புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

100க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நீரில் மூழ்கியது: 11 பேர் பலி
ஒடிசா மாநிலம், சம்பல்புர் மாவட்டத்தில் உள்ள ஹிராகுட் நீர்த்தேக்கத்தில், 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென நீரில் மூழ்கியது.


படகில் இருந்த அனைவரும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக் குழுவினரின் உதவியுடன் 80 பேரை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தில் இரண்டு குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட 11 பேர்கள் பலியானார்கள். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.
மேலும் நீரில் மூழ்கிய 9 பேரின் உடல்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஒடிஷா அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனவே, பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச் சென்றதே படகு விபத்திற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad