30 டிச., 2013

தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த இளைஞர்கள் விசேட உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
34 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான பயிற்சி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த பல இலங்கை இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், இவர்கள் குறித்த புலி ஆதரவு குழுக்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் இந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.