சவூதி அரேபியாவானது போதைவஸ்தை கடத்தி வந்த குற்றச்சாட்டில் பாகிஸ்தானியர் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.
பெருமளவு ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கி சவூதி அரேபியாவுக்கு கடத்த முயன்றதாக அந் நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பெருமளவு ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கி சவூதி அரேபியாவுக்கு கடத்த முயன்றதாக அந் நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவருக்கு கிழக்கு நகரான டம்மாமில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரது மரணதண்டனை நிறைவேற்றத்துடன் சவூதி அரேபியாவில் இந்த வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 72 ஆக உயர்ந்துள்ளது.