புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013


           ந்த வீடியோ காட்சியைப் பார்க்கும் யாரும், இனி ஏ.டி.எம். பக்கம் போக, ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்கவே செய்வார்கள்! அப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது, பெங்களூருவில்!

பெங்களூருவில், கார்ப்பரேசன் வங்கியில் மேலாளராக இருப்பவர், ஜோதி உதய். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல காலை 6.30மணிக்கு வேலைக்குப் புறப்பட்டார். போகும் வழியில், பணம் எடுப்பதற்காக, ஜே.சி. சாலையில் உள்ள கார்ப்பரேசன் வங்கி ஏ.டி.எம்.முக்குள் சென்றார். சில மணித்துளிகளில்..


திடீரென ஒருவன் உள்ளே புகுந்து, ஷட்டரை மூடினான். ஜோதி திரும்பிப் பார்க்க.. அவனோ துப்பாக்கியைக் காட்டி, அவரின் பையைப் பறிக்க முயன்றான். ஆனா லும், ஜோதி துணிவாக அவனை எதிர்த்துப் போராடினார்.. ஆனால், சூட்டு, வெட்டு ஆயுதங்களுடன் தாக்குதல் வெறியோடு இருப்பவனிடம், நிராயுதபாணியாக எவ்வளவு நேரம் போராட முடியும்? ஜோதியின் தலை யிலும் முகத்திலும் காட்டுமிராண்டித்தனமாக அவன் தாக்க.. மயங்கி கீழே விழுந்தார் ஜோதி. அவருடைய பையில் இருந்த பணத்தையும் செல்ஃபோனையும் எடுத்துக் கொண்டு, அரிவாளில் இருந்த ரத்தக்கறையைத் துடைத்து விட்டு, வெளியேறி, மீண்டும் ஷட்டரை மூடிவிட்டு அவன் போகும் காட்சிகள், அப்படியே கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறது.  இது எல்லாமே, ஐந்து நிமிடங்களுக்குள் நடந்துமுடிந்துவிட்டது. 



கிட்டத்தட்ட மூன்று மணி நேரம், ரத்தம் வழிந்தோட அதில் தோய்ந்தபடி மயங்கிக் கிடந்திருக்கிறார், ஜோதி. காலை 10 மணிவாக்கில் பள்ளிக்குச் சென்ற இரண்டு சிறுவர்கள், ஏ.டி.எம்.-ல் இருந்து ரத்தம் வருவதைப் பார்த்து போக்குவரத்து போலீஸ்காரரிடம் சொல்ல.. அங்கி ருந்தவர்கள் ஜோதியை வெளியே கொண்டுவந்து, மருத்துவமனையில் சேர்த்தார்கள். தலையில் எலும்புகள் உடைந்து, மூளைக்குள்ளும் சிறு எலும்புத் துகள்கள் பாய்ந்து, சீரியஸான கட்டத்தில் இருந்தவருக்கு, பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில், மேஜர் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு சில வார்த்தைகள் பேசியிருக்கிறார், ஜோதி. 

இதற்கிடையில், இச்சம்பவம் பற்றி, காட்சி ஊடகங்கள் கண்காணிப்பு கேமிரா காட்சிகளுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்பவும், கர்நாடக அரசுக்கு நெருக்கடியாகிவிட்டது. கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மட்டும் அவரைப் பார்த்துவிட்டுப் போனார்.  ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு பற்றிய வழிகாட்டுதல்களை வகுக்க, மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பட்டாநாயக் தலைமையில் ஒரு கமிட்டியை அமைப்பதாக அன்றே கர்நாடக அரசு அறிவித்தது. 

பெங்களூருவில் அடிக்கடி நடக்கும் ஏ.டி.எம். கொள்ளையைத் தடுக்க, மாநகர போலீஸ்ஆணையர், சமீபத்தில் மட்டும், வங்கி அதிகாரிகளுடன் மூன்று முறை கூட்டங்களை நடத்தியுள்ளார்; ஏ.டி.எம்.களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வங்கிகள் செய்யவேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்; அதன் பிறகு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக் கிறது’’என்று செய்தியாளர்களிடம் உச் கொட்டினார், உள்துறை அமைச் சர் ஜார்ஜ். இதே சமயம், சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையம், ஹலசூரு போலீஸ்நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில், முக்கியமான ஒரு எல்.ஐ.சி.  அலுவலக வளாகத்துக்குள்தான் இருக்கிறது என்ற உண்மையையும் புறந் தள்ளிவிட்டுப் போகமுடியாது. 

பெங்களூரு நகரத்தில் இருக்கும் 2,580 ஏ.டி.எம்.களில் 600க்கும் மேற்பட்டவைகளில், பாதுகாப்புக்கு ஆளே நியமிக்கப்படவில்லை. இந்த ஆண்டில் இதுவரை, பெங்களூருவில் 38 ஏ.டி.எம். கொள்ளை முயற்சிகள் நடந்துள்ளன. அங்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் இதே நிலைதான் காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் 4,200 ஏ.டி.எம்.களில் நாற்பது சதவீதம் மையங்கள், பாதுகாப்பற்றவை என போலீஸ் தரப்பிலேயே கூறுகிறார்கள். காவலாளி இல்லாதது, பழுதான கதவுகள், கண்காணிப்பு கேமிரா இல்லாதது, பழுதாகி இருப்பது என இடத்துக்கு ஏற்ப, பாதுகாப்புக் குறைபாடுகள் பளீரிடுகின்றன. 

பெரும்பாலான மையங்களில், நோஞ்சான் ஆட்கள், வயதான பெரியவர்களே பாதுகாப்புக்கு இருக்கிறார்கள். இவர்களால் கொள்ளையர்களை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பது பெரும் கேள்விதான். ஏனென்றால், சென்னை மட்டு மின்றி, மாநிலத்தின் பல ஊர்களிலும் ஏ.டி.எம். மையக் காவலாளிகள், கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.  சில இடங்களில் முதிய காவலாளிகள் உயிரிழந்ததும் நடந்துள்ளது. 

இவ்வளவுக்கும், தமிழ்நாடு தனியார் பாது காப்பு முகமை விதிகள் என 2008ஆம் ஆண்டில் அரசு வெளியிட்ட உத்தரவில், இது பற்றி கறா ராகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்த தனியார் பாதுகாப்பு நிறுவனமும் இதை மதிப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கமும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. ஏ.டி.எம். மையங்கள் வங்கிகளின் சொத்து கள் எனும்போது, வங்கி நிர்வாகம்தானே பாதுகாப்புக்கு பொறுப்பு என்று யதார்த்தமாகக் கேட்கத்தோன்றும். ஆனால், ஏ.டி.எம். விசயத்தில் எல்லாமே தனியாரிடம் உள்ளதால், யார் பொறுப்பு என்பதே தெரியாத நிலைதான் உள்ளது. 

""ஏழு ஆண்டுகளுக்கு முன்புவரை, வங்கி ஏ.டி.எம். மையங்கள் முழுவதும், அந்தந்த வங்கிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.  இப்போது, ஏடிஎம்-ல் பணம் போடுவது, பாதுகாப்பது, ஏன் அண்மை யில் ஏ.டி.எம். மையத்தை நிறுவும் பணியையே தனியாரிடம் தந்து விட்டார்கள். தினசரி 3 ஷிப்ட், ஒரு காவலாளிக்கு ரூ.10ஆயிரம் வரை என தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, அதில் பாதியைத்தான் காவலாளிகளுக்குத் தருகின்றன. பொதுத்துறை வங்கிகளிலும் இந்த நிலைமைதான். ஒவ்வொரு கிளைக்கும் ஒரு ஏ.டி.எம். திறக்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் வைக்கப்படும் மையங்களுக்கு, உரிய பாதுகாப்பு மட்டும் அளிக்காவிட்டால் எப்படி? நாட்டில்உள்ள 80 ஆயிரம் வங்கிக்கிளைகளில், 24 ஆயிரம் வங்கிக் கிளைகள்தான், கிராமங்களில் உள்ளன. ஆனால், 6 லட்சத்து 32 ஆயிரம் கிராமங் கள் இந்தியாவில் இருக்கின்றன. அனைத்து தரப்பினருக்கும்  சேவை செய்யவே வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. ஆனால், இப்போது வங்கி நிர்வாகங்கள் லாபத்தை மட்டுமே பார்க்கின்றன. மேலும், வேலையின்மை போன்ற பிரச்சினைகளால், சமுதாயம் கிரிமினல்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. எனவே, ஏ.டி.எம். பணிகளை பழையபடி வங்கிகளிடமே தரவேண்டும். இதன் மூலம், எந்த பிரச்சினைக்கும் அவர்களைப் பொறுப்பேற்க வைக்க முடியும்; மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்'' என்கிறார், இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனத்தின் தமிழகப் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், ஆதங்கத்துடன். மக்களைக் காப்பதுதானே, அரசாங்கத்தின் கடமையாக இருக்கமுடியும்!      

ad

ad