புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2013

விக்னேஸ்வரன் அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! சம்பந்தனின் பிடிவாதமே தடுக்கின்றது!- அமைச்சர் வாசுதேவ
வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்னேஸ்­வரன் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட தயா­ரா­கவே உள்ளார். ஆனால் சம்­பந்­தனின் பிடி­வா­தமே விக்­னேஸ்­வ­ரனை தடுக்­கின்­றது என்று அமைச்­ச­ர் வாசு­தேவ நாண­ய­க்கார தெரி­வித்தார்.
இளைஞர் பாரா­ளு­மன்­றத்தின் ஐந்­தா­வது அமர்வு நேற்று மகரகம இளைஞர் மன்றத்தில் இடம்­பெற்­றது. இதில் அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச அர­சாங்கம் இன்று அனைத்துக் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஜன­நா­யக ஆட்­சிக்­கான அடித்­த­ளத்­தினை இட்­டுள்­ளது. முஸ்லிம் காங்­கிரஸ், மலை­யக கட்­சிகள் மற்றும் வடக்கில் முக்­கிய தலை­வர்­க­ளையும் அர­சாங்­கத்தில் இணைத்து நாட்டின் அனைத்து இனத்­த­வர்­க­ளுக்­கான ஆட்­சி­யி­னையும் நடத்தி வரு­கின்­றது. ஆனால் இன்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் மட்­டுமே தமது பிடி­வா­தத்தில் பிரி­வி­னைக்­கான உரி­மை­களை கோரி நிற்­கின்­றனர்.
வட மாகாண சபை முத­ல­மைச்சர் சீ.வி.விக்னேஸ்­வரன் அர­சாங்­கத்­துடன் இணங்கி வட மாகாண செயற்­பா­டு­களை நடத்­தவே விரும்­பு­கின்றார். வடக்­கிற்­கான அபி­வி­ருத்­தி­களை தமிழ் மக்­களின் உரி­மை­களை பெற்று அமை­தி­யாக ஆட்சி நடத்த வேண்­டு­மென்­பதே வட மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் அவா­வாகும். எனினும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் பிடி­வா­தமும் அர­சாங்கத்துடன் முரண்படுவதன் காரணத்தினாலேயே விக்­­னேஸ்­வரன் எம்­முடன் இணைந்து செயற்­பட முடி­யா­துள்­ளது.
இன்று அர­சாங்­கத்­திற்கு இருக்கும் பெரிய சிக்கல் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே ஆகும். அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்வு காண்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு விரும்­ப­வில்லை என்­பதே உண்மை. சர்­வ­தே­சத்­தையும் தமிழ் மக்­க­ளையும் தூண்டி விட்டு தனி தமிழ் ஈழத்­தினை உரு­வாக்­கவே சம்­பந்தன் நினைக்­கின்றார்.
அதேபோல் ஜனா­தி­ப­திக்கு இருக்கும் மிகக் கடி­ன­மான விடயம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை அர­சாங்­கத்­துடன் இணைப்­ப­தே­யாகும். பிரி­வி­னை­வாதக் கொள்­கையில் எதற்கும் பிடி­கொ­டுக்­காத தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை அர­சாங்­கத்தின் கொள்­கை­க­ளுக்குள் கொண்டு வந்தால் அதுவே ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கும் நாட்டின் ஜன­நா­யக முன்­னேற்­றத்­திற்கும் கிடைக்கும் மிகப் பெரிய வெற்­றி­யாகும்.
அத்­தோடு சம்­பந்தன் ஜனா­தி­ப­தி­யோடு பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு இணங்கி அர­சுடன் இணைந்து செயற்­பட விரும்­பினால் அத்­தோடு சர்­வ­தேச பிரச்­சி­னை­க­ளுக்கும் இலங்­கையின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
அன்று பிரித்­தா­னிய ஆதிக்­கத்தின் கீழ் இலங்கை அடக்­கப்­பட்­டாலும் இலங்­கைக்குள் பிரி­வி­னை­வா­த­மென்ற ஒன்று காணப்­ப­ட­வில்லை. கோட்டை இராச்­சியம், யாழ்ப்­பாண இராச்­சியம், கண்டி இராச்­சி­ய­மென தனித்து காணப்­பட்ட போதும் அனைத்து மக்­களும் விடு­த­லை­யென்ற ஓர் கொள்­கையில் போரா­டினர். ஆனால் இன்று வெள்­ளை­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் கிடைத்தும் எமது இனங்­க­ளுக்­கி­டையே பிரி­வினை யுத்தம் ஏற்­பட்டு விட்­டது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­கள் யதார்த்­த­மா­னவை அல்ல. தனி இராச்­சி­யத்­தினை கோரி சுய ஆட்­சிக்­கான அடித்­த­ளத்­தி­னையே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு விரும்­பு­கின்­றது. இதனை எந்த அர­சாங்கம் வந்­தாலும் நிறை­வேற்ற முடி­யா­தென்­பதை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனும் ஏனை­ய­வர்­களும் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த இனத்­த­வரும் யாருக்கும் அடி­மை­க­ளில்லை என்­பதை ஜனா­தி­பதி ஏற்றுக் கொண்­ட­த­னா­லேயே வட மாகாண சபைத் தேர்­தலை ஜனா­தி­பதி நடத்­தினார். வடக்குத் தேர்­தலில் கூட்­ட­மைப்பு வெற்றி பெறு­மென்­பது அர­சாங்­கத்­திற்கு நன்­றா­கவே தெரியும்.
எனினும் தெற்கைப் போன்று சுதந்­தி­ர­மாக செயற்­ப­டக்­கூ­டிய மாகா­ண­மாக வடக்கும் இருக்க வேண்டும். வடக்கு மக்களுக்கென சுதந்திரமாக செயற்படவும் தமது விருப்பங்களை நிறைவேற்றும் உறுப்பினர்கள் வடக்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.
எனவே நிறைவேறாத கொள்கைகளுக்காக கூட்டமைப்பு போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுத்து ஜனநாயக ரீதியிலான ஆட்சியினை நடத்த இணங்க வேண்டும். அதுவே இன்றைய கால சூழ் நிலையின் தேவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad