புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013


           ""ஹலோ தலைவரே... தேய்மானம் ஜாஸ்தியா கிட்டே இருக்கே… தே.மு.தி.க.விலே?''

""ஜெ. தரப்பில் மர்மப் புன்னகை வெளிப்படுதாமே
?''nakeeran

""எனக்கும் தகவல் வந்ததுங்க தலைவரே.. தே.மு.தி.க அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தன்னோட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு, அரசியலி லிருந்து ரிடையர்டாகிறதா அறிவிக்கிறாரு. உடனே சபாநாயகர்கிட்டேயும் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறாரு. பொதுவா, சட்டமன்றக் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் சபாநாயகர் ரெகுலரா தலைமைச் செயலகத்துக்கு வரும் வழக்கம் கிடையாது. ஆனா, அன்னைக்கு அவர் ரெடியா இருக்காரு. பண்ருட்டியார் தன்னோட ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பத்தாவது நிமிடத்தில் அதை ஏற்றுக்கிட்டதா சபாநாயகர்கிட்டே இருந்து அறிவிப்பு வருது. இத்தனை ஸ்பீடா எல்லாம் நடந்ததைப் பார்த்து தே.மு.தி.க தரப்புக்கு ஷாக். அ.தி.மு.க தரப்புக்கு ஆச்சரியம்.'' 

""பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி. மு.க.வில் சேர்ந்திடுவாருன்னு செய்தி வருதே.. என்ன சொல்றாங்க அ.தி.மு.க தரப்பில்?''

""அவங்களைக் கேட்டால், அவரு எம்.எல்.ஏ. ஆனதிலிருந்தே எங்க கட்சிக்கார ராத்தானே இருக்காருன்னு அர்த்தபுஷ்டி யோடு சிரிக்கிறாங்க. ஆலந்தூர் தொகுதி வாசிகள் சில பேர் பண்ருட்டியாருக்கு போன் பண்ணி, இந்த முடிவை கொஞ்சம் முன்னாடி எடுத்திருந்தா, ஏற்காடு இடைத்தேர்தல் போல எங்களுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாயிலிருந்து மூவாயிரம் வரைக்கும் கிடைச் சிருக்கும். ஆனா, இப்ப எம்.பி. தேர்தலோடு சேர்த்து ஆலந்தூருக்கு இடைத்தேர்தல் நடக்கும். எங்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் இருக்காதுன்னு சொல்லியிருக்காங்க. பண்ருட்டியார் இன்றைய அரசியல் போக்கை நினைச்சி நொந்துட்டாராம்.'' 

""இதையெல்லாம் ஜெ. எப்படி பார்க்கிறாராம்?''

""அவரைப் பொறுத்தவரைக்கும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரா விஜயகாந்த் இருக்கக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் அவரோட கட்சிக்கு எந்த செல்வாக்கும் இருக்கக்கூடாது. அதற்கேற்ற மாதிரி ஏற்கனவே 7 எம்.எல்.ஏக்களை அ.தி.மு.க. ஆதரவாளர்களா மாற்றியாச்சி. இப்ப பண்ருட்டியும் ராஜினாமா பண்ணிட்டாரு. தே.மு.தி.க.வின் 29 எம்.எல்.ஏக்களில் 8 மைனஸ். இன்னும் 2 பேர் வெளி யேறத் தயாரா இருக்காங்களாம். ஆக, 19 எம்.எல்.ஏக்கள்தான் தே.மு.தி.க.வில் இருப்பாங்க. எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க. இழந்து, தி.மு.க.தான் சட்டமன்றத்தில் பெரிய எதிர்க் கட்சியா இருக்கும். ஏற்கனவே அதிருப்தியில் ஒதுங்கியவங்க, இனி அதிருப்தியில் விலகப்போறவங்க எல்லோரையும் பண்ருட்டி பாணி யில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவைத்து, 10 தொகுதிகளிலும் மொத்தமா இடைத்தேர்தல் நடத்தி ஜெயிக்கலாம்ங்கிற வியூகத்தில் ஜெ. இருக்காராம். ராஜினாமா செய்பவங்களையே அ.தி.மு.க வேட்பாளரா களமிறக்கினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்னு உளவுத்துறைகிட்டே ஜெ. கேட்டி ருப்பதால், அதற்கான கள வேலை களில் உளவுத்துறை சீரியஸா இருக்கு. எம்.பி.தேர்தலோடு 10 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தினால் அலையோடு அலையா ஜெயிச்சிடலாம்ங்கிறதுதான் அவரோட கணக்கு.''

""எம்.பி. தேர்தலுக்கான மூவ்களில் ஆரம்பத்திலிருந்தே ஸ்பீடா இருப்பது அ.தி.மு.க.தான். இப்ப 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தரலாம்னும் ஜெ. அறிவிச்சிட்டாரு. அப்படின்னா கூட்டணிக் கட்சிகளுக்கு அ.தி.மு.க அணியில் சீட் கிடையாதா? தார்மீக ஆதரவு மட்டும்தானா?''



""தலைவரே.. .. டிசம்பர் 19-ந் தேதி அ.தி.மு.க.வோட செயற்குழுவையும் பொதுக்குழுவையும் ஜெ. கூட்டியிருக்கிறார். அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கான சப்ஜெக்ட்டுகளையெல்லாம் அவரே முன்கூட்டி சொல்லிடுவாரு. சரியான வார்த்தைகளைக் கோர்த்து கட்சி நிர்வாகிகள் அந்தத் தீர்மானங்களை ரெடி பண்ணிடு வாங்க. அதுபோல இப்பவும் ரெடியாகிக்கிட்டிருக்குது. அதில் முக்கியமான தீர்மானம், புரட்சித்தலைவி அம்மா மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அறிவிக்கும் கட்சிகளுடன்தான் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும்ங்கிற தீர்மானம்.'' 

""ஓ… அ.தி.மு.க கூட்டணியில் உறுதியா இருக்கிறவங்க கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். அவங்க இதுக்கு ரெடியா?''

""ஜெ.வை தலைமைச் செயலகத்தில் சி.பி.எம். பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் சந்திச்சப்பவே இதைத்தான் ஜெ. வலியுறுத்தி னார். இடதுசாரி முன்னணியினருடன் கலந்து பேசிட்டு சொல்றதா பிரகாஷ் காரத் அப்ப சொல்லியிருக்காரு. இப்ப வரைக்கும் அவர் எதுவும் சொல்லலை. சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளில் உள்ள அகில இந்தியத் தலைவர்கள் சொத்து குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வரும் ஜெ.வை பிரதமர் வேட்பாளரா அறிவிக்கத் தயங்குறாங்க. அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிற சின்ன கட்சிகளில் ஃபார்வார்டு ப்ளாக்கும் அகில இந்திய அளவில் இடது சாரி முன்னணியில்தான் இருக் குது. அதனால அந்தக் கட்சியும் ஓப்பனா அறிவிக்க முடியாது. சரத் குமாரின் ச.ம.க., செ.கு.தமிழரச னின் இந்திய குடியரசு கட்சி, தனியரசுவின் கொங்கு இளைஞர் கட்சி இவையெல்லாம் ஜெ.வை பிரதமர் வேட்பாளரா அறிவிக்க எப்பவுமே ரெடிதான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் பற்றி தா.பாண்டியன் அறிவிச்சிருக்காரு. அதில் கூட்டணி தொடர்பான சகல அம்சங்களும் அலசப்படும்னு தோழர்கள் சொல்றாங்க.'' 

""பல மொழிகள் அறிந்தவரான ஜெ., பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்னு தா.பா ஏற்கனவே டிக்ளேர் பண்ணிட்டாரே!''

""அ.தி.மு.க தரப்பிலும் டிக்ளேர் பண்ணப் போறாங்க. பிப்ரவரி 24-ந் தேதி ஜெ.வின் பிறந்தநாள். அப்ப, அம்மா பிறந்ததே பிரதமராகத்தான்ங்கிற கோஷத்தை முன்வைத்து அ.தி.மு.க. பிரச்சாரத்தைத் தொடங்கப் போகுதாம். அதுக்கு முன்னாடி, ஜனவரி மாதத்தில் தன்னை ஆதரிக்கும் வடமாநில அரசியல் தலைவர்களை ஜெ. நேரில் சந்திக்கும் ப்ளான் போடப்பட்டிருக்குது. வடமாநிலங்களில் ஏற்கனவே நரேந்திரமோடிதான் அடுத்த பிரதமர்ங்கிற ரேஞ்சுக்கு பலமா பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்குது பா.ஜ.க. ஆனாலும், தமிழகத்தில் அதற்கு இன்னும் சரியான கூட்டணி அமையலை.''

""பா.ஜ.க.வுக்கு கூட்டணி சேர்க்கும் வேலையைத்தான் காந்தியவாதியான கதர்ச்சட்டைக்காரர் தமிழருவி மணியன் தீவிரமா மேற்கொண்டிருக்காரே?''

""இப்ப உள்ள நிலைமையில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளை பா.ஜ.க. தலைமையில் மூன்றாவது அணியா உருவாக்கணும்ங்கிற முயற்சிகள் மும்முரமா நடந்துக் கிட்டிருக்குது. ஆனாலும், பா.ஜ.க. தரப்பிலோ அ.தி.மு.கவோடுதான் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டுறாங்க. நரேந்திர மோடி தரப்பிலிருந்து சில பேர் ஜெ. தரப்பில் தொடர்பு கொள்ள முயற்சி செய்துக்கிட்டிருக்காங்க. சீனியர் லீடரான அருண்ஜெட்லியும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்காராம். இலையைக் கெஞ்சுது தாமரை. ஆனா, ஜெ.வோ 19-ந் தேதி கூடும் பொதுக்குழு, அதில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இதில்தான் கவனமா இருக்கிறார்.'' 

""தி.மு.க.வின் கூட்டணி மூவ்மெண்ட் என்ன? பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்கும் மனநிலையில் தி.மு.க. இருப்பதாகச் சொல்லப்படுதேன்னு நிருபர்கள் கேட்டதற்கு, கூட்டணி தொடர்பான தி.மு.க.வின் மனநிலையை உங்ககிட்டே வெளிப்படையா சொல்லமுடியாதுன்னு பதில் சொல்லி யிருக்காரு. அந்தக் கேள்வி-பதிலை அவரோட ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதோடு தி.மு.க.-பா.ஜ.க. கொடிகளை இணைத்து கூட்டணி உருவானதுமாதிரியான தோற்றத்திலேயே போட்டிருந்தாங்களே?''

""பலருக்கும் இதுபற்றி பலவிதமான யூகங்கள் உருவாகி, விவாதங்களும் நடந்துக்கிட்டிருக்குது. பொதுக்குழுவுக்குப் பிறகுதான் கூட்டணி நிலைமைகள் பற்றி முடிவாகும்னு அதே நிருபர்கள் கிட்டே கலைஞர் சொல்லியிருக் காரு. பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பது தொடர்பா கட்சி நிர்வாகிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து கருத்துகள் வந்துக்கிட்டுத்தான் இருக்குது. அதேநேரத்தில் இப்ப தி.மு.க.வோடு இருக்கிற கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., புதிய தமிழகம் இந்தக் கட்சிகளை வச்சிக்கிட்டு எம்.பி. தேர்தலில் வெற்றி பெறமுடியுமாங்கிற கேள்வி யும் ஓடிக்கிட்டிருக்குது. நாடாளு மன்றத்தைக் கணக்கில் வச்சி காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்தால், 2016 சட்டமன்றத் தேர்தலில் நம்மோட கூட்டணி சேர கட்சிகளே இருக் காதுன்னு விவாதிக்கப்பட்டிருக்குது. ஒரு சில சீனியர்கள், இப்போதைக்கு பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்ந் துட்டு, அப்புறமா கழட்டிவிட்டுட லாம்னு சொல்லியிருக்காங்க. தி.மு.க.வைப் பொறுத்தவரை நம்பகமான கூட்டணிக் கட்சிங்கிற பேரு டெல்லியிலே இருக்குது. இப்படி அவசரப்பட்டு செயல்பட்டு அதைக் கெடுத்துக்கொள்ளக் கூடாதுன்னு அந்த யோசனையை நிராகரிச்சிட்டாங்களாம்.''

""இப்போதைக்கு என்னதான் முடிவு?''

""எந்த முடிவும் உறுதியா எடுக்கலை. தற்போதைய நிலைமையில், கூட இருக்கிற கட்சி களோடு சேர்ந்து  10 சீட்டுகள் நிச்சயமா ஜெயிக்கலாம்னு தி.மு.க தரப்பில் கணக்கு போடப்படுது. ஜெ ஆட்சியிலிருந்தபோதே 2004-ல் 40 தொகுதியிலும் அ.தி.மு.க தோற்றது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை இழந்தது. அப்புறம் 2009 எம்.பி. தேர்தலிலும் 9 சீட்டுகள்தான் ஜெயித்தது. அப்படியிருந்தும் 2011-ல் ஆட்சி யைப் பிடிக்கலையா? அதுபோல எம்.பி. தேர்தலில் வெற்றி எண்ணிக் கை குறைந்தாலும் சட்டமன்றத்தில் பார்த்துக்கலாம்னு பேசப்பட்டிருக்குது.'' 

""4 மாநில தேர்தலில் தோற்றுப்போனதால, சோனியா பிறந்தநாளை நெல்சன் மண்டேலா மறைவைக் காரணம்காட்டி காங் கிரஸ் கட்சியே கொண்டாடலை. ஆனா, தி.மு.க எம்.பி.க்கள் நேரில் சந்திச்சி சோனியாவுக்கு வாழ்த்து சொல்லியிருக்காங்களே?''

""நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு பார்லிமெண்ட் கூட்டத்தொடரிலேயே காங்கிரஸ் ரொம்ப டல்லாத்தான் இருக்குது. ப.சி உள்பட யார்கிட்டேயும் முகத்தில் உற்சாகம் தெரியலை. 2009-ல் பக்கபலமா இருந்த கூட்டணிக் கட்சிகளும் பக்கத்தில் இல்லை. அரசியல் கணக்குகளை சரியாப் போடும் சரத்பவாரும், காங்கிரஸ் தலைமை வலிமையா இல்லைன்னு விமர்சிச்சிருக்காரு. காங்கிரசோடு கூட்டணி அமைக்கும் மனநிலையில் எந்தக் கட்சியும் இல்லை. இந்த சூழலில்தான், நாடாளுமன்ற சென்ட்ரல் ஹாலில் தி.மு.க. எம்.பி.க்கள்கிட்டே காங்கிரஸ் மந்திரிகள் சுதர்சன நாச்சியப்பன், ஜெய்ராம் ரமேஷ், ஆரணி எம்.பி. கிருஷ்ணசாமி போன்றவங்களெல்லாம் பழைய கூட்டணி பாசத்தோடு அடிக்கடி பேசுறாங்க. எவ்வளவோ கசப்பான விஷயங்கள் நடந்து போச்சு. அதையெல்லாம் மனசுல வச்சுக்க வேண்டாம். பழையபடி கூட்டணியைத் தொடர்வோம்னு சொல்றாங்க. அதனாலதான் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள், சோனியாவை சந்திச்சி வாழ்த்து சொல்லியிருக்காங்க.''

""வாழ்த்திய தி.மு.க எம்.பி.க்கள்கிட்டே பேச்சு கொடுத்தியா?''

""பேசினேங்க தலைவரே.. .. எங்களுக்கே ஒண்ணும் புரியலை.. ஒரே குழப்பமாத்தான் இருந்ததுன்னு சொன்னாங்க. கலைஞர்கிட்டே டி.ஆர். பாலுதான், பிறந்தநாள் வாழ்த்து சொல்வது டெல்லி அரசியல் பண்பாடுன்னு சொல்லி, 11 மணிக்கு மேலே எங்களையெல்லாம் அழைச்சிட்டுப் போயிட்டாரு. அவரோட இன்ட்ரஸ்ட்டில்தான் இது நடந்தது. நாங்க வாழ்த்து சொன்னதும் சோனியாவுக்கு அப்படியொரு சந்தோஷம். தோல்வி அடைஞ்சிருக்கிற நேரத்திலும் வந்திருக்காங்களேன்னு அவருக்கு ஆறுதல். கூட்டணி விஷயத்தில் எல்லாக் கதவுகளையும் திறந்தே வச்சிருப்போம்னு டி.ஆர்.பாலு நினைக்கிறாருன்னு தி.மு.க எம்.பிக்கள் சொன்னாங்க.''

""எல்லாக் கதவு களும் திறந்திருந்தா பாதுகாப்பில்லாம போயிடுமே!''

""தி.மு.கவோட பாதுகாப்பே அதனோட கொள்கைதான்னு சொல் பவர் பேராசிரியர் அன் பழகன். ஆபரேஷனாகி 3 மாசமா வீட்டிலேயே இருந்த அவர், இப்ப முழுசா குணமாகி புதன் கிழமையன்னைக்கு கலை ஞரை சந்திக்கிறதுக்காக ரொம்ப உத்வேகத் தோடு கிளம்பிட்டாரு. அவர் உடம்பு முடியா மல் இருந்தப்ப கலைஞர் 4 முறை பேராசிரியரை நேரில் சந்திச்சி உடல் நலன் விசாரிச்சாரு. அதை மனசிலே வச்சிக் கிட்டிருந்த பேராசிரியர், தன்னோட உடல்நிலை சரியானதும் கலைஞ ரைத்தான் முதலில் சந்திக்கணும்னு கிளம் பிட்டாரு. கலைஞரோட நெஞ்சுக்கு நீதி 6ஆம் பாகம் சனிக்கிழமை யன்னைக்கு வெளி யிடப்படுது. அதற்கு பேராசிரியர்தான் தலைமை. 15-ந் தேதி பொதுக்குழு. 19-ந் தேதியன்னைக்கு பேரா சிரியரோட பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக் குது. அதெல்லாம் இருந் தாலும் முதலில் தன் னோட தலைவரைத்தான் சந்திக்கணும்னு சொல் லிட்டே பேராசிரியர் கிளம்பியிருக்காரு.''

""கலைஞரைவிட பேராசிரியர் மூத்தவ ராச்சே?''



""மூத்தவர்தான்.. ஆனாலும், கட்சிக்குத் தலைவர் கலைஞர்தானே.. கட்சியும் அதன் தலைமையும் எல்லா வற்றையும்விட முக்கியம்னு நினைக்கிறவர் பேராசிரியர். தலைவரைப் பார்க்கப் போறேன்.. தலைவரைப் பார்க்கப்போறேன்னு வீட்டில் உள்ளவங்ககிட்டே திரும்பத் திரும்ப சொல்லிட்டு உற்சாகமா கிளம்பியிருக்காரு. கோபால புரம் வீட்டில் கலைஞரை பேராசிரியர் சந்திச்சப்ப கூடவே பேராசிரியரோட மகனும் இருந்தார். நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு அரசியல் பேச்சு ஆரம்பிக்க, பேராசிரியரோட மகன் அங்கிருந்து கிளம்பியிருக்காரு. கலைஞர் அவரை உட்காரச் சொல்லியிருக்காரு. ஆனாலும் அது மரியாதை இல்லைன்னு கீழே வந்து சண்முகநாதன் கிட்டே பேராசிரியர் மகன் பேசிக்கொண்டிருக்க, மாடியில் கலைஞரும் பேராசிரியரும் ஏற்காடு இடைத்தேர்தல், பொதுக்குழு, கூட்டணி பற்றி யெல்லாம் பேசியிருக்காங்க. எம்.பி. தேர்தலுக்கு டயம் இருப்பதால கூட்டணி தொடர்பா அவசரப்பட வேண்டாம்ங்கிறதுதான் அவங்க பேச்சோட சாராம்சம்.''

""பொதுக்குழுவில் பேரா சிரியரோட பிரகடனத்தை எதிர்பார்க்கலாம்னு சொல்லு..''

""ஆமாங்க தலைவரே.. நான் அடுத்த மேட்டரை சொல்றேன்.. .. தேர்தலுக்குத் தயாராகும் அ.தி.மு.க., களத்தில் எந்த இடையூறும் இருக்கக்கூடாதுன்னு நினைக்குது. எதிர்த்தரப்புக்கு ஆதரவா சிறுதுரும்பு அசைந்தாலும் அதையெல்லாம் தடுக்கணும்ங்கிறதில் தீவிரமாயிடிச்சி. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் இனிக்கோ இருதயராஜ் வருசா வருசம் தி.மு.க தலைவர்களை அழைத்து கிறிஸ்துமஸ் விழா நடத்துறது வழக்கம். இந்த வருசமும் 18-ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் விழா நடத்த ஏற்பாடுகள் பண்ணிட்டாரு. இன்விடேஷனெல்லாம் ரெடி. திடீர்னு மேலிட உத்தரவின்படி, போலீசிடமிருந்து நெருக்கடிகள் கிளம்பிடுச்சு. இன்னொருபுறம் 12-ந்தேதி காலை 7 மணிக்கெல்லாம் செயின்ட்தாமஸ் மவுண்ட் ஏரியாவில் உள்ள இனிக்கோவோட ஆபீசுக்கு மாநகராட்சி ஆட்கள் போய் சோதனை போட்டிருக்காங்க. கால் டாக்சியிலும் சிலர் வந்திருந்தாங்களாம். இதுபோல இன்னொரு விஷயமும் காதுக்கு வந்தது.''

""என்ன விஷயம்?''

""நான் சொல்றேன்.. பொங்கல் சமயத்தில் துக்ளக் ஆண்டுவிழாவை சோ நடத்துவார். வழக்கமா அதில் அவர் ஜெ.வைப் பாராட்டியும் கலைஞரை நக்கலடிச்சும் பேசுறதை திரும்பத் திரும்ப ஜெயா டி.வி.யில் காட்டிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, இப்ப மோடியை பிரதமர் வேட்பாளரா சோ முன்னிறுத்துவதால அவர் வீட்டு கல்யாண அழைப்பிதழை வாங்குவதில்கூட ஜெ. பழைய ஆர்வத்தைக் காட்டலைங்கிறதையும், அந்தக் கல்யாணத்துக்கும் நேரில் போகலைங்கிறதையும் ஏற்கனவே நாம பேசியிருக்கோம். மோடி ஆதரவு நிலையிலேயே சோ நீடிச்சார்னா துக்ளக் ஆண்டு விழாவுக்கும் நெருக்கடி தர ரெடியாகுதாம் மேலிடம்.''  

 லாஸ்ட் புல்லட்! 

பதவி பறிக்கப்பட்ட பிறகும் நிழல் கண்காணிப்பு என்ற முறையில் 24 மணிநேரமும் தனி போலீஸ் படையால் கவனிக்கப்படு கிறார் மாஜி கே.வி.ராமலிங்கம். அவருக்கு நெருக்கமான ஈரோடு மாநகராட்சி துணைமேயர் கே.சி.பழனிச்சாமி, ஆவின் ராஜேந்திரன் இருவரின் வீடுகளிலும் 2 நாட்களாக தோட்டத்திலிருந்து வந்த தனி டீம் ஒன்று தோண்டித் துருவி, கே.வி.ஆர் குவித்துள்ள சி-க்களின விவரங்கள், முதலீடுகள் பற்றிய விவரங்களை அள்ளியுள்ளது. துணைமேயரிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்படுமாம். இதனால் பீதியடைந்திருக்கும் கே.வி.ஆரின் விசுவாசிகள் பலரும் கார்டனிடம் அப்ரூவராக, எந்த நேரத்திலும் மாஜி மீது கிரிமினல் வழக்கு பாயும் என்கிறது ஆளுந்தரப்பு வட்டாரம்.

ad

ad