புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013

சர்வதேச விசாரணை தொடர்பில் பேச கமரூன்கூட்டமைப்புக்கு அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை லண்டனுக்கு வந்து வடக்கில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்தித்த போதே பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று பிரித்தானியா செல்ல உள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள சர்வதேச விசாரணை தொடர்பான யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே கமரூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய பிரதமரை சந்தித்த பின்னர், கூட்டமைப்பு இந்தியாவுக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
பிரிட்டன் பிரதமர் கூட்டமைப்பினருக்கு அழைப்பு
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு லண்டன் விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு நிலைமைகள் குறித்து விவாதம் நடாத்த இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்த போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் லண்டன் விஜயம் செய்ய உள்ளனர்.
இது வடக்கில் தனி இராச்சியம் அமைக்கும் ஓர் முயற்சியாக கருதப்பட வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கமரூனை சந்திக்கும் பிரதிநிதிகள் அதன் பின்னர் இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

ad

ad