புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013

 பொதுநலவாயத்தின் உதவியுடன் சித்திரவதை குறித்தே விசாரணை; மனித உரிமை ஆணைக்குழு கூறுகிறது
சித்திரவதைகள் தொடர்பில் மாத்திரமே பொதுநலவாயத்தின் உதவிகளைப் பெற்று  விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களுள் ஒருவரான இ.ஆனந்தராஜா யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.

 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவில் சமூக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இலங்கையில், இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள்  தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பொதுநலவாய அமைப்பின் தொழில்நுட்ப உதவிகளைப்  பெற்று விசாரணைகளை முன்னெடுக்கப்படப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. 
 
இது தொடர்பில் ஆணையாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது இதற்குப் பதிலளித்த அவர்,  அது தவறு. சித்திரவதைகள் தொடர்பில் மாத்திரமே விசாரணைகள் முன்னெடுக்கவுள்ளோம். 
 
அவை எந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற சித்திரவதைகள்  என்பது குறித்தும் தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பிலா என்பது தொடர்பிலும் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
 
அடுத்த மாத முதல் வாரப் பகுதியில் பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகள்  இலங்கை வரவுள்ளனர். இதன்போதே மேற்படி விடயங்கள் தீர்மானிக்கப்படும் - என்றார்.

ad

ad