புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2013

பிரபல பார்முலா சாம்பியன் மைக்கேல் ஷூமாக்கர் விபத்தில் காயம்கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஷூமாக்கர் கோமா நிலையில் உள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.

ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமாக்கர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானார்.
பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பாறை மீது மோதியதில் அவருடைய தலையில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக மெரிபோல் ரெசார்ட் இயக்குநர் கிறிஸ்டோபே கூறுகையில்,

"ஷூமாக்கர் விபத்துக் குள்ளானபோது ஹெல்மெட் அணிந்திருந்தார். அவருடைய காயம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. தலையில் அடிபட்டிருக்கலாம். ஆனால் கவலைப்படும்படியில்லை" என்றார்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஷூமாக்கர் கோமா நிலையில் உள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டு பெனிட்டன் அணியுடன் தனது பார்முலா கார் பந்தயத்தைத் துவக்கிய மைக்கேல் ஷூமாக்கர் 1994-95 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இத்தாலியின் பெராரி அணிக்காக பந்தயங்களில் ஈடுபட்டபோது தொடர்ந்து 2000 வது ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தார்.
பின்னர் மீண்டும் 2010 ஆம் ஆண்டில் மெர்சிடிஸ் அணிக்காக அவர் போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பங்கேற்றபோதும் ஒரேஒரு முறைதான் அவரால் முதல் மூன்று இடங்களுக்குள் முடிக்கமுடிந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டில் அவர் இந்தப் பந்தயங்களிலிருந்து ஒய்வு பெற்றார்.

ad

ad