புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013



          ""ஹலோ தலைவரே... …   5 மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே பா.ஜ.க.வும் காங்கிரசும் பார்லிமெண்ட் தேர்தல் ரேஞ்சுக்கு அதிதீவிரமா இருப்பதைக் கவனிச்சீங்களா?''


""பார்லிமெண்ட் தேர்தலுக்கு இன்னும் 6 மாசம்கூட முழுசா இல்லையே.. அதனாலதான் nakeeran சட்டமன்றத் தேர்தலிலேயே முன்னோட்டம் பார்த்துக்கிட்டிருக்காங்க. தமிழகத்திலும் கூட்டணி முயற்சிகளில் பா.ஜ.க படுதீவிரமா இருக்குதாமே?''

""கிட்டதட்ட உறுதியாயிடிச்சின்னு சொல்லும் தமிழக பா.ஜ.க தலைவர்களின் முகத்தில் உற்சாகம் தெரியுது. அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் மாற்றா நெஜமாவே ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிக்கிட்டிருக்கோம்னு சொல்றாங்க. பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளோட இன்னும் சில சாதி அமைப்புகளும் அமைந்த கூட்டணியாக அது தேர்தல் களத்தை சந்திக்கும்னு எதிர்பார்க்கி றாங்களாம். சம்பந்தப்பட்ட கட்சி தொண் டர்களும்கூட இப்படியொரு கூட்டணி அமையணும்னு விரும்புறாங்களாம்.''

""நான்கூட ஃபேஸ்புக்கில் பார்த்தேம்ப்பா.. பா.ம.க நிர்வாகி ஒருத்தர் மாம்பழம், தாமரை, பம்பரம், முரசு சின்னங்களை ஒன்றாக வைத்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அதற்கு நிறைய வரவேற்பு.''

""இந்தக் கூட்டணிக்கு முதலில் ஓ.கே. சொன்னவர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோதான். தமிழருவி மணியன் எடுத்த முயற்சியின் விளைவு இது. அதிலிருந்து வைகோ இப்ப நரேந்திர மோடி, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரோடு நேரடித் தொடர்பில் இருக்காரு. அவங்களும் அங்கிருந்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க அதன்படி பொன்.ராதாவும் வைகோவோடு ரெகுலர் டச்சில் இருக்காரு. காமன்வெல்த் மாநாடு விஷயத்தில் காங்கிரஸோட நிலைப்பாடுதான் பா.ஜ.க.வுக்கும்னாலும் அதை தேசியத் தலைவர்கள் வெளிப்படையா சொல்லாமல் அடக்கி வாசித்ததற்கு காரணம், வைகோவின் முயற்சிகள்தானாம். பா.ஜ.க உருவாக்கும் கூட்டணியில் விஜயகாந்த் இருப்பதால் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லைன்னும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம் வைகோ.''

""விஜயகாந்த்தை கடுமையா விமர்சிப்பதும் மோதுவதும் பா.ம.க.தானே, அவங்க சைடில் என்ன நிலை?''

""அங்கும் பழம் கனிஞ்சிக்கிட்டிருக்குது. ராமதாஸ் உடல்நலமின்றி இருந்தபோது பொன்.ராதாகிருஷ்ணன் பார்த்து நலன் விசாரித்தார். இப்ப ராமதாஸை சந்திக்கும் அசைன்மென்ட் இல.கணேசன்கிட்டே கொடுக்கப்பட்டிருக்குது. ஒருகாலத்தில் ராமதாசுக்கும் இல.கணேசனுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கும். இப்ப நிலைமை சுமுகமாகி ஜோடிப்பொருத்தம் போல இருக்குதாம். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி அறிவிப்பை வெளிப்படையா அறிவிக்கலாம்ங்கிறது எதிர்பார்ப்பு. அவரை சீக்கிரமா கனியவைக்கிறதுக்காக டெல்லித் தொடர்புகள் மூலம் அன்புமணிகிட்டே பா.ஜ.க பேசியிருக்குது. பா.ம.க தலைமையில் சாதி அமைப்புகள் அமைத்துள்ள சமூக நீதி கூட்டணியோடு மொத்தமா பா.ஜ.க பக்கம் வர்றோம்னு உத்தரவாதம் கிடைத்திருக்குதாம்.''

""அதெல்லாம் சரி.. பா.ஜ.க அணியில் தே.மு.தி.க இருந்தால் அங்கே பா.ம.க இருக்குமா?''

""அரசியலில் எல்லாம் நடக்கும்னு உங்களுக்குத் தெரியாதுங்களா தலைவரே! பா.ம.க சார்பில் எம்.பி. வேட்பாளர்கள் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டாரே அந்த சமயத்திலேயே அன்புமணியும் விஜயகாந்த் மச்சான் சுதீஷும் கூட்டணி பற்றி பேசியிருக்காங்க. நீங்க உங்க மாமாகிட்டே பேசுங்க. நான் எங்க அய்யாகிட்டே பேசுறேன்னு சொல்லியிருக்காரு அன்புமணி. அதற்கப்புறமும் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்திருக்குதாம். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் போட்டியா வலிமையான ஒரு அணியை உருவாக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு இரண்டு தரப்பிலும் பேசப்பட்டிருக்குது. வடமாவட்டத்தில் தே.மு.தி.க. வளர்வதில் பா.ம.க.வுக்கு ஈகோ இருந்ததையும், பா.ம.க.வைவிட பெரிய கட்சின்னு தே.மு.தி.க.வுக்கு ஈகோ இருந்ததையும் வெளிப்படையாப் பேசி, அதையெல்லாம் இப்ப ஒத்திவைச்சிட்டு இப்ப ஒண்ணா நிற்போம். எந்தெந்த தொகுதிகளை நாம பங்கிட்டுக் கொள்வதுங்கிறதைக்கூட முடிவு பண்ணிக்குவோம்னும் பேசியிருக்காங்களாம். தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கும் மோடிக்கும் உள்ள விளம்பரத்தை நாம பயன்படுத்திக்குவோம்னு இரண்டு தரப்பும் பேசியிருக்குதாம்.''

""இரண்டு கட்சிகளிலும் இதற்கு முழு ஆதரவு இருக்குதா?''

""பா.ம.க.வைப் பொறுத்தவரை ஜி.கே.மணி, அரக்கோணம் வேலு உள்பட பலரும் ஓ.கேதான். காடுவெட்டிகுருகூட சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜரானபோது அன்புமணியை சந்திச்சிருக்காரு. பா.ஜ.க.வுடனான மெகா கூட்டணி பற்றியும் தே.மு.தி.க.வும் இருக்கும்ங் கிறதையும் அன்புமணி சொல்ல, குருவும் ஓ.கே. சொன்னாராம். தே.மு.தி.க.வில் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் காங்கிரசின் மூவ்வைப் பார்த்துட்டு முடிவெடுக்கலாம்னு சொல்றதா தகவல். ஆனாலும், திருவள்ளூர் பண்ணை வீட்டில் விஜயகாந்த்தும் வெங்கைய நாயுடுவும் சந்திச்சிப் பேசியிருக்காங்க. இந்த சந்திப்புகள் தொடருதாம். ஏற்கனவே பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி பச்சமுத்துவும், பா.ம.க தலைமையிலான சமூகநீதிக் கூட்டணி இப்பவே வெளிப்படையா பா.ஜ.க. கூட்டணின்னு அறிவித்தால் ஓட்டு வாங்குவது எளிதா இருக்கும்னு ராமதாஸ்கிட்டே வலியுறுத்திக் கிட்டிருக்காரு. பா.ம.க.வில் அன்புமணியையும் தே.மு.தி.க.வில் சுதீஷையும் பா.ஜ.க.வின் வெளிமாநில எம்.பி. கோட்டாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்புவதோடு, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்தால் மந்திரி களாக்குவதுங்கிறது வரைக்கும் பேசப்பட்டிருக்குதாம். இப்போதைய நிலையில் இந்தக் கூட்டணிக்கு கன்னியாகுமரி, கோவை, விருதுநகர், தர்மபுரி, ஆரணி உள்பட 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்குன்னும் தேர்தலில் மோடி சுனாமி வீசினால் 20 தொகுதிகள் வரை ஜெயிக்கலாம்னும் கணக்குப் போடப்படுதாம்.''

""தேசியக் கட்சியான பா.ஜ.க.வோடு தமிழகக் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் இவ்வளவு மும்முரமா இருக்கிற நிலையில் இங்குள்ள இரண்டு பெரிய கட்சிகளான அ.தி.மு.க.விலும் தி.மு.க.விலும் என்னென்ன மூவ்கள் நடந்துக்கிட்டிருக்குது?''

""இருக்கிற கட்சிகளிலேயே அ.தி.மு.க.தான் எல்லாக் கட்சிகளுக்கும் முன்னாடி எம்.பி. தேர்தலுக்கான களப்பணிகளை தொடங்கிய கட்சி. தேர்தல் பணிக்குழு, ஆலோசனைக்கூட்டம்னு தொடர்வதோடு, ஜெ.தான் பிரதமர்னு பிரச்சாரம் பண்ணிக் கிட்டே இருக்காங்க. அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செந்தூர்பாண்டியன், எஸ்.பி.சண்முகநாதன் வீட்டுத் திருமணங் களை நடத்தி வைத்து ஜெ. பேசுறப்ப விவேகானந்தரின் பொன்மொழிகளைச் சொன்னாரு. வாழ்க்கையில் மிகவும் உயரிய லட்சியம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த லட்சியத்திற்காகவே உங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்யுங்கள். அந்த லட்சியத்தின் நினைவாகவே வாழுங்கள். எந்நேரமும் அந்த லட்சியத்தைப் பற்றிக் கனவு காணுங்கள். அந்த லட்சியத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்யுங்கள். அந்த லட்சியத்தால் நிறைந்திருங்கள். அந்த லட்சியத்திற்காகவே செய லாற்றுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்னு சொல்லி, 40 தொகுதி களிலும் நமக்கு வெற்றிதான்னு சொன்னார். திருமணவிழாவுக்கு ஜெ. வந்தப்பவும், கிளம்புனப்பவும் வருங்கால பிரதமர்னு அங்கே இருந்த நிர்வாகிகள் கோஷம் போட்டாங்க. திருமண விழாவிலிருந்து வடசென்னையில் இறந்துபோன மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் ஆர்.டி.சாம்சனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ஜெ. அங்கே இருந்த நிர்வாகிகளும் வருங்கால பிரதமர்னு வாழ்க கோஷம் போட்டாங்க.''

""திருமண வீடு, துக்க வீடு எல்லா இடத்திலும் வருங்கால பிரதமர்தானா.. அ.தி.மு.கவினர் தெளிவாத்தான் இருக்காங்க. தி.மு.க.வில் என்ன நடக்குது?''

""எம்.பி. தொகுதிவாரியா நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலின் கலந்துக்குறாரு. அதுபோல மாவட்டவாரியா நடக்கும் எம்.பி. தேர்தல் நிதியளிப்புக்கூட்டத்திலும் ஸ்டாலின் கலந்துக்குறாரு. ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கு நடுவில் குரூப் குத்துவெட்டுகளுக்கும் பஞ்சமில்லை. சமீபத்தில், கனிமொழி எம்.பி.யை சந்தித்து ஒரு குரூப் குமுற, எனக்கும் இதெல்லாம் தெரியும். டிசம்பர் வரைக்கும் பொறுத்துக்குங்க. அதற்கப்புறம் நான் யாருன்னு காட்டுறேன்னு சொல்லியிருக்காரு. தி.மு.க.வுக்குள்ளே இதுதான் புயலா, பூகம்பமா பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது.''

""அந்தளவுக்கு என்ன விவகாரம்?''

""திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நிதியளிப்புக்கூட்டம் திருவொற்றியூர் சிவகாமி நகரில் நடக்க ஏற்பாடுகள் நடந்தது. இது தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்குது. மா.செ. சுதர்சனம், ந.செ. தனியரசு, மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் இவங்களெல்லாம் கலந்துக்கிட்டாங்க. அப்ப முன்னாள் மந்திரியான கே.பி.பி.சாமி டென்ஷனா இருந்திருக் காரு. போன முறை இவரோட மந்திரி பதவி நீடிச்சதுக்குக் காரணம் ராஜாத்தியம்மாளும் கனிமொழியும்தான்னு கட்சிக் குள்ளேயே பேச்சு உண்டு. அந்தளவுக்கு இவர் சி.ஐ.டி.காலனி ஆதரவாளர். அவர் ரொம்ப டென்ஷனோடு என்ன நடக்குது இங்கே? வட்டச் செயலாளரும் கவுன்சிலருமான தம்பையாவுக் குக்கூட தளபதி வரும் கூட்டம் பற்றி தகவல் தெரியலை. யாருக்கும் தகவல் கொடுக்காமல் உங்க இஷ்டத்துக்குக் கூட்டம் நடத்துறீங்களான்னு கோபமா சத்தம் போட்டிருக்காரு. மா.செ. ஆட்களோ சரியான பதில் சொல்லாமல் கடுமையாய் பேச, வார்த் தைகள் தடிக்க ஆரம்பிச்சிடிச்சி.''

""கூட்டம் நடந்ததா இல்லையா?''

""களேபரமா நடந்திருக்குது. கூட்டம் நடத்திய ந.செ.தனியரசு மேலே பாய்ஞ்சிட்டாரு பாக்ஸரான மாஜி மந்திரி கே.பி.பி.சாமி. தனியரசுக்கு 5 குத்து விழுந்திருக்குது. சாமியோடு அவரோட தம்பியான கவுன்சிலர் சங்கரும் களமிறங்கிட்டாரு. எதிர்தரப்பு கூட்டத்திலிருந்து ஓட்டம் பிடிச்சிடிச்சி. இந்த களேபரக் கூட்டம் பற்றி கோபாலபுரம் வரைக்கும் புகார் வந்ததால் கலைஞர் முன்னிலையில் துரைமுருகன், மு.க.ஸ்டா லின், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் விசாரித்திருக்காங்க.'' 

""இரண்டு தரப்பும் என்ன சொன்ன தாம்?''

""மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், எங்களை அடிக்கிறாங்க. உதைக்கிறாங்க. அநியாயம் நடக்குதுன்னு கே.பி.பி.சாமி பிரதர்ஸ் பற்றி குமுறி யிருக்காரு. அவங்கப்பா பரசுராமன் காலத்திலே யிருந்தே அவங்க கொஞ்சம் வேகமாத்தான் இருப்பாங்கன்னு கலைஞர் சொன்னாராம். அடி வாங்கிய இளைஞரணியை சேர்ந்த செந்தில்ங் கிறவரிடம் ஸ்டாலின், என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லுங்கன்னு முன்னிறுத்தியிருக்காரு. அவரும் சாமி பிரதர்ஸ் பற்றி புகார்களை அடுக்கியிருக்காரு. அடுத்ததா நகர செயலாளர் தனியரசு, நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். என்னை சாமியும் அவர் தம்பியும் கொல்லப்பார்க்குறாங்கன்னு படபடப்பா சொல்ல, கலைஞர் உடனே, இங்கே எல்லோருமே சாதாரணமானவங்கதான். ஜமீன்தார் குடும்பத் திலிருந்தா வந்திருக்கோம்? ஒன்றும் நடக்காது. நான் கூப்பிட்டு சொல்றேன்னு சமாதானப்படுத்தி யிருக்காரு. ஆனா, மு.க.ஸ்டாலின் டென்ஷன் ஆயிட்டாராம்.''

""ஏன்?''

""இத்தனை புகார்கள் சொல்லியும் கே.பி.பி. சாமி தரப்பு மீது நடவடிக்கை எடுக்கத் தலைமை தயாராக இல்லைங்கிறதாலதான். நான் என்னோட உடல்நிலையைப் பார்க்காமல் ஒவ்வொரு மாவட்டமா போய் பொதுக் கூட்டங்களில் கலந்துக்கிட்டு தேர்தல் நிதி வசூலிக்கிறேன். இனிமேல் போகப் போறதில்லைன்னு சொல்லிட்டு கோபால புரம் வீட்டு மாடியி லிருந்து இறங்கிட்டா ராம். இதைப் பார்த்த மாவட்ட துணைச் செய லாளர் விஸ்வநாதன், சாமியை கட்டம் கட்டலைன்னா கட்சி அழிஞ்சிடும்னு சொல்லி யிருக்காரு. கலைஞரோ, ஏற்கனவே உங்க மாவட்டத்திலே 2 பேரை கட்டம் கட்டியிருக்கோம். இன் னும் எத்தனை பேரைக் கட்டம் கட்டுறது? ஆற்காடு வீரா சாமியையும் துரைமுருகனையும் விட்டு விசாரிக்கச் சொல்றேன்னு சொல்லியிருக்காரு.'' 

""ஓ.. இரண்டாவது கட்ட விசாரணையும் நடந்ததா?''

""போன 14-ந் தேதி யன்னைக்கு அறிவாலயத்தில் பஞ்சாயத்தைக் கூட்டினாங்க. அப்ப ஸ்டாலின் அங்கிருந்த சாமியைப் பார்த்து, நீங்க மந்திரியா இருந்தப்பவும் இப்பவும் இப்படித்தானான்னு கேட்க, சாமியின் தம்பி சங்கர், தளபதி.. ஆட்சி போனதும் என்னை போலீஸ் தேடுனது. கடலுக்குள்ளே போய் படகிலேயே மாதக் கணக்கில் இருந்தேன். என் வீட்டையெல்லாம் நொறுக் கினாங்க. அப்புறம் கரை திரும்பி ஜெயிலுக்குப்போய் குண்டாஸை எதிர்கொண்டேன். ஜெயிலில் இருந்தபடியே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானேன். அதுபோல எங்கண்ணன் ஆதரவில் தம்பையாவும் கவுன்சிலரா ஜெயிச்சாரு. ஆனா, இந்த விஸ்வநாதனும் அவரோட ஆட்களும் போட்டியிட்டு என்னாச்சி? விஸ்வநாதன் 4வது இடத்துக்குத்தான் வந்தாரு. அவங்களுக்கு மக்கள் சப்போர்ட்டும் இல்லை. தொண்டர்கள் பலமும் இல்லைன்னு சொல்லியிருக்காரு.'' 

""விஸ்வநாதன் தரப்போட பதில் என்ன?''

""அவங்க, சாமி தரப்பின் அடாவடியைத்தான் புகாரா சொல்லியிருக்காங்க. மாவட்ட மீனவரணி அமைப் பாளர் சரவணன்ங்கிறவர் சாமியின் தம்பி சங்கர்தான் தங்களை அடிச்சதா சொல்ல, சங்கர் ரொம்ப கோபமா, அங்கே மட்டுமில்ல, அறிவாலயத்திலேயே உன்னை வெட்டி வீசிடுவேன்னு ஸ்டாலின் முன்னாடியே சவுண்டுவிட, குறுக்கிட்ட ஸ்டாலின் பேனரில் கனிமொழி படத்தையும் போட்டுட்டு என் படத்தை ஏன் போடுறேன்னு கேட்டிருக்கிறார். அவரும் தலைவர் பெண்தானேன்னு சங்கர் சொல்ல, அதில் ஏன் என் படத்தைப் போட்டு அவமானப்படுத்துறீங்கன்னு கேட்ட ஸ்டாலின், தனியரசுகிட்டே சாமி மன்னிப்பு கேட்கணும்னும் இல்லைன்னா கட்டம் கட்டிடுவோம்னு சொல்லியிருக்காரு.''

""பஞ்சாயத்தோட முடிவுதான் என்ன?''

""சாமியோ, உங்கக்கிட்டே மன்னிப்பு கேட்போம். வேற யாருக்கிட்டேயும் கேட்க மாட்டோம்னு சொல்லி, ஸ்டாலினிடம் கேட்டிருக் காங்க. ஆனா தனியரசோ வெளியில் கட்சிக்காரங்க கிட்டே, சாமியும் சங்கரும் தன்னோட கையைப் பிடிச் சிக்கிட்டு மன்னிப்புக் கேட்டதா சொல்லிக்கிட்டி ருப்பதால திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வுல பதட்டம் நீடிச்சிக்கிட்டுத்தான் இருக் குது. கோபாலபுரம், அறிவா லயம்னு நடந்த பஞ்சாயத்து களின் விவரங்களையும் தங்களைக் கட்டம் கட்ட நினைப்பதையும் சாமி தரப்பு, கனி மொழியை சந்திச்சி சொல்ல அப்பதான், எனக்கும் இதெல்லாம் தெரியும். டிசம்பர் வரைக்கும் பொறுத்துக்குங்க. அதற்கப்புறம் நான் யாருன்னு காட்டுறேன்னு சொல்லி யிருக்காரு கனிமொழி. இதுதான் தி.மு.க நிலவரம்.''

""பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் என்ன நிலவரம்? 21-ந் தேதியன்னைக்கு புது நீதிபதி மைக்கேல் டி குன்ஹா முதன் முறையா ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தாரே?''

""குற்றவாளிகளெல்லாம் ஆஜராகியிருக்காங்களான்னு ஜெ உள்ளிட்ட நால்வர் பற்றியும் கேட்டிருக்காரு. யாரும் ஆஜராகலை. அவங்க வக்கீல்கள் தரப்பில் பெட்டிஷன் போட்டிருக்காங்க. தான் புது நீதிபதி என்பதால் வக்கீல்களை அறிமுகப்படுத்திக்கச் சொல்லி வழக்கு விவரங்களைக் கேட்டிருக்காரு டி குன்ஹா.  ஜெ.வின் வக்கீல் குமார் தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு வழக்கு விவரத்தை சொல்லியிருக்காரு. அதற்கப்புறம், 27-ந் தேதியன்னைக்கு வழக்கு விசாரணையை தள்ளிவச்சாரு நீதிபதி. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடுவை கோர்ட்டில் சாட்சியமளிக்கக் கூப்பிடு வதா, இல்லையான்னு அன்னைக்கு முடிவாகுமாம். அதனால இந்த வழக்கு மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி யிருக்குது.''

""நானும் இந்த வழக்கு பற்றிய தகவலோடுதான் லைனில் இருக்கேன். 21-ந்தேதி வியாழக் கிழமையன்னைக்கு நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை பார்க்க ணும்னு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி குணசீலன் பெங்களூரு கோர்ட்டில் உள்ள நீதிபதியின் அறைக்குப் போயிருக்காரு. நீதிபதியோ நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சேம்பரில் பார்க்க மாட்டேன்னு மறுத்ததோடு, எதுவாக இருந்தாலும் ஓப்பன் கோர்ட்டில் வந்து சொல்லுங்கன்னு சொல்லிட்டாராம்.''

ad

ad