புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013



           னிமொழியின் பிரச்சாரத் துக்குக் கிடைத்திருக்கும் ரெஸ் பான்ஸ், உ.பி.க்கள் தரப்பை ஏகத்துக்கும் தெம்படையச் செய் திருக்கிறது. அவர் பிரச்சாரத்துக்கு போன இடங்களில் எல்லாம், ஓ.பி.எஸ். போன்ற இலைத்தரப்பு வி.ஐ.பி.க்களுக்குத் திரளும் கூட்டத்தை விடவும்  அதிக அளவில் ஆண்களும் பெண்களுமாகப் பொதுமக்கள் திரண்டு, இலைத் தரப்பையே திகைக்க வைத்திருக்கின்றனர். 


23-ந் தேதி காலை சேலம் வந்த கனிமொழி, வீரபாண்டியாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலில் அவரது நினைவிடத்திற்கு நடந்தே சென்று மலரஞ்சலி செய்தார். கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள தும்பல் கிராமத்தில் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்தார். அவருடன் தொகுதிப் பொறுப் பாளரான பொன்.முத்துராமலிங்கம் வந்திருந்தார். 

அக்கம் பக்கத்தில் தேர்தல் வேலையில் இருந்த கட்சிப் பிரபலங்கள் யாரும் அங்கே தலைகாட்டவில்லை. அங்கு திரளாகத்  திரண்டிருந்த மக்கள் மத்தியில் மைக் பிடித்த கனிமொழி ""இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்திலோ ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களான சட்டப் பேரவை, பத்திரிகைகள், நிர்வாகம், அமைச்சரவை போன்றவை தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ’

நக்கீரன்’ இதழின் மீது எத்தனை பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள் தெரியுமா?  நக்கீரன் அலுவலகம் அ.தி.மு.க குண்டர்களின் தாக்குதலுக்கு எப்படியெல்லாம் ஆளானது என்பது உங்களுக்கே தெரியும். இப்படிப்பட்ட பழி வாங்கும் அரசாங்கம் நீடிக்கலாமா?''’ என அவர், கேள்வி எழுப்பியபோது "கூடாது கூடாது' என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். ’

வாழப்பாடி அருகில் உள்ள வன்னிய கிராமமான சிங்கிபுரம் கூட்டத்துக்கு வந்த கனிமொழி ""நான் வேலூர் சிறையில் வீர பாண்டியாரை சந்தித்தபோது, அவரது உடலில் பல இடங்களில் கொப்புளம் தோன்றியிருந்தது. அதற்கு சரியான சிகிச்சை கொடுக்காமல் அவரை  அலைக்கழித்து, உங்களிடம் இருந்து வீரபாண்டியாரை ஜெயலலிதா பிரித்துவிட்டார்'' என்று வாக்காளர்களைக் கண்கலங்க வைத்தார்.

அடுத்தநாள், ஏற்காடு மலை ஏறிய கனிமொழி, அயோத்தியாபட்டணம் ராமர் கோயில் திடலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுப் போனதை விவரித்துவிட்டு ""உங்களுக்கெல்லாம் ரேசன் பொருட்கள் ஒழுங்காகக் கிடைக்கிறதா?'' என கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். எதிரே இருந்த பெண்களோ "ஒரு நாள் போட்டா நாலு மாசத்துக்கு ரேசனைப் போடமாட்டாங்க' என்று குரல் கொடுத்தனர். கனிமொழியோ ""இது ஏற்காட்டின் குரல் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல்'' என்றார். தன் குழந்தைக்குப் பெயர்வைக்குமாறு ஒரு பெண்மணி கேட்க, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு, "வெற்றிச்செல்வி'’ என்று பெயர் வைத்தார்.

தும்பல் பஞ்சாயத்துத் தலைவர் கணேசன் போன்ற உ.பி.க்களோ ""மலைக் கிராமங்களில் கொஞ்சம் வீக்கா இருந்தோம். கனிமொழி வந்ததும் எங்க பக்கம் ஜனங்களின் பார்வை கனிவாகத் திரும்பியிருக்கு. அவர் குளுக்கோஸ் ஏற்றிவிட்டுப் போயிருக்கிறார்''’என்கிறார்கள் ரொம்பவே உற்சாகமாக.

ad

ad