புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவாளர் தேமுதிகவில் இருந்து விலகல்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், தே.மு.தி.க. மேற்கு மாவட்ட தலைவருமான சின்னச்சாமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. கட்சி
ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்த கட்சியின் வேகம் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளை சந்திக்காமல் இருப்பது, கட்சியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், கோஷ்டி அரசியல், மூத்த அரசியல் கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் இருப்பது போன்றவற்றால் பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.


அந்த வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அவைத் தலைவர் பண்ட்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்தார். இது அந்த கட்சிக்கு பெரிய இழப்பாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்சியில் இனிமேல் அவைத் தலைவர் பதவியே இருக்காது என்று விஜயகாந்த் அறிவித்தார். அவரின் இந்த போக்கு கட்சியின் பல நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதன் வரிசையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. தலைவர் சின்னச்சாமி தான் கட்சியில் இருந்து விலகுவதாக பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்திருந்தார்.
பண்ட்ருட்டி ராமச் சந்திரன் ஆதரவாளராக இருந்ததால் இவர் கட்சியில் இருந்து விலகியதாக தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ad

ad