புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

மூவருக்கு அனுமதி மறுத்ததால் வத்தளை பிரதேச சபைக்கு வெற்றி

வத்தளை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு பரபரப்பான நிலைக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


வாக்கெடுப்பு நடைபெற்ற சபைக்குச் செல்ல வத்தளை பிரதேச சபை உப தலைவர், ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஜேவிபி உறுப்பினருக்கு இன்று (17) அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வத்தளை பிரதேச சபை உப தலைவர் சஞ்சீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். 

இரண்டாம் வாசிப்பு இடம்பெறாமலே வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் சபைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் ஜேவிபி உறுப்பினர் ஜூட் கிறிஸ்தோபர் தெரிவித்தார். 

அனுமதி மறுக்கப்பட்ட மூவர் இன்றி வத்தளை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கடந்த 4ம் திகதி வத்தளை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad