புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

வெட்ட வெளிச்சத்திற்கு வந்த தொழிதிபர் பேரனின் ரகசியம்

சுவிட்சர்லாந்தில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த நபர், 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் Jet Aviation நிறுவனத்தின் தலைமையாளர் கார்ல் கிர்ச்மேன், இவரது பேரன் கிர்ச்மேன்.
இவர் கடந்த 2010ம் ஆண்டு தன் சொந்த டிஸ்கோத்தேயில் கலந்துகொள்ள வந்த 15 வயது மதிக்கதக்க அயல் நாட்டு பெண்ணை தன்னுடன் பாலியல் உறவு வைத்துகொள்ள வேண்டும் என கழிப்பறையில் துன்புறுத்தியதுடன், கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.
இக்குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் மீது கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், தன் கட்சிக்காரர் attention deficit disorder என்ற நோயினால் அவதிப்படுவதால் தன்னை அறியாமல் இக்குற்றத்தை செய்திருக்க கூடும் என கூறியுள்ளார்.
ஆனால் இவரது வாதம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அந்த நபருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிர்ச்மேன் ஹாலிவுட் நடிகையான தார ரெய்ட், அமெரிக்காவின் நாகரீக சமுதாய சங்க தலைவர் பாரீஸ் ஹில்டன் மற்றும் சுவிசின் வைட்டினை டைலோ போன்ற பிரபலங்களுடன் தொடர்ப்பு வைத்திருந்தருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad