புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014


தேமுதிக தனித்து போட்டியா?
 நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. 


தமிழகத்தை பொறுத்த வரை கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக, திமுக, பாஜ கட்சிகள் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. பாஜவை பொறுத்தவரையில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி முடிவாகி விட்டது.
பாமகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேமுதிகவை பாஜக கூட்டணியில் இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. ஆனால் கூட்டணி குறித்து விஜயகாந்த் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். விழுப்புரம் மாநாட்டில் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முடிவு எதையும் விஜயகாந்த் அறிவிக்கவில்லை.
 இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர் களிடம் விஜயகாந்த் நேற்று முதல் நேர்காணலை நடத்தி வருகிறார். இன்று காலை 10 மணி முதல் நீலகிரி (தனி), கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தொகுதிக்கான நேர்காணல் நடந்து வருகிறது.
நேர்காணல் வருபவர்களிடம் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா, யாருடன் கூட்டணி அமைக்கலாம் அல்லது தனித்து போட்டியிடலாமா என்று கருத்தை கேட்டு வருகிறார். நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தனித்து போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் பாஜவுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் கருத்தை தெரிவித்துள்ளனர்.


நாளையும், நாளை மறுநாளும் இந்த நேர்காணல் நடைபெறுகிறது. நேர்காணலில் பங்கேற்பவர்களின் பதிலை முழுமையாக அறிந்த பிறகே, விஜயகாந்த் தன் முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ad

ad