புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013




           ண்ருட்டியார் விலகலை அடுத்து, இருபத்தி நான்கே மணி நேரத்தில் அவசர அவசரமாக தே.மு.தி.க.வின் செயற்குழு கூட்டத்தை 12-ந் தேதி மாலையில் கூட்டினார் விஜயகாந்த். மா.செ.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அன்று காலையே பரபரப்பாக சென்னைக்குப் படையெடுத்திருந்தனர்.

காலை 11 மணிக்கு விஜயகாந்த்தின் விருகம்பாக்கம் வீட்டில், அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் "சகாப்தம்' திரைப்படத் தொடக்க விழா நடந்தது. சென்னை ஓட்டல்களில் டேரா போட்ட வெளியூர் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும்,  விஜயகாந்த்தின் விருகம்பாக்கம் வீட்டின் முன், காலை 9 மணியில் இருந்தே திரள ஆரம்பித்தனர்.

கட்சிப்பிரமுகர்கள் அங்கே உட்கார்ந்து பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். பலரது பேச்சிலும் காரமாக அடிபட்டவர் பண்ருட்டியார்தான். 

பட விழாவிற்கான அழைப்பிதழ் கலைஞருக்கு முதல்நாள் அவசர கதியில் அனுப்பப்பட்டது. அதோடு விஜயகாந்த்தும் கலைஞரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, விழாவிற்கு வந்து தன் மகனை வாழ்த்தும்படி அழைப்பு விடுத்திருந்தார். எனவே கலைஞர் வரலாம் என்ற பேச்சுக்கள் அங்கே பலமாக இருந்தன. 

‘""கலைஞர் கண்டிப்பா வருவார். அவரோட இன்றைய வருகை தமிழக அரசியலையே புரட்டிப் போடப் போகுது. கலைஞரும் கேப்டனும் கைகோத்தாங் கன்னா, அந்தம்மாவுக்கு கஷ்டகாலம்தான். இனி அந்த பண்ருட்டியாருக்கு நாம யாருன்னு தெரியப்போவுது'' என ஒரு மா.செ.மார்தட்ட, இன்னொரு கட்சிப் பிரமுகரோ ""கலைஞர் எப்படி வருவார். கலைஞருக்கு நேர்லயா அழைப்பு போச்சு? மெயில்ல. அதுவும் கடைசி நேரத்தில் அழைப்பு போயிருக்கு. அவரும் மெயிலில் வாழ்த்துச் செய்தியைத்தான் அனுப்புவார். வேணும்ன்னா பந்தயம் கட்டிக்கலாம்''’என கிரிக்கெட் பெட்டிங் மாதிரி பந்தயம் கட்டினார்.

அப்போது கடலூரிலிருந்து வந்திருந்த இன்னொரு பிரமுகர் ‘""உங்களுக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்த றேன். முன்னாள் மந்திரி கோவிந்தசாமி இருக்காரே. அவர் என் சொந்தக்காரர்தான். அவர் மரணப்படுக்கையில் இருந்தப்ப கலைஞர் அவரைப் பார்க்கப் போயிருந்தார். அப்ப கலைஞரின் கைகளைப் பிடித்துக்கொண்ட கோவிந்தசாமி, "நான் இறந்துபோயிடுவேன். அதுக்காக நான் கவலைப்படலை. இந்த நேரத்தில் மரணப் படுக்கையில் இருக்கும் எனக்கு, நீங்க ஒரு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும்னார். கலைஞரோ, "உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. என்ன சத்தியம் பண்ணிக் கொடுக்க ணும்னு கேட்டார். அப்ப கோவிந்தசாமி, "எங்க சமூகத் தை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எந்தக் காலத்தி லும் மந்திரி பதவி கொடுத்துடாதீங்க. அவர் குணம் எனக்குத் தெரியும்'னார். கலைஞரும் சரின்னு சத்தியம் பண்ணிக்கொடுத்தார். ஆனா அரசியல் சூழ்நிலை காரணமா அந்த பண்ருட்டியாரை கலைஞர் மந்திரியாக்கினார். அப்படி இருந்தும் கலைஞர் முதுகில் குத்தினார் பண்ருட்டி. கலைஞர் முதுகிலேயே குத்தியவர், கேப்டன் முதுகில் குத்தியதில் என்ன ஆச்சரியம் இருக்கு?''’என்றார் காட்டமாக.

அப்போது இன்னொரு கட்சி நிர்வாகி ""நான் பா.ம.க.வில் இருந்து வந்தவன். பா.ம.க. தொடங்கி ரெண்டு வருசம் கழிச்சிதான் பண்ருட்டியார் அதில் வந்து சேர்ந்தார். அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு ராமதாஸ் சொல்லியிருந்தார்.  ராமதாஸுக்குப் பிறகு கட்சிக்காரங்க தன் பேச்சை மட்டும்தான் கேட்கணும்னார். இதை யாரும் கேட்கலை. உடனே கட்சியைவிட்டு வெளி யேறியவர், கட்சி தனக்கு சொந்தம்னு தேர்தல் கமிஷனிடம் போய் புகார் மனு கொடுத்தார். ராமதாஸ் கொடுத்த விளக்கத்தால்தான், அவரது மனு நிராகரிக்கப்பட்டது'' என்றார்.



அப்போது தே.மு.தி.க. கொ.ப.செ.வும் சட்டமன்றக் கொறடாவுமான சந்திரகுமார் வர, அவரை கட்சிப் பிரமுகர்கள் சிலர் மொய்த்துக்கொண்டனர். ""என்னண்ணே பண்ருட்டியார் இப்படிப் பண்ணிட்டார்? அவர் கருத்தை கேப்டன் கேட்கலைன்னும் தன்னை மதிக்கலைன்னும் சொல்லியிருக்காரே'' என ஆளாளுக்குக் கேட்க,

சந்திரகுமாரோ ""விடுங்கப்பா. இதைப்போய் பெருசா எடுத்துக்காதீங்க. நமக்கு என்ன நடந்ததுன்னு தெரியும். 2005-ல் கட்சியை ஆரம்பிச்சோம். அடுத்த ஆண்டே  நாம பொதுத் தேர்தலை சந்திச்சோம். அதில் நம்ம கேப்டன் மட்டும்தான் ஜெயிச்சார். அதுக்குப் பிறகு மதுரை மத்திய தொகுதிக்கு இடைத்தேர்தல் வருது. அதில் போட்டி யிடவே வேண்டாம்னார் பண்ருட்டியார். கேப்டனோ, "கட்சியை ஆரம்பிச்சிட்டோம். தேர்தலைக் கண்டு ஒதுங்கலாமா'ன்னார். நாமும் களத்தில் இறங்கினோம். அப்ப 21 ஆயிரம் வாக்கு நமக்கு கிடைச்சது. அ.தி. மு.க.வுக்கு 23 ஆயி ரம் கிடைச்சிது. அப்ப இதே பண் ருட்டியார், "அ.தி. மு.க.வுக்கு மாற்று  நாமதான்னு தொகுதி மக்கள் தீர்மானிச்சிருக்காங்க. நல்லவேளை நின்னதால் நம்ம பலம் தெரிஞ் சிது'ன்னு பல்டி யடிச்சார். அடுத்து சி.பி.ஐ. எம்.எல்.ஏ. ஆக்ஸிடெண்ட்டில் இறந்ததால், புதுக் கோட்டை இடைத்தேர்தல் வந்தது. அப்ப, தி.மு.க. நிற்கலைன்னு விட்டுக்கொடுத்தது. "நாமும்  நிற்காம, பெருந்தன்மையா அவங் களுக்கு விட்டுக் கொடுத்துடலாம்'ன்னு கேப்டன் சொன்னார். அப்ப, பண்ருட்டி, "நாம நின்னே ஆகணும்'னார். சரின்னு அவருக்கு மதிப்புக்கொடுத்து நின்னோம். படுபிளாப் ஆனோம். இப்ப ஏற்காடு இடைத் தேர்தல்ல நாம நிக்கலாம்னார் கேப்டன். பண்ருட்டியாரோ, கூடவே கூடாதுன்னார். அதையும் கேப்டன் மதிச்சி கேட்டுக்கிட்டார். இப்படி அவர் சொன்னதையெல்லாம் கவனமா பரிசீலித்து மதிப்பு கொடுத்தவர்தானே நம்ம கேப்டன்'' என விரிவாகவே அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

""பிரேமலதா மேடமும் சுதீஷ் சாரும் இவரை மதிக்கலைன்னு சொல்றாராமே?'' என ஒரு நிர்வாகி கேட்க, சந்திரகுமாரோ ‘""கேப்டன் மதிச் சாரே அது போதாதா? எல்லோருமே தனக்குக் கீழ இருக்கணும். எல்லோரையும் ரிமோட்கண்ட்ரோல் மாதிரி ஆட்டிப் படைக்கணும்னு அவர் நினைக்கிறது எப்படி சரி?. அவர் போவார் என்பது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்'' என்றார் கூலாகவே.


பட விழா வைபவங்கள் தொடங்க, அவர்களின் விவாதங்கள் முற்றுப்பெற்றன. விஜயகாந்த்தின் வீட்டிற்குள் நடந்த பூஜை, வெளியே ஸ்கிரீனில் ஒளிபரப்பானது. பூஜையில் நடிகர் சத்தியராஜ், பிரபு, கார்த்தி, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி போன்ற திரைப் பிரபலங்கள் ஒரு சிலரை மட்டுமே பார்க்க முடிந்தது. பிறகு வெளியே மேடையில் தன் மகனை விஜயகாந்த் அறிமுகப்படுத்திப் பேசினார். அப்போது  ""என் தலைவர் பிரபாகரன்  நினைவாக என் மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் வைத்தேன். முருகன் மீதும் நான் பிறந்த மதுரை மீதும் கொண்ட காதலால், இளைய மகனுக்கு சண்முக பாண்டியன் என்று பெயரிட் டேன். இது அரசியல் விழா அல்ல. சினிமா விழா. இருந்தும் ஜெ.வுக்கு பயந்து பலரும் இங்கே வரவில்லை'' என சினிமா உலக பிரபலங்கள் பலர் வராத வருத்தத்தை பேச்சில் சுட்டிக்காட்டினார். பிறகு தனக்கே உரிய அதிரடியாக ‘""நான் குடிக்கிறேன்.. குடிக்கிறேன்னு சொல்றாங்க. குடிக்கிறது என்ன அவ்வளவு பெரிய தப்பா? அப்புறம் ஏன் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளை திறந்து வச்சிருக்காங்க.’ நான் என் கட்சிக்காரனை உரிமையா திட்டுவேன், அடிப்பேன். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் போல. இதற்காக என்னை கோபக்காரர் என குறை சொல்வதா? கெஜ்ரிவால் கோபப்பட்டா ஆங்கிரிமேன்னு பாராட்டறாங்க. என்னை மட்டும் ஏன் குறை சொல்றாங்க?'' என்றார் அழுத்தமாகவே. 

மாலை 4 மணிக்கு என அறிவிக்கப் பட்டபோதும் 5.15-க்குதான் செயற்குழு தொடங்கியது. கூட்டம் நடந்த கோயம்பேடு கட்சித் தலைமையகத்திற்குள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை. செயற்குழுவில் பேசியவர்கள் பண்ருட்டியாரை துரோகி என்றும் குடிலன் என்றும் ஆமை என்றும் வசைபாடும் போதெல்லாம் ""அவரை விடுங்க. வேற பேசுங்க'' என மடை மாற்றிய விஜயகாந்த் கடைசியாக ""நம்ம கட்சிக்கு எதுக்கு அவைத் தலைவர் நாற்காலி? அந்தப் பதவியே நமக்கு வேண்டாம். இப்ப நடக்கிற ஆட்சியில் லஞ்ச ஊழல் பெருகிவிட்டது. கலவரங்கள் அதிகமாயிடிச்சி. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. இதைக் கூடிய விரைவில் மாற்றிக் காட்டுவோம். தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை நீங்க என்னிடம் கொடுத்திருக்கீங்க. அதை சரியா, உங்கள் ஆலோசனையின் பேரில் முடிவெடுப்பேன். வலுவான கூட்டணியுடன் களம் காண்போம்'' என்றார் அழுத்தமாக.

நிறைவாக பண்ருட்டியாரின் விலகலை ஏகமனதாக ஏற்பதாகவும், இனி தே.மு.தி.க.வுக்கு அவைத்தலைவர் என்ற பதவியே தேவையில்லை என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேர்தலில் நிற்பது குறித்தும் கூட்டணியைத் தீர்மானிப்பது குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரங்களை கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த்திடமே வழங்குவதாகவும் தீர்மானங்களை நிறைவேற்றினர்.

பண்ருட்டியார் விலகியது குறித்து விஜயகாந்த்தின் நிஜ ரியாக்ஷன் என்ன? என அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் கேட்டபோது ""கட்சி என்னுடையது. அது என் கம்பெனி. மேனேஜர்கள் வருவாங்க. போவாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமா? என்பதுதான் அவரது மனநிலை. அப்படித்தான் கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். இதற்காக அலட்டிக் கொள்ளவே இல்லை'' என்கிறார்கள் புன்னகையோடு.

ad

ad