30 டிச., 2013

வவுனியாவில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்ணின் வீடு விசமிகளால் தீக்கிரை 

வவுனியா சுந்தரப்புரப் பகுதியில் இராணுவத்தில் இணைந்த பெண்ணொருவரின் வீடு நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
vauneja
அண்மையில் குறித்த குடும்பத்தை சேர்ந்த யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். இந்த
நிலையில் குறித்த பெண்ணின் தாயும் சகோதரர்களும் வசித்து வருகின்ற வீடே தீ மூட்டப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் இடம்பெற்ற வேளை தாயார் அவரது மகன் வீட்டிற்கு சென்றிருந்ததுடன் ஏனையவர்கள் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர். இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் வீட்டில் காணப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதனையடுத்து, பாதிக்ப்பட்டவர்கள் தங்குவதற்கு வவுனியா மாவட்ட செயலகத்தினால் தற்காலிக கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் சமைத்த உணவும் வழங்கப்படுகிறது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.vaavuniya_house_001vaavuniya_house_002vaavuniya_house_003