30 டிச., 2013

2014 ஆம் ஆண்டுக்கான ராசி பலன்கள் 

மேஷம் - இந்த வருடம் உங்களுக்கு யோக வருடம். ஜென்மத்தில் கேதுவும் மூன்றாம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள். சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய், சப்தமத்தில் சனி, ராகு. பாக்கியத்தில் சூரியன், புதன், சந்திரன். 10-ல் சுக்கிரன். ஜென்மத்தில் உள்ள கேதுவை செவ்வாய், தன் பார்வையால் அடக்கி விடுகிறார். சொத்துக்கள் வந்து அமையும். வீடு, மனை வாங்கும்
யோகம் தரும். திருமண வாய்ப்பு கூடி வரும். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் வரும். குடும்பாதிபதி 10-ல் இருப்பதால், பொதுவாக குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 6-ல் செவ்வாய் இருப்பதால், வீண் வார்த்தை – வீண் விவகாரம் தூர தள்ளவும். சில நேரங்களில் மருத்துவ செலவு ஏற்படலாம். பொதுவாக இந்த வருடம் யோக வருடம். நன்மைகள் தேடி வரும். 

ரிஷபம் – இந்த வருடம் உங்களுக்கு தனலாப வருடம். விரயத்தில் கேது. தன ஸ்தானத்தில் குரு. பஞ்சமத்தில் செவ்வாய். 6-ல் சனி, ராகு, அஷ்டமத்தில் சூரியன், புதன், சந்திரன். பாக்கியத்தில் சுக்கிரன். லாபாதிபதி குரு 2-ல் இருப்பதால் தனவரவு தேடி வரும். 8-ம் இடத்தில், 2,3,4,5-க்குரியவர்களின் சேர்க்கையால் நினைத்தது நடக்கும். தனகாரகன், கீர்த்திகாரன், சுகாதிபதி, பஞ்சமாதிபதி சேர்க்கை அருமை. அவை லாபாதிபதி குருவின் பார்வை பெறுகிறது. உங்கள் வாழ்க்கையே பெருமைப்பட போகிறது. தொழில்துறை பெருகும். குடும்பம் அமையும். புத்திர பாக்கியம் வாய்க்கும். வழக்கு இருப்பின் வெற்றி பெறும். வெளிநாடு உத்தியோகம் கிடைக்கும். வண்டி, வாகனத்தில் மட்டும் நிதானம் தேவை. பொன்னான வருடம்.

மிதுனம்– இந்த வருடம் நீங்கள் எதிர்பார்த்தது கைக்கு வரும். ஜென்மத்தில் குரு, சுகஸ்தானத்தில் செவ்வாய். பஞ்சமத்தில் சனி, ராகு. சப்தமத்தில் புதன், சூரியன், சந்திரன். அஷ்டமத்தில் சுக்கிரன். லாபத்தில் கேது. வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு என்பார்கள். ஆனால் உங்கள் விஷயத்தில் உங்களை எதிர்த்தவர்கள்தான் வனவாசம் போவார்கள். காரணம் 3-க்குரிய சூரியன் கீர்த்தியை உண்டாக்கும். வேலை வாய்ப்பு தேடி வரும். நசிந்த தொழில் புத்துயிர் பெறும். நண்பர்கள் உதவி வீடு தேடி வரும். 8-ல் சுக்கிரன் இருப்பதால் திருமண விவகாரம் மட்டும் யோசித்து நிதானித்து செயல்படவேண்டும். 11-ல் கேது புண்ணியஸ்தலம் செல்லும் பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்து விஷயத்தில் வழக்கு இருப்பின் வெற்றி பெறும். சாதனை செய்யும் வருடம் இது. 

கடகம் – இந்த வருடம் தொட்டது துலங்கும். கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய், சுகஸ்தானத்தில் சனி, ராகு, ரோகஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன். சப்தமத்தில் சுக்கிரன், 10-ல் கேது, சுகஸ்தானத்தை குரு பார்வை. வாகனம், வீடு, தோட்டம் அமையும். நோய்நொடி நீங்கும். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். புத்திர – புத்திரிகளுக்கு திருமண பாக்கியம் தேடி வரும். விரோதங்கள் தீரும். கடன் தொல்லை அகலும். வேலைவாய்ப்பு அமையும். மனைவியால் லாபம் உண்டு. ஜாமீன் விவகாரம் வேண்டாம். வராத கடன் வசூல் ஆகும். கல்வி தடையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீண் விரயங்களும் வரலாம். அதை சுப விரயமாக மாற்றுங்கள். பொதுவாக இந்த வருடம் உங்களுக்கு மண்ணும் பொன்னாகும் வருடம்.

சிம்மம்- இந்த வருடம் உங்களுக்கு சாதனை தரும் ஆண்டு எனலாம். தன ஸ்தானத்தில் செவ்வாய், 3-ல் சனி, ராகு, பஞ்சமத்தில் சூரியன், புதன், சந்திரன். சத்ரு ஸ்தானத்தில் சுக்கிரன். பாக்கியத்தில் கேது, லாபத்தில் குரு. தன ஸ்தானத்தில் பாக்கியாதிபதி இருப்பதால் பணத்திற்கு பஞ்சம் இல்லை. புகழ், கீர்த்தியை இராகு தந்திடுவான். பூர்வ புண்ணியத்தை குரு பார்ப்பதால் அரசாங்க ஆதரவு, மக்கள் செல்வாக்கு பெறலாம். பொதுவாக குடும்பஸ்தர்கள், தன் குடும்பத்தினர் போற்றும்படியான செயல்களை செய்வார்கள். கல்வி, தொழில், உத்தியோகம் நன்கு அமையும். அஷ்டமத்தை செவ்வாய் பார்ப்பதால் உணர்ச்சி, முன்கோபம் கட்டுப்படுத்த வேண்டும். வாக்கு ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் சொல்லும் சொல், மந்திர சொல்லாக இருக்கும். உங்கள் பேச்சு மற்றவர்களை கட்டுப்படுத்தும். திருமண யோக வருடம்.

கன்னி - இந்த வருடம் ஏற்றம்-இறக்கம் கலந்த ஆண்டாக இருக்கும். ஜென்ம செவ்வாய், தன ஸ்தானத்தில் சனி, ராகு. சுகஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன். பஞ்சமத்தில் சுக்கிரன். அஷ்டமத்தில் கேது 10-ல் குருவும் அமைந்திருக்கிறார்கள். உங்களை ஜென்ம செவ்வாயும், ஏழரை சனியும் சற்று சீண்டிக்கொண்டேதான் இருக்கும். குடும்பத்தில் தேவை இல்லா செலவு தரும். 7-ம் இடத்தை செவ்வாய் பார்வை செய்வதால், தடைபட்ட திருமணம் நடக்கும். கல்வி தடை நீங்கும். உயர் கல்வி அமையும். கடன் பிரச்னை தலை தூக்கும். வழக்கு விஷயத்தில் கவனம் தேவை. நண்பனும் விரோதியாவான். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் துறைக்காக கடன் வாங்க வேண்டி இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. ஆனாலும் குருவின் பார்வையால் குடும்ப குழப்பங்கள் தீரும். வீடு. மனை அமையும். நிதானமே பிரதானம். 

துலாம் - இந்த புத்தாண்டு நன்மை பெருகும் ஆண்டு எனலாம். ஜென்ம சனி, ஜென்ம ராகு, கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன். சுகஸ்தானத்தில் சுக்கிரன், சப்தமத்தில் கேது, பாக்கியத்தில் குரு, விரயத்தில் செவ்வாய். ஜென்ம சனி, தேவை இல்லா பிரச்னைகளை இழுத்து வர செய்யும். குரு அருளால் தொல்லைகள் தீர வழி பிறக்கும். சொத்து சுகம் தேடி வரும். செய்யும் செயலுக்கு புகழ் கிடைக்கும். வீடு, வாகனம் அமையும். கல்வி மேன்மை பெறும். நண்பர்கள் வசம் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் பாக்கியம் அமையும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட சில சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். 12, 8-ம் வீட்டின் அமைப்பின்படி நிதானம், பொறுமையே அவசியம். இதுவே வெற்றி தரும். 

விருச்சிகம் - இந்த ஆங்கில புத்தாண்டு உங்களுக்கு நல்லதொரு புத்தாண்டு. தனஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன். கீர்த்தி ஸ்தானத்தில் சுக்கிரன். 6-ல் கேது, அஷ்டமத்தில் குரு. லாபத்தில் செவ்வாய். விரயத்தில் சனி, ராகு. தன லாபம் தேடி வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள், திருமண விஷயம் நடக்கும். குழந்தை பேறு உண்டாகும். கடன் தொல்லை தீரும். நில-புலன் வசதி அமையும். விவசாயத்தால் லாபம் உண்டு. ரியல் எஸ்டேட் வியபாரத்தில் யோகம் உண்டு. வேலை வாய்ப்பு தேடி வரும். விரயங்களும் உண்டு. வழக்கு விஷயத்தில், ஜாமீன் விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் உடல்நலனிலும், குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலனிலும் கவனம் தேவை. கண்ட கனவு பலிக்கும். பயணங்கள் அதிகம் கொடுக்கும். பொதுவாக இந்த வருடம் நன்மை தரும் ஆண்டாக இருக்கும். 

தனுசு - இந்த ஆங்கில புத்தாண்டு முதல் நீங்கள் நினைத்தது நடக்கும். ஜென்மத்தில் சூரியன், புதன், சந்திரன். தனஸ்தானத்தில் சுக்கிரன். பஞ்சமத்தில் கேது, சப்தமத்தில் குரு. பத்தில் செவ்வாய். லாபத்தில் சனி, இராகு. கேட்கவா வேண்டும்? விரும்பியதெல்லாம் உடனே கிடைக்கும். சொன்னது பலிக்கும். குடும்பத்திற்கு வேண்டிய பொருட்கள் வந்து சேரும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் தொல்லை நீங்கும். திருமண தடை அகலும். வெளிநாடு பயணம், வேலை வாய்ப்பு, தொழில்துறை முன்னெற்றம் உண்டு. நண்பர்கள் உதவி கிடைக்கும். எதிர்பாரா தனலாபம் அமையும். பஞ்சம கேதுதான் உங்களுக்கு வேகதடை. கௌரவம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபம், முரட்டு தைரியத்தால் பிரச்னை தலை தூக்கும். இந்த வருடம் உங்களை பெருமைப்படுத்த வாய்ப்பு உண்டு. அருமையான வருடம்.

மகரம் – இந்த ஆங்கில புத்தாண்டு லாபம், நஷ்டம் கலந்து வரும். ஜென்மத்தில் சுக்கிரன், சுகஸ்தானத்தில் கேது, 6-ல் குரு, பாக்கியத்தில் செவ்வாய். 10-ம் இடத்தில் சனி, ராகு. விரயத்தில் சூரியன், புதன் சந்திரன். உடல்நலனில் கவனம் தேவை. கல்வியிலும் கவனம் தேவை. வாகன விஷயத்தில் நிதானம் தேவை. பாக்கிய செவ்வாய் வீடு, மனை அமையச் செய்யும். தொழில்துறை புத்துயிர் பெறும். அதேசமயம் சில விரயங்கள் ஆகும். அதில் சுபவிரயமும் இருக்கும். குடும்பத்தினர் வசம் அன்பை காட்டுங்கள். தேவை இல்லா பிரச்னைகளில் தலையிடாதீர்கள். நிதானமாக செயலாற்ற வேண்டும். கடன் பிரச்னை தீர வழி பிறக்கும். அரசாங்கத்தால் நன்மை வரலாம். பொன், பொருள் விரயம் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய திட்டங்கள் நன்மை தரும். நிதானம், மௌனம்தான் வெற்றியை கொடுக்கும். 

கும்பம் - இந்த புது வருடம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் ஆண்டாக இருக்கும். கீர்த்தி ஸ்தானத்தில் கேது, பஞ்சமத்தில் குரு, அஷ்டமத்தில் செவ்வாய், பாக்கியத்தில் சனி, ராகு, லாபத்தில் புதன், சூரியன், சந்திரன், 12-ம் இடத்தில் சுக்கிரன். இந்த கிரக நிலவரப்படி யோகம் அதிகம் உண்டு. செய்யும் செயல் புகழ் பாடும். நினைத்தது நடக்கும். தனலாபம், வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு, திருமண யோகத்தை 3-க்குக்குரிய செவ்வாய், 8-ல் அமர்ந்து வெற்றி கொடுப்பார். வழக்குகள் தீரும். விரோதியும் அடிபணிவர். வெளிநாடு வியாபாரம் கைமேல் பலன் கொடுக்கும். உயர்கல்வியும் அமையும். பெற்றோர் ஆசியால் அதிக சொத்து சுகம் கிடைக்கும். கேளிக்கை, சுற்றுலா பயணங்களுக்கு குறை இல்லை. பொதுவாக இந்த வருடம் எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக இருக்கும். 

மீனம் - இந்த ஆங்கில புத்தாண்டு நல்லதொரு ஆண்டாக அமையும். வெற்றி லஷ்மி உங்கள் கையில் அமர்வாள். யோகமான சந்தர்ப்பங்கள் அமையும். தொட்டதெல்லாம் வெற்றி. தனஸ்தானத்தில் கேது இருந்தாலும், சுகஸ்தானத்தில் குரு, சப்தமத்தில் செவ்வாய், 8-ல் சனி, ராகு, 10ம் இடத்தில் சூரியன் புதன், சந்திரன், லாபத்தில் சுக்கிரன். ஜீவனஸ்தானத்தில் கூட்டு கிரகங்கள் பெரும் யோகத்தை கொடுப்பார்கள். வீடு, வாகனம், தோட்டம் இத்தனையும் அமையும். பொன், பொருள் கை மேல் தேடி வரும். எண்ணங்கள் ஈடேறும். திட்டங்கள் வெற்றி பெறும். தொழில்துறை, உத்தியோகம் நன்கு அமையும். குருவின் கருணையால் உடல்நலம் பெறும். புத்திர புத்திரிகளுக்கு திருமண வாழ்க்கை கொடுக்கும். சோர்வு அகலும். மனக்கவலை தீரும். விரோதி அடி பணிவர். 
பொதுவாக யோகத்தை தரும் இந்த ஆங்கில புத்தாண்டு....! வாழ்