புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

காதலிக்காக 6.2 மில்லியன் செலவளித்த ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவர்
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க, தனது காதலிக்காக 6.5 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் தலைவருடன் செல்வாக்குள்ள விமானப் பணிப்பெண்ணான குறித்த பெண், மாலைதீவின் மாலே நகரில் வரும் 80
பயணிகளுக்காக காத்திருந்த யு.எல். விமானத்தில் முன்னதாகவே பாரிஸ் நோக்கி திருப்பியுள்ளார். இதற்கான செலவும் 6.2 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
சத்துரிக்கா முகாந்திரம்கே என்ற இந்த விமானப் பணிப்பெண், நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, மாலைதீவில் இருந்து வரும் பயணிகளை ஏற்றிக் கொண்டு பாரீஸ் நோக்கி புறப்படவிருந்த யு.எல்.110 என்ற விமானத்தையே இவ்வாறு பயன்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விமானத்தில் வந்த 75 பயணிகளை ஹோட்டலில் தங்க வைப்பதற்காக கடந்த ஜனவரி 25 ஆம் திகதி எதிர்பாராத கட்டணத்தை செலவிட நேர்ந்துள்ளது.
25 ஆம் திகதி பிராங்போர்ட் செல்லவிருந்த இந்த பயணிகள் 26 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதுடன், பாரீஸூக்கு தனியான வேறு விமானத்தை அனுப்பி வைக்க நேர்ந்துள்ளது.
இதற்கான சகல செலவுகளும் நாட்டின் தேசிய வருமானத்தில் இருந்தே செலவிடப்படுகிறது.
விமான சேவையின் தலைவருக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்ட அந்த பெண், விமானத்தை உடனடியாக பாரீஸ் நோக்கி புறப்படுமாறு உத்தரவிட வேண்டும் என கேட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதுடன் இலங்கையில் வரிப் பணத்தை செலுத்துபவர்கள் மூலம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், விமான நிறுவனத்தின் விமானங்கள் இவ்வாறு தனிப்பட்ட விருப்பத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
மாலைதீவில் இருந்து வந்த 80 பயணிகளின் விமானப் பயணத்திற்கான செலவை ஸ்ரீலங்கன் விமான நிறுவனமே ஏற்கவேண்டும். இதனால் நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன.
விமான நிறுவனத்தின் தலைவர் அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த போது, மலேசியாவில் இருந்து கொழும்பு நோக்கி பறந்த விமானத்தை உடனடியாக சிங்கப்பூருக்கு வரவழைத்து இலங்கை திரும்பியிருந்தார்.
சிங்கப்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த விமானத்திற்காக காத்திருக்க விரும்பாத விக்ரமசிங்க, உடனடியாக அந்த விமானத்தை வரவழைத்து கொழும்பு திரும்பியிருந்தார்.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் முகாமைத்துவத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் திரும்ப பெறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
விமான நிறுவனத்தை நிர்வகிக்க கூடிய கல்வி தகுதி நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு இல்லை எனவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ad

ad