30 டிச., 2013

காரைதீவு பிரதேச சபை TNA இராசையா ஆயுதக் குழுவுடன் உறவு! வெட்கத்தில் மக்கள்

காரைதீவு பிரதேச சபை வரவு செலவுத்திட்டத்தை தாம் ஏன் தோற்கடித்தோம் என்பதை விளக்கி காரைதீவு பிரதேசசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான க.தட்சணாமூர்த்தி சு.பாஸ்கரன் யோ.கோபிகாந்த் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


அந்த அறிக்கையின் விபரம்
காரைதீவின் தவிசாளராக இருந்த செ.இராசையா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது பொது மக்களின் கருத்துக்களோ நிதிக்குழவின் உறுப்பினர்களின் ஆலோசனைகளோ உறுப்பினர்களின் கருத்துக்களோ கேட்காமல் சமர்ப்பிக்கப்பட்ட பொதுமக்களின் நலனில் சற்றும் அக்கறையில்லாமல் தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்டமாகும்.
தவிசாளர் மீது 22 குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அவரின் தமிழ்த்தேசியத்திற்கெதிரான 2 குற்றச் சாட்டுக்களை முன்வைத்துமே இவரை உடனடியாக பதவியிலிருந்து விலக்கவேண்டுமென காரைதீவின் பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் பேரிலும் இவரது சர்வாதிகார போக்கினையும் தமிழ்தேசிய விரோதச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாகவுமே வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
தமிழ்தேசியத்திற்கு எதிராகவோ வேறு விடயங்களுக்காகவோ இல்லை என்பதனையும் கடந்த 23.12.2013 அன்று இடம்பெற்ற காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் உபதவிசாளர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை.சேனாதிராஜா மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உபதலைவருமான பொன். செல்வராசா மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன். சீ.யோகேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் மாகாணசபை உறுப்பினர் . மு.இராஜேஸ்வரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் முன்னிலையில் தெரிவித்தோம்.
தவிசாளருக்கெதிராக அவரின் சர்வாதிகாரப்போக்கினையும் இதனால் கட்சியின் பால் மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையையும் குறித்தான 22 குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம் அத்துடன் தமிழ்தேசிய விரோதச்செயலான 2 குற்றச்சாட்டுக்களையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அவையாவன
01. அண்மையில் மாற்றுக் குழுக்களினால் தோற்கடிக்கப்பட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நாவிதன்வெளிப் பிரதேச சபையினை தோற்கடிப்பதற்கு திரைமறைவில் நின்றுழைத்தவர் இந்தத் தவிசாளர். (சான்று: 01.12.2013 சுடர்ஓளி பத்திரிகை- இணைக்கப்பட்டுள்ளது).
02. சந்திரகாந்தன் சந்திரநேரு (முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களினால் வழக்காடப்பட்டு நீதின்றில் குற்றவாளியாக கருதப்பட்ட துணைஆயுதக்குழுவின் உறுப்பினர் ஒருவரை தானாக முன்வந்து தான் சரீரப்பிணையெடுத்தமை.
இவ்வாறான தமிழ்த்தேசியத்திற்கு நேரடியாக துரோகமிழைத்தவரை தான் நாம் இவ்வாறு தோற்கடித்தோமே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அல்ல. இதனை பிழைஎனக் கூறுவோர் நிச்சயமாக ஓர் தமிழ் உணர்வாளனாக இருக்க முடியாது. இவ்வாறான தமிழ்த்தேசியத்திற்கு துரோகமிழைத்துவிட்டு தமிழ்த்தேசியத்துடன் ஒட்டி உறவாடும் அனைவருக்கும் ஓர் பாடமாகவேண்டுமென்பதற்காகவே நாம் கட்சியின் இணக்கப்பாட்டினை மீறி செயற்பட்டோமே தவிர பதவியாசைகளுக்கு அல்ல.
மேலும் தவிசாளர் இராஜனாமா செய்த போது தான் முதலாவது தடவைதோற்கடித்தபின்பே இராஜினாமா செய்ததாக குறிப்பிட்டிருந்தமையானது முற்றாகத் தவறு இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்ட பின்பே தனது இராஜினாவை கட்சிச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறான கடிதத்தினை தான் அனுப்பி கட்சியில் நற்பெயரை எடுக்கவும் தான் செய்த பிழைகளை மூடிமறைக்கவுமே இவ்வாறு செயற்பட்டுள்ளர்.