புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலம் உண்மை;நீதிவெல்லும் :
பேரறிவாளின் தாய் நம்பிக்கை பேச்சு 
 மரண தண்டைக்கு எதிரான வரலாற்று பதிவான உயிர்வலி (சக்கியடிக்கும் சத்தம்) என்ற ஆவணப்பட வெளியீட்டுவிழா நிகழ்ச்சி  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்இனஉணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில்
நடைபெற்றது. ஆவணப்படத்தை திருவாரூர் மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் ரயில் பாஸ்கர் வெளியிட மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அனையாவிளக்கு அய்யப்பன் பெற்றுக்கொண்டார். தமிழ்இனஉணர்வாளர் பா.வெங்கட்ராமன் தலைமையேற்க திராவிடர் விடுதலை க்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு விழாவை ஒருங்கிணைக்க மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சேரன்குளம் செந்தில்குமார் வரவேற்ற


            முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசியபோது,
            மரணதண்டனை ஒழிப்பு மற்றும் எதிர்பில் நாங்கள் குடும்பத்துடன் வீதியில் இறங்கி போராடிவருகிறோம். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்காக மட்டும் அல்ல எங்கள் போராட்டம். ஒட்டு மொத்த நாட்டிலும் மரண தண்டனை இருக்ககூடாது என வலியுறுத்தி அது முற்றிலும் ஒழிக்கப்படுவதை பேராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கபோவதில்லை.


            செய்யாத குற்றத்திற்காக 22 ஆண்டுகள் சித்ரவதைகள், இன்னல்கள், தனிமை கொடுமை என பேரறிவாளன் தனது இளமை காலத்தை தொலைத்துவிட்டான். பேரறிவாளன் வாக்கு மூலத்தை மாற்றி எழுதியதற்காக சிபிஐ காவல்துறை அதிகாரி தியாகராஜனை தண்டிக்க வேண்டும் என்று சிலர் பேசி வருவதை நான் ஏற்கவில்லை. இக்கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரிகள் கார்த்திகேயன், ரகோத்தமன் ஆகியோர் மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்களை இப்போது பதிவு செய்து வருகின்றனர். அவர்களின் கருத்துக்களால் ஆறுதல் பெறுவதுடன் உண்மையும் நேர்மையும் ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.


            ராஜீவ்காந்தி கொலைவழக்கு விசாரனை அதிகாரி தியாகராஜன் வெளியிட்டுள்ள கருத்தால் எனது மகனுக்கும் ராஜீவ்காந்தி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை 23 ஆண்டுகள் சிறை வாசம் முடிந்த பின்னர் தெரியவந்துள்ளது. பேறிவாளன் உள்ளிட் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி முதலமைச்சர் ஜெயலலிதா தூக்கு தண்டனை நிறுத்திவைக்க காரணமாக இருந்தார். மேலும்  மூன்று பேரையும் அவர் விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் நாடுமுழுவதும் தூக்கு தண்டனை பெற்ற பலர் அப்பாவிகளாக உள்ளனர். அவர்களிடம் மறு விசாரனை செய்து தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும். மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காக என் வாழ்நாள் முழுவதும் போராடுவதற்கு முடிவு செய்துள்ளேன். நீதி ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது என பேசினார். வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
                                                                                    - இரா.பகத்சிங்

ad

ad