புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013

இரா­ணு­வத்தைத் தொடர்ந்தும் மாகாண த்தில் இருக்­க­விட்டு அதன் அர­வ­ணைப்பில் குளிர் காயலாம் என்று எண்­ணு­வது மடமை. விக்னேஸ்வரன் 
இது­வரை காலமும் அரச அதி­காரம், இரா­ணுவ பலம், அனு­ச­ரணைப் படையின் அட்­டூ­ழி­யங்கள் போன்­ற­வற்றின் உத­வி­யுடன் நடத்­தி­வந்த அரச நிர்­வா­கத்தை மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர். இரா­ணு­வத்தைத் தொடர்ந்தும் மாகா­ணத்தில் இருக்­க­விட்டு அதன் அர­வ­ணைப்பில் குளிர்­கா­யலாம் என எண்­ணு­வது மடமை. எனவே மக்­களின் ஆத­ரவைப் பெற்­ற­வர்கள் தத்­த­மது கட­மை­களில் ஈடு­பட சக­லரும் வழி­ய­மைத்துக் கொடுக்­க­வேண்டும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
 
அர­சாங்­கத்­துடன் சேர்ந்­தி­யங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்­சர்கள் சிலர் எம்மை இயங்க விடாமல் தடுக்­கின்­றனர். ஒரு­வேளை அர­சாங்­கத்­திற்கும் எமக்கும் இடையில் நெருங்­கிய உறவு அடுத்த தேர்­தலின் போது ஏற்­பட்டால் தமது பாடு இக்­கட்­டா­ன­தாக அமைந்து விடுமோ என்ற கிலேசம் தான் அவர்­களை அவ்­வாறு செய்யத் தூண்­டு­கின்­றதோ தெரி­ய­வில்லை எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.
 
சாவ­கச்­சேரி பிர­தேச சபையின் உள்­ளூ­ராட்சி வார நிகழ்வு நேற்று இப் பிர­தேச சபை மண்­ட­பத்தில் இடம்­பெற்­ற­போது நிகழ்வில் கலந்த கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
உள்­ளூ­ராட்சி வாரம் கொண்­டா­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதன் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று நடை­பெறும் என்றும் எம்மை கௌர­விக்கப் போவ­தா­கவும் துரை­ராசா கூறி­ய­போது "உங்கள் உள்­ளூ­ராட்சி வார நிகழ்­வு­களைச் சிறப்­பாக நடத்­துங்கள். ஆனால் எங்­களைக் கௌர­விக்கத் தேவை­யில்லை" என்று நான் அவ­ருக்குக் கூறினேன். அவர் சரி என்று தான் சொன்னார். ஆனால் அர­சி­யல்­வா­தி­களைக் கௌர­விக்­கா­மலும் எங்­க­ளு­டைய மக்­களால் இருக்­க­மு­டி­யாது. அவர்­களைத் தேவை­யென்றால் நிந்­தித்துத் தூற்­றா­மலும் இருக்­க­மு­டி­யாது. அவ்­வாறு ஆக்­கப்­பட்டு விட்­டார்கள் என்று நினைக்­கின்றேன்.
 
துரை­ராசா எங்கள் கட்­சியின் வெற்­றிக்­காக தேர்­தலில் பாடு­பட்­டவர். அவரின் கோரிக்­கையைத் தட்டிக் கழிக்­க­மு­டி­யா­மல்தான் நேற்­றைய தினம் அவ­சர அவ­ச­ர­மாகக் கொழும்­பி­லி­ருந்து வந்தேன். தேர்­த­லை­விடக் கூடிய கடினம் மிக்க ஒரு போட்டி தற்­போது நடந்து கொண்­டி­ருக்­கின்­றது.
 
மக்கள் தமது மனோ­நி­லையை தேர்­தலில் எடுத்­தி­யம்பி இருந்­தாலும் அர­சாங்கம் சார்­பா­ன­வர்கள் அதை உணர்ந்து கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. தொடர்ந்தும் தமது மத்­திய அர­சாங்க அதி­கா­ரங்­களை மாகா­ணத்தின் மீது திணித்து விடவே நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மக்­களின் நன்­ம­திப்­பைப்­பெறத் தவ­றி­ய­வர்கள் தொடர்ந்து ஆணைகள் இடத் துணிந்­துள்­ளார்கள்.
அதற்­காக முன்னர் தமது கையாட்­க­ளாகப் பாவித்து வந்த அரச அலு­வ­லர்­களைத் தமக்கு துணை நிற்­கு­மாறு வற்­பு­றுத்தி வரு­கின்­றார்கள். இதனால் மக்­களின் தேவைகள் மற்றும் அவர்­க­ளுக்­கான சேவைகள் என்­பன பாதிப்­ப­டை­கின்­றன என்ற எண்ணம் சற்­றேனும் இத்­த­கைய அதி­கா­ரத்தில் உள்ள அதி­கா­ரி­க­ளுக்கோ அரச அலு­வ­லர்­க­ளுக்கோ இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. தமது அதி­கா­ரங்­களும் ஆணை­க­ளுமே அவர்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாகப் போய்­விட்­டன.
 
அர­சாங்­கமும் மாகாண சபையும் ஒரு கூட்­டு­றவு அடிப்­ப­டையில் சேர்ந்­தொ­ழு­கி­னால்தான் மாகாண சபை நிர்­வா­கமும் பிர­தேச சபைகள் நிர்­வா­கமும் வெற்றி அளிக்­க­மு­டியும். நானோ நீயோ என்ற பாணியில் ஒரு­வரின் உரித்­துக்­களை மற்­றவர் பாவிக்க எத்­த­னித்தால் கூட்­டு­றவு நிலை அழிந்து முரண்­பட்ட நிலையே உரு­வாகும். மக்­களின் நன்மை கருதி நாங்கள் அமை­தி­யாகப் பொறு­மை­யு­டன்தான் எமது தடங்­களைப் பதித்து வரு­கின்றோம்.
அதனை எமது வலு­வின்மை அல்­லது தளர்வு நிலை என்று எம்­மி­னிய சகோ­தர சகோ­த­ரிகள் தப்­புக்­க­ணக்குப் போட்­டு­வி­டக்­கூ­டாது. மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்கள் தமது மக்­க­ளுக்­கான சேவையைச் சீரும் சிறப்­பு­டனும் செய்ய வழி அமைப்­ப­தா­லேயே மாகா­ணத்தில், பிர­தேச சபைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் ஜன­நா­ய­கத்தின் சுவ­டுகள் பதிக்­கப்­ப­டலாம். இல்­லை­யென்றால் அரா­ஜ­கமே மிஞ்சும்.
 
இது வரை­கா­லமும் அரச அதி­காரம், இரா­ணுவ பலம், அனு­ச­ரணைப் படையின் அட்­டூ­ழி­யங்கள் போன்­ற­வற்றின் உத­வி­யுடன் நடாத்தி வந்த அரச நிர்­வா­கத்தை மக்கள் வேண்டாம் என்று தெளி­வாகக் கூறி­விட்­டார்கள் என்­பதை இந்த அரச சார்­பான அதி­காரம் படைத்­த­வர்கள் புரிந்து கொண்டு நடக்கப் பழகிக் கொள்­ள­வேண்டும்.
 
இரா­ணு­வத்தைத் தொடர்ந்தும் மாகாண த்தில் இருக்­க­விட்டு அதன் அர­வ­ணைப்பில் குளிர் காயலாம் என்று எண்­ணு­வது மடமை.
 
எனவே மக்­களின் நன்­ம­திப்­பையும் ஆத­ர­வையும் பெற்­ற­வர்கள் தத்­த­மது கட­மை­களில் ஈடு­பட வழி­ய­மைத்துக் கொடுப்­பதன் அவ­சி­யத்தை சக­லரும் உணர்ந்து கொள்­வார்கள் என்று நம்­பு­கின்றாம்.
 
இன்று உங்கள் பிர­தேச சபை­கயின் உள்­ளூ­ராட்சி வாரம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. உள்­ளூ­ராட்­சி­யா­னது மன்­னர்கள் காலந்­தொ­டக்கம் கிராம சபை­க­ளாக எமது நாட்டில் நடை­மு­றையில் இருந்து வந்­துள்­ளது. நாடு சுதந்­திரம் பெற்ற பின்னர் மத்­திய அர­சாங்க அமைச்சர் ஒரு­வரே உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக இருந்து வந்தார். காலஞ்­சென்ற எஸ்.டபிள்யூ.பண்­டா­ர­நா­யக்­கவும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக இருந்து வந்­தவர் என்­பதை நினை­வு­றுத்­து­கின்றேன்.
 
எனினும் பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்டம் வந்த பின்னர் தான் உள்­ளூ­ராட்சி, மத்­திய அர­சாங்­கத்­திடம் இருந்து மாகாண சபை­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. ஆனால் அவை தொடர்­பான வடிவம், கட்­டு­மானம், தேசியக் கொள்­கைகள் போன்­றவை தொடர்ந்து மத்­திய அர­சாங்கம் வசமே இருந்து வரு­கின்­றன. 1987இல் பிர­தேச சபைகள் சட்டம் வரமுன் 1939ஆம் ஆண்டு பட்­டண சபைச் சட்­டமும் 1974ஆம் ஆண்டில் மாந­கர சபைச் சட்­டமும் அமு­லுக்கு வந்­தி­ருந்­தன.
 
அந்­தந்த உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­க­ளுக்குச் சட்­டத்தால் வழங்­கப்­பட்­டி­ருக்கும் அதி­கா­ரங்­க­ளையே அவ்­வந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் பாவிக்­கலாம். அந்­தந்த உள்­ளூ­ராட்சி வரம்­பெல்­லை­க­ளினுள் அமைந்­தி­ருக்கும் சமூ­கத்­திற்கு அவர்­களின் சுகம், வசதி, நலம் சார்­பான சேவை­களைப் பெற்­றுக்­கொ­டுப்­பதே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் கட­மை­யாகும்.
அதா­வது நிர்­வாகம், ஒழுங்கு பற்றி நட­வ­டிக்­கைகள் எடுத்தல், சூழல் மேம்­பாடு பற்றி ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுத்தல், பொது­மக்கள் பாவிக்குந் தெருக்கள், பொதுச் சேவைகள் போன்­ற­வற்றைப் பாது­காத்தல் போன்­ற­வையும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு கடப்­பா­டுகள் ஆவன.
யாழ்ப்­பா­ணத்தைப் பொறுத்­த­வரை தென்­மேற்கு வட­ம­ராட்சி, வலி­காமம் கிழக்கு, வலி­காமம் வடக்கு, வலி­காமம் மேற்கு,வலி­காமம் தெற்கு வேலணை போன்ற பிரசே சபைகள் நடை­மு­றையில் இருந்து வரு­கின்­றன என்று எண்­ணு­கின்றேன்.
 
மத்­திய அர­சாங்­கத்­திற்கு அடுத்­த­தாக மாகாண சபையும் அதற்கு அடுத்­த­தாக பிர­தேச சபை­களும் இருந்து வரு­கின்­றன. இவை மூன்றும் ஒருவர் மற்­ற­வரின் எல்­லைக்குள் பிர­வே­சி­யாமல் இருந்தால் தான் சுமூ­க­மான உறவைப் பேணி வளர்க்க முடியும்.
 
13ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு முன்­னேற்­பா­டாக நடந்த இந்­திய– இலங்கை ஒப்­பந்த விவா­தங்கள் நாட்டின் சகல மாகா­ணங்­க­ளிலும் மாகாண சபை­களை அமைக்கும் வண்­ண­மாக அமை­ய­வில்லை. அப்­போ­தைய ஜனா­தி­பதி தான் மாகாண சபை­களைச் சகல மாகா­ணங்­க­ளுக்கும் ஏற்­பு­டை­ய­தாக்­கினார். தான் தமி­ழர்­க­ளுக்கு ஏதேனும் சலு­கை­களைக் கொடுத்­து­த­வி­ய­தாகச் சிங்­கள மக்கள் அவரை அடை­யா­ளங்­காணக் கூடாது என்­பதே அவ­ரு­டைய இலக்­காக இருந்­தது. ஆனால் அதி­காரப் பர­வலே 13ஆவது திருத்தச் சட்­டத்தின் குறிக்கோள். அது போது­மா­க அத்­தி­ருத்தச் சட்­டத்தின் கீழ் வழங்­கப்­பட்­டதா? இல்­லையா? என்று பரி­சீ­லிக்க இது­வரை காலமும் போதிய சந்­தர்ப்­பங்கள் எழ­வில்லை.
ஏனென்றால் பொது­வாகத் தெற்கில் உள்ள மாகாண சபைகள் ஆளுங்­கட்­சியைச் சேர்ந்த அங்­கத்­த­வர்­க­ளையே கொண்­டி­ருந்­தது. அப்­படி இல்லை என்­றாலும் பெரும்­பான்­மை­யின மக்­களே மத்­திய அர­சாங்­கத்­திலும் இருந்­தார்கள். மாகாண சபை­க­ளிலும் இருந்­தார்கள். அவர்­க­ளுக்குள் அதி­காரப் பகிர்வு கட்­டா­ய­மாகத் தேவைப்­ப­ட­வில்லை. உள்­ளூ­ராட்சி சிறந்து விளங்க வேண்­டு­மென்று அவர்கள் அபிப்­பி­ராயங் கொண்­டி­ருந்­தார்­க­ளே­யாகில் போதிய அதி­காரப் பகிர்வு தேவைப்­பட்­டி­ருக்கும். ஆனால் அவர்கள் அவற்றை இது­வரை போது­மா­ன­தாகக் கோர­வில்லை.
 
ஆனால் வட­மா­காணம் அப்­ப­டி­யல்ல. நாங்கள் கட்­சியால் வேறு­பட்­ட­வர்கள் மட்­டு­மல்­லாது கலை­களால் வேறு­பட்­ட­வர்கள். மொழி­யினால் வேறு­பட்­ட­வர்கள். மதத்­தினால் வேறு­பட்­ட­வர்கள். நிலத்தின் அமைப்­பினால் வேறு­பட்­ட­வர்கள். காலா­தி­கா­ல­மாகத் தனித்து வேறு­பட்ட வாழ்க்கை முறையில் வளர்ந்து வந்­த­வர்கள். எமக்குத் தான் அதி­காரப் பகிர்வு தேவைப்­பட்­டது. ஆனால் சுமார் 25 வரு­டங்­க­ளாக அது எமக்குக் கிட்­ட­வில்லை. தற்­போது கிட்­டி­ய­துந்தான் தெரி­கி­றது. ஆளு­ந­ருடன் சேர்ந்து அர­சாங்கம் எந்­த­ள­விற்கு எமது அதி­காரப் பகிர்வை அர்த்­த­மற்­ற­தாக்­கலாம் என்­பதை அவ­தா­னிக்க வேண்டும்.
அதா­வது எமது அதி­காரப் பகிர்­விற்­கா­கவே 13ஆவது திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. அதனை 25 வரு­டங்­க­ளுக்கு மேல் எம் பூமியில் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. ஆனால் நடை­மு­றைப்­ப­டுத்த ஒரு சந்­தர்ப்பம் கிடைத்­ததும் அதைச் சிதைக்கச் சதி நடக்­கின்­றது. ஆனால் தேர்­தலின் போது இவ்­வாறு நடக்கக் கூடும் என்­பது நாம் அறிந்து வைத்­தி­ருந்­த­துதான். அடுத்த கட்­ட­மாக இப்­பேர்ப்­பட்ட சதிச் செயல்கள் நாட­றிய உல­க­றியப் பேசப்­பட வேண்­டி­ய­வை­க­ளாக மாறக்­கூ­டு­வன என்­பதை நாம் மனதில் வைத்­தி­ருக்க வேண்டும்.
 
ஆனால் நடை­மு­றையைப் பார்த்தால் அர­சாங்­கத்­துடன் சேர்ந்­தி­யங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்­சர்கள் சிலர், தமிழ் பேசும் அலு­வ­லர்கள் சிலருடன் சேர்ந்து எம்மை இயங்க விடாமல் செய்யப் பார்க்கிறார்கள். ஒருவேளை அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு அடுத்த தேர்தலின் போது ஏற்பட்டால் தமது பாடு இக்கட்டானதாக அமைந்து விடுமோ என்ற கிலேசம் தான் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகின்றதோ தெரியவில்லை. அண்மைய தேர்தல் அவர்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்து வருவதை எடுத்துக்காட்டியது. அதைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று சதிகளில் ஈடுபடுகிறார்களோ தெரியவில்லை.
 
எது எவ்வாறு இருப்பினும் உள்நாட்டு விடயங்களை இப்பொழுதும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன். எனினும் அந்த நம்பிக்கைக்கு அதற்கு மாறான ஒரு செயலாகத்தான் மேற்கூறிய சதிகள் அரங்கேற்றப்படுகின்றன. விரைவில் சிங்களப் பொதுமக்கள் எமது யதார்த்தத் தேவைகளையும் இன்று எமக்கு நடக்கும் சதிகள் பாற்பட்ட நடவடிக்கைகளையும் புரிந்துகொண்டு தமது அரசாங்கத்திற்குப் போதுமான நெருக்குதல்களை அளிக்க முன்வருவார்கள் என்றும் நம்புகின்றேன் என்றார்.

ad

ad