புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013




           ""ஹலோ தலைவரே... …  ஒரு சென்ட்டிமென்ட்டான மேட்டரிலிருந்து ஆரம்பிக்கிறேன்… பொதுவா, ஒருத்தருக்கு திருமண பத்திரிகை கொடுக்கணும்னா எங்கே போய் கொடுப்பது மரபு?''


""இதென்னப்பா கேள்வி.. யாருக்கு கொடுக்கணுமோ அவங்க வீட்டுக்குப் போய் கொடுப்பதுதான் மரபு. மங்களகர மான குடும்ப நிகழ்ச்சிக்கு குடும் பத்தோடு எல்லாரும் வரணும்ங்கிற மரபோடு வீட்டுக்குப் போய் பத்திரிகை கொடுப்பாங்க.''

""ஆச்சாரத்தில் உறுதியானவர், பத்திரிகையாளர் சோ. அவர் ஜெ.வுக்கு குடும்ப நண்பர். ஜெ.வை சந்திக்க மந்திரிகள், தலைமைச் செயலாளர், உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அகில இந்தியத் தலைவர்கள்னு யாரா இருந்தாலும் அப்பாயிண்ட் மெண்ட்டுக்காகக் காத்திருந்து, கிடைச்சபிறகுதான் சந்திக்க முடி யும். அந்த அவசியமே இல்லாமல் ஒருநாளைக்கு மூன்று, நான்கு முறைகூட சந்திக்கிற அளவிற்கு நல்ல நண்பர் சோ. நைட்டு 9 மணியாக இருந்தாலும்கூட ஜெ.வை சந்திச்சி அரசியல் ஆலோசனை களை வழங்குவாரு. அப்படிப்பட்டவர் தன்னோட மகனின் கல்யாண பத்திரிகையை ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டில் கொடுக்க முடியலை. மோடிதான் பிரதமர் வேட்பாளர்னு சோ வெளிப்படையா ஆதரவு தெரிவிச்சதிலிருந்தே போயஸ் கார்டனில் அவரை ஜெ. சந்திக்கலை. பத்திரிகை கொடுக்க ணும்னாலும் கோட்டையில்  சந்திச்சி கொடுத்திடுங்கன்னு சொல்லப்பட்டிருக்குது. அதன்படி  கோட்டையில் உள்ள முதல்வர் அலுவல கத்தில்தான் ஜெ.வை சந்தித்துப் பத்திரிகையைக் கொடுத்தாரு சோ. கல்யாண பத்திரிகையைக்கூட வீட் டுக்கு அழைச்சி வாங்காமல் கோட்டையில் வாங்கிக் கிட்டதை சோவுக்கு ஏற் பட்ட அவமானமா மயிலாப் பூர் சர்க்கிள் நினைக்குதாம்.''

""சோ கூடப் போன வங்களுக்கு கோட்டையிலும் அவமானமாமே?''

""அது அவமானமில் லைன்னும் அவங்க செஞ்ச காரியத்துக்குக் கிடைச்ச வெகுமானம்னும் விவர மறிஞ்ச வட்டாரங்கள் சொல்லுதுங்க தலைவரே.. … பொதுவா, ஜெ.வை சந்திக் கிறவர் யாரோ அவரை முதல்வரின் அறைக்குள்ளும், அவர்கூட வந்தவங்களை பக்கத்தில் இருக்கிற முதல்வர் அலுவலக அறையிலும் அனுமதிப்பது வழக்கம். ஆனா, சோவோட போனவரை அறையில்கூட உட்கார வைக்கலை. என்ன காரணம்னா, அவர் சோ பெயரைப் பயன்படுத்தி, நூலகங்களுக்குப் புத்தகங்கள் ஆர்டர் போடும் பள்ளிக்கல்வித்துறைக்குள் மூக்கையும் முகத்தையும் நுழைச்சி, தங்களுக்கு வேண்டிய பதிப்பகங்களுக்கு ஆர்டர் போடும்படி நெருக்கடி கொடுத்திருக்கார். கல்விக்காக வசூலிக்கப்படும் சேவைவரியிலிருந்துதான் பொதுநூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படுது. மக்களின் வரிப்பணத்தில் தாங்களும் தங்களுக்கு வேண்டியவங்களும் கொழுக்கணும்னு அவர் செயல்பட்டார். அப் போது இந்தத் துறையை கூடுதலா கவனிச்சிக்கிட் டிருந்த மந்திரி பழனியப்பன் இதை ஜெ.வின் கவனத்துக்கும் கொண்டுபோயிட்டாராம். ஜெ.வின் நண்பரான சோ பெயரைச் சொல்லி நெருக்கடி கொடுப்பதால நமக்கெதுக்குப் பொல்லாப்புன்னு மந்திரி நினைச்சிருக்காரு. அவர் சோவோடு வந்திருக்காருன்னு தெரிஞ்சதும், ஜெ.வின் அறைக்குப் பக்கத்தில் உள்ள அறைக்குள்ளேகூட அனுமதிக்கலை.''

""அது சரி.. ஆனா, சோவை கார்டனுக்கு வரவச்சி பத்திரிகையை வாங்கியிருக்கலாம்ல.. காமராஜர், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், அத்வானின்னு தலைமுறைகளைக் கடந்து, அர சியல் தலைவர்களிடம் பழக்கம் உள்ளவராச்சே!''

""தனக்குப் பத்திரிகை கொடுத்தபிறகு எதிர்க்கட்சி முகாமிலும் பத்திரிகை கொடுப்பாரு சோன்னு ஜெ.வுக்குத் தெரியும் . அதனால அவ ருக்கு சோ மேலே கோபமாம். ஜெ. எதிர்பார்த்த மாதிரியே கோபாலபுரத்துக்குப் போன சோ, அங்கே கலைஞரை சந்திச்சி பத்திரிகையை கொடுத்துட்டு மரியாதைநிமித்தமா பேசிக்கிட்டி ருந்தாரு. மு.க.ஸ்டாலினுக்கும் பத்திரிகை கொடுத் தாரு. சோ வீட்டு கல்யாணத்துக்கு அத்வானி, நரேந்திரமோடி இவங்களெல்லாம் வருவாங்கன்னு எதிர்பார்க்கப்படுது. அதிலே கலைஞரும் கலந்துகொள்ளும்போது தி.மு.க-பா.ஜ.க உறவுக்கு அஸ்திவாரம் போடப்படலாம்னும் அதற்காகத் தான் சோ பத்திரிகை கொடுத்திருக்காருன்னும் ஜெ.வுக்கு சந்தேகம் இருக்குதாம்.''

""மங்களமான குடும்ப நிகழ்ச்சிகள்கூட பச்சையான அரசியலுக்குள்ளாவது நம்ம தமிழ் நாட்டில்தாம்ப்பா!''

""தலைவரே.. பா.ஜ.க.வும் தி.மு.க.வும் நெருங்கிடுமோன்னு ஜெ.வுக்கு மட்டுமில்ல, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் சந்தேகம் இருக்குதாம். ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்பட பல கட்சி களுக்கும் தி.மு.க. கடிதம் எழுதியது. இது சம்பந்தமா 10 நாளைக்கு முன்னாடி, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்கிட்டே ராகுல்காந்தி கருத்து  கேட்டிருக் காரு. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன் இவங்களெல்லாம், எம்.பி. தேர்தலில் தி.மு.க நம் பக்கம் இருக்கும்னு உத்தரவாதம் வாங்கணும். அவங்க பா.ஜ.க பக்கம் போவதுபோலத் தெரியுது. தே.மு.தி.க நம் பக்கம் வருதான்னு பார்த் துட்டு முடிவு பண்ணலாம்னு பலவித கருத்துகளை சொல்லியிருக்காங்க. ஜெயந்தி நடராஜன் மட்டும்தான் தி.மு.கவுக்கு சப்போர்ட்டான கருத்தைச் சொன்னா ராம். ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவுன்னும் சொல்ல வேணாம், இல்லைன்னும் சொல்லவேணாம். அமைதியா இருந்திடலாம்ங்கிறதுதான் பெரும்பாலானோர் கருத்து. ராகுலும் அதே மனநிலையில்தான் இருக்காராம். இருந்தாலும், இறுதி முடிவுங்கிறது சோனியா கையில்தானே இருக்குது.''

""மேலிடத்திலிருந்து முடிவு வருவதற்குள்ளே தேர்தலே முடிஞ்சிடும் போலிருக் குதே...'' 

""மணல் விவகாரமும் இன்னும் முடிவுக்கு வரலீங்க தலைவரே.. வீடு கட்டுறவங்களெல்லாம் அதிக விலைக்கு மணல் லோடு வாங்கி கஷ்டப் பட்டுக்கிட்டிருக்காங்க. அதி கார மட்டத்திலோ என்னென் னவோ நடந்துக்கிட்டிருக்குது. மணல் மன்னர் ஆறு முகச்சாமியோட நண்பரும் லைசென்ஸ் ஹோல்டரு மான பழனிச்சாமி மேலே எஃப்.ஐ.ஆர். போடப் பட்டிருக்குது. ஆனா, அவரைப் பிடிக்க போலீஸ் தரப்பில் எந்த முஸ்தீபும் இல்லை. தலைமறைவான பழனிச்சாமி இப்ப ஆஸ்திரேலியாவில் இருக்காராம். ஆறுமுகச்சாமி தரப்போ, புது லைசென்ஸ்தாரருக்கு யார்டு கிடைக்காமல் செய்வதோடு, மணல் அள்ளுவதில் அனுபவம் பெற்ற தொழிலாளர்கள் கிட்டேயும், மறுபடியும் நாங்கதான் தொழிலை நடத்தப்போறோம். அவங்க பக்கம் போகாதீங்கன்னு வேலை செய்யவிடாமல் தடுக்குதாம். அதனாலதான் மணல் அள்ளும் வேலைகள் சுத்தமா பாதிக்கப்பட்டு, ரேட் ஏறிக்கிட்டிருக்குது.''

""ஆறுமுகச்சாமி தரப்பு கை மறுபடியும் ஓங்கிடுமா?''

""நடப்பு விவரங்களைப் பார்த்தால் அப்படி எதுவும் தெரியலை. ஆறுமுகச்சாமிக்கு சப்போர்ட்டா இருந்தவர் பொதுப்பணித்துறை அமைச்சரா இருந்த கே.வி.ராமலிங்கம். அவரை விளையாட்டுத்துறைக்கு ஜெ. மாற்றிட்டாரு. இந்த நிலையில், திங்கட்கிழமை யன்னைக்கு உலக செஸ் சாம்பியனுக்கு ஜெ. விருது வழங்கினார். சென்னையில் தமிழக அரசாங்கத்தின் சார்பில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், விளையாட் டுத்துறை அமைச்சரான கே.வி.ராமலிங்கம் கலந்துக்கலை. சாம்பியனான நார்வேயின் கார்ல்சென்னைக் கூட இரண்டு வார்த்தை பேச விடலை. ஏற்காடு தேர்தல் வேலைகளில் மந்திரி கே.வி.ஆர். பிஸியா இருக்காருன்னு காரணம் சொல்லப்பட்டாலும், அவர் இந்த விழாவில் கலந்துக்கவேண்டாம்ங்கிறதுதான் மேலிடத்து உத்தரவாம். இலாகா மாற்றப்பட்ட கே.வி.ராம லிங்கத்திடமிருந்து இடைத்தேர்தலுக்குப்பிறகு மந்திரி பதவியும் பறிக்கப்படும்ங்கிறதுதான் லேட்டஸ்ட் தகவல்.''

""ஆறுமுகச்சாமி தரப்புக்கு கே.வி.ஆர். சப்போர்ட்டா இருந்ததுதான் இதற்கெல்லாம் காரணமா?''

""மாசம் 70-சியை சம்பந்தப்பட்ட இடத்துக்கு கொடுத்துக்கிட்டிருந்த ஆறுமுகச்சாமி, ஏழை களுக்கு படிப்பு, மருத்துவ உதவின்னு 180 சி வரைக்கும் செலவு பண்ணி அரசியல்வாதிபோல நடந்திருக்காரு. என்ன இதெல்லாம்னு சம்பந்தப் பட்ட இடத்திலேயிருந்து கேள்வி வந்ததும் 70சிங்கிறதை 100சின்னு உடனே உயர்த்திக் கொடுத்திருக்காரு ஆறுமுகச்சாமி. அப்படின்னா, உண்மையிலேயே எவ்வளவு வருமானம் அவருக்கு வருது, எவ்வளவு கணக்கு காட்டப்படுதுன்னு தோண்டப்பட்டப்பதான் விவகாரம் வெளியே வந்திருக்குது. அதிலேயே கே.வி.ஆர் சிக்கிட்டாரு. இப்ப பொ.ப.து.வை கவனிக்கும் ஓ.பன்னீ ரும் இது தனக்கு நிரந்தரத் துறை யல்லன்னு புரிஞ்சிருக்காராம். அதிகாரிகளோ, காண்ட்ராக்ட்டர் களோ வந்து சந்திச்சால் அவங்க கிட்டேயிருந்து மாலை, சால்வை களை மட்டும் வாங்கிக்குறாராம். ஏதாவது கோரிக்கை வச்சாங்ன்னா, பி.டபிள்யூ.டி விவகாரமே வேண்டாம். எல்லாம் மேலிடம் முடிவு பண்ணும்னு சொல்லி அனுப்பிடுறாராம். இடைத்தேர்தலுக்குப் பிறகு இலாகா மாற்றம் இருக்கும்ங்கிறதால ஜெ.வின் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ள 5 மந்திரிகள் இந்த  பொ.ப.து மேலே குறிவச்சி, நம்பிக்கையோடு இருக்காங்க.''

""குறி வச்சிருக்காங்கன்னு சொன்னதும், சென்னைக்கு வந்திருந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோட கார் மேலே இன்னொரு கார் மோதுன விவகாரம் விபத்தா, சதியான்னு பரபரப்பாகியிருக்குதே?''

""தலைவரே.. .. போன ஞாயிற்றுக்கிழமை நைட்டு ஒன்பதரை மணிக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தன்னோட ஆதர்சமான அழுக்குசாமி கோயிலை நிர்வாகம் செய்யும் சபாபதி கவுண்டரின் பேத்தி வரவேற்பு விழா சென்னையில் நடந்ததால அதிலே கலந்துக்கிட்டு சாந்தோம் சர்ச் சிக்னல் கிட்டே வந்தப்ப, அ.தி.மு.க கொடி போட்ட ஃபார்ச்சூனர் கார் ஒண்ணு சர்ருன்னு திரும்பி ரங்கசாமியின் எஸ்கார்டு கார் மேலே மோதியதோடு, ரங்கசாமி கார் மேலேயும் மோதிடிச்சி. இத்தனைக்கும் புதுவை முதல்வர் வர்றாருங்கிற விவரம் தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிட்டி போலீசின் எஸ்கார்டு காரும் முன்னாடி போய்க்கிட்டுத்தான் இருந்தது. டிராபிக் கண்ட்ரோலில் போலீசார் அலட்சியமா இருந்துட்டாங்க. ரங்கசாமி யோடு வந்தவரான ஏ.எஃப்.டி வாரியத் தலைவர் பாலன், "அந்த ஃபார்ச்சூனரில் 7 பேர் இருந்தாங்க. டிரைவர் சீட்டுக்குப் பக்கத்து சீட்டில் இரண்டு பேர் உட்கார்ந் திருந்தாங்க. அத்தனை பேரும் ஃபுல்லா குடிச்சிருந்தாங்க. வண்டி தாறுமாறா வந்து எங்க வண்டியில மோதி எங்க முதல்வரை கொல்லப் பார்த்தாங்க. எங்க எஸ்கார்டு செல்வத்துக்கு சரியான அடி. ட்ரீட் மெண்ட்டிலே இருக் காரு'ன்னு சொன்னாரு. நல்லவேளையா, ரங்க சாமிக்கு அடிபடலை. எதற்கும் அலட்டிக்கொள்ளாத அவர் மறுநாள் காலையில் வழக்கம் போல டென்னிஸ் ஆட ஆரம்பிச்சிட்டாரு.''

""இன்ஜினியர் பெண்மணியோட போனை உளவு பார்த்த விவகாரம், பிரதமர் வேட்பாளரா களம் காணும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பெரும் சவாலா உருவாகியிருக்குதே?''

""போன் பேச்சுகளை உளவு பார்த்து டேப் செய்வது எல்லா அரசாங்கங்களும் செய்ற வேலைதான். இப்ப தமிழ்நாட்டில் அது ரொம்ப தீவிரமா நடந்துக்கிட்டிருக்குது. மாநில உளவுப்போலீஸோடு முக்கியமான பணியா டேப் விவகாரம்தான் நடக்குது. எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள்னு பலருடைய போன் பேச்சுகளையும் டேப் செய்யும் உளவுப் போலீ சார், சக போலீஸ் அதிகாரிகளின் போன்களையும் உளவு பார்க்குறாங்களாம். இதுதான் எனக்கு கிடைச்ச லேட்டஸ்ட் தகவல்.''

ad

ad