாகவும் பழிவாங்கப்பட்டதாகவும் அதில் கூறியிருக்கும் ப்ரதீப் சர்மா "எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது பழிவாங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட தற்கு முக்கிய காரணம். எனவே என் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்'’என்று கோரிக்கை விடுத்திருக் கிறார். பெண் விவகாரத்திற்காகவே தான் பழிவாங்கப்படுவதாக ஏற்கனவே 2011-ல் ப்ரதீப் சர்மா தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தபோதும் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து அந்தப் பகுதிகளை நீக்க உத்தரவிட்டது. ஆனால் இப்போது அமித்ஷா- ஜி.எஸ் சிங்கால் தொலைபேசி உரையாடல்கள் மோடி- மான்ஸி சோனி- ப்ரதீப் சர்மா விவகாரத் தை தெட்டத் தெளிவாக அம்பலப்படுத்தியிருப்ப தால் இந்தமுறை நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. 


ப்ரதீப் சர்மா அதோடு நிற்கவில்லை. தனது பிரமாணப் பத்திரத்திலும் பின்னர் தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியிலும் மான்ஸி சோனி மோடியுடனான நெருக்கமான தனது தொடர்பை தன்னிடம் தொடர்ந்து பகிர்ந்துகொண்டு வந்திருப்பதையும், மோடியும் அவரும் பரிமாறிக் கொண்ட எஸ்.எம்.எஸ்.களையும் மான்ஸி தன்னிடம் காட்டியிருப்பதையும் கூறும் சர்மா அந்த எண், மோடியின் எண்தானா என பரிசோதிக்கவே அதற்கு போன் செய்ததாகவும் அதுவே தான் கண்காணிக்கப் பட காரணமாயிற்று என்றும் கூறுகிறார். 


அவர் மற்றொரு முக்கியமான விஷயத் தையும் சொல் கிறார். “அந்த சம யத்தில் குறிப் பிட்ட அந்த பெண் கட்டிடக் கலைஞர் ஒரு ஆணுடன் நெருக்க மாக இருப்பது போன்ற வீடியோ காட்சி இணையத் தில் உலவுவதாக பரபரப்பான வதந்திகள் நிலவின. ஆனால் "இந்த வீடியோ காட்சிகள் என்னிடம் இருப்பதாக மோடி சந்தேகப்பட்டார். அந்த வீடியோ வெளியே வந்தால் தனது இமேஜ் பாதிக்கப்படலாம் என்றும் அது தன் தேர்தல் வாய்ப்புகளை பாதிக்கும் என்றும் அவர் பயந்தார். நான் ஏழு பொய் வழக்கு களில் கைது செய்யப்பட்ட அன்று அதிகாலை காவல்துறையினர் என் வீட்டை கடுமையாக சோதனையிட்டனர். எனது கம்ப்யூட்டர் மற்றும் லேப் டாப்பை எடுத்து சென்றனர். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது சிறையில் ஒரு நபர் என்னை ரகசியமாக சந்தித்தார். அந்த வீடியோவைக் கொடுத்துவிட்டால் இத்தோடு இந்த விஷயத்தை முடித்துவிடலாம் என்று பேரம் பேசினார்'’என்கிறார் ப்ரதீப் சர்மா.

வீடியோவில் அந்தப் பெண் நெருக்கமாக இருந்த நபர் யார்? அந்த வீடியோ ப்ரதீப் சர்மாவிடம் இருக்கிறது என்று மோடி ஏன் முடிவு செய்தார்? அது அந்த பெண் கட்டிடக் கலைஞர் மூலம் ப்ரதீப்பிற்குப் போயிருக்கும் என்று நினைத்தாரா? அந்த வீடியோ வெளியே வந்தால் அது தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று ஏன் மோடி ஆத்திரமடைந்தார்? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த தேசம் விடைதேடிக் காத்திருக்கிறது. ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதற்கும் பதில் சொல் லாமல் மோடி வழக்கம்போல இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தை மூடி மறைக்கவும் இதன் மூலம் ஏற்படும் சேதாரங்களைத் தடுக்கவும் இரண்டு அவசர முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியது. முதலாவ தாக மான்ஸி சோனியின் தந்தை ப்ரன்லால் சோனி யிடம் இருந்து தன் மகளின் பாதுகாப்பிற்காகவே அவரை கண்காணிக்கும்படி நரேந்திர மோடியிடம் கேட்டதாக அவசர அவசரமாக ஒரு கடிதத்தை வாங்கி வெளியிட்டது. ஆனால் அந்தக் கடிதமே சட்டவிரோத கண்காணிப்பில் ஈடுபட்டதாக மோடிக்கு எதிரான சாட்சியமாக மாறியதால் அது அடுத்தகட்ட முயற்சியில் இறங்கியது. மோடி யின் அடிவருடிகளில் ஒருவரான பத்திரிகையாளர் மது கிஷ்வர், ப்ரதீப் சர்மாவை அவதூறு செய்யும் முயற்சியில் இறங்கி னார். "ஊழல் பேர்வழியான ப்ரதீப் சர்மாவுடன் மான்ஸி சோனிக்கு தொடர்பு இருந்தது’’ என் றும் “அவரது குடும்பமே ஒரு கிரிமினல் குடும்பம்’’ என்றும் “அவர் பெண் களை கற்பழித்து கொடூரமாக கொல்லக்கூடிய மனம் படைத்த வர் என்றும் ஆகவேதான் அவ ரிடமிருந்து தன் மகளைக் காப்பாற்ற மான்ஸி சோனி யின் தந்தை ப்ரன்லால் சோனி மோடியிடம் கண்காணிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்க லாம் என்று எழுதினார். இந்த கேவல மான பொய்யை எதிர்த்து இப்போது ப்ரதீப் சர்மா மதுகிஷ்வ ருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறார். 

மேலும் ப்ரதீப் சர்மா மான்ஸி சோனியின் குடும்பத்துடன் தனக்கு இருந்த நெருக்கமான உறவைப் பற்றி குறிப்பிடுகிறார். மேலும் மோடியின் அரசால் 2010-ல் கைது செய்யப்பட்டு தான் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் மான்ஸி சோனியின் பெற்றோர் தனக்கு சிறையில் அன்புடன் உணவு கொண்டுவந்து தந்ததை யும் நினைவு கூர்கிறார். இது அனைத்துமே ப்ரதீப் சர்மாவிட மிருந்து மான்ஸி சோனியை காப்பாற்றவே கண்காணித்தோம் என்ற பா.ஜ.க.வின் பொய்யை அம்பலப்படுத்துகிறது.

அமித் ஷாவிற்கும் ஜி.எஸ். சிங்காலுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அந்தப் பெண் ணை பாதுகாப்பதற்குத்தான் உளவு பார்த்தோம் என்ற பொய் யை இன்னும் அம்பலமாக்கு கின்றன. இந்த தொலைபேசி பதிவுகள் அனைத்திலும் ப்ரதீப் சர்மா-மான்ஸி சோனி இருவரின் மீதும் ஆழ்ந்த வெறுப்பு வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. 

மோடி-அமித்ஷா கோஷ்டி வேவு பார்த்த விவகாரத்தில் அதற்கான எழுத்துபூர்வமான உத்தரவு எதுவுமே இல்லாமல் செய்திருக்கிறார்கள் என்று மத்திய உளவுத்துறை நிறுவனங் கள் உறுதி செய்திருக்கின்றன. இது வெறுமனே பெண் விவ காரம் மட்டுமல்ல, மோடி ஒரு சட்ட விரோத காவல் துறை அமைப்பை நீண்ட காலமாக நடத்தி வருகிறார். அந்த அமைப்பு குஜராத் வன்முறையின்போது மோடியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொண்டது. பின்னர் ஏராளமான போலி என்கவுன்ட்டர்களை நடத்தியது. இப்போது இந்த சட்டவிரோத உளவு வேலை. இது அனைத்தும் ஹிட்லரின் நாஜிப் படை களையே நினைவூட்டுகின்றன. தொலைபேசி கண் காணிப்பு தொடர்பான அத்தனை சட்ட நடைமுறை களும் மீறப்பட்டு வாய்மொழி உத்தரவின் மூலமாகவே உளவுத்துறை, பயங்கரவாத தடுப்புப் படை, காவல்துறை அனைத்தும் அந்தப் பெண்ணின் பின்னாலும் ப்ரதீப் சர்மா பின்னாலும் அனுப்பப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு குஜராத் காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற சில தகவல்களை வெளியிட்டார். அதன்படி மான்ஸி சோனியின் பெட்ரோல் பில், செல்போன் பில்கள் ஒருமுறை அரசுப் பணத்தில் செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன. இந்த மர்மக்கதையில் சக்திசிங் கோஹில் ஒரு புதிய மசாலாவை சேர்க்கிறார். மான்ஸி சோனிக்கும் ப்ரதீப் சர்மாவுக்கும் இருந்த நட்பு குறித்து மோடிக் கும் மான்ஸிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் பின் னர் அந்தப் பெண்ணும் அவரது சகோதரரும் நடத்திய நிறுவனத்திற்கு குஜராத் அரசின் பெரிய கான்ட்ராக்ட் ஒன்று அளிக்கப்பட்டதன் மூலம் சமாதானம் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார். ஈகோ லிப்ரியம் ஏஜென்சி என்ற அந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட எட்டே மாதங்களில் பெரிய ஸ்மார்ட் க்ரிட் (ஏழ்ண்க்) ப்ராஜெக்ட்டை அரசிடமிருந்து பெற்றதையும் சுட்டிக் காட்டுகிறார். உளவு விவகாரத்தில் பெண்ணின் உரிமை மீறப்பட்டுள்ளது தொடர்பாக மான்ஸி சோனியை விசாரிக்கும்படி தேசிய மகளிர் உரிமை ஆணையம் குஜராத் காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஒருவேளை நாளை தனது சம்மதத்துடன்தான் இந்த உளவு வேலை நடந்தது என்று மான்ஸி சோனி வாயாலேயே சொல்ல வைக்கலாம். அப்போதுகூட ஒரு தனி நபருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் அவருக்குத் தெரியாமல், எந்த சட்டபூர்வ உத்தரவும் இல்லாமல் அவரை கண்காணிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இது ஒரு கிரிமினல் குற்றம் என்றே இது தொடர்பான அனைத்து சட்டங்களும் கூறுகின்றன. 

ஊடகங்கள் இந்த செய்திகளை எவ்வளவு மூடி மறைக்க முடி யுமோ அவ்வளவு மறைக்கின்றன. எவ்வளவு மழுப்ப முடியுமோ அவ்வ ளவு மழுப்புகின்றன. தமிழ்ப் பத்திரிகைகள் இதை எப்படியெல்லாமோ மோடிக்கு பங்கம் வராத வகையில் திரித்து எழுதுகின்றன. உப்புப் பெறாத விஷயங்களுக்கு எல்லாம் விடிய விடிய விவாதம் நடத்தும் செய்திச் சேனல்கள் இந்த விவகாரத்தை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ அப்படி யெல்லாம் தவிர்க்கின்றன. நமது ஊடகங்களின் மோடி சார்பு நிலையும் மோடியின் பிரச்சார இயந்திரத்தின் செல்வாக்கு எங்கெல்லாம் நீண்டிருக் கிறது என்பதையும் இந்த விவகாரத்தில் பச்சையாகக் காணமுடிகிறது.

ஒருவருக்கு சார்பு நிலைகள் இருப்பதில் தவறில்லை. ஆனால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியையே முழுதாக சுய தணிக்கை செய்து மக்களின் பார்வைக்கே வர விடாமல் செய்தால் நாளைக்கு கருத் துரிமையைப் பற்றி பேச நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு அரசாங்கம் நம்மை ஒடுக்கும்போது அதை எதிர்க்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

ad

ad