புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்
கோரி மனு செய்துள்ளனர். கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஆனதால் தண்டனையை குறைக்கக் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
தற்போது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

கருணை மனுக்கள் நிலுவையில் இருந்ததற்கு எந்த காரணங்களும் இல்லை. சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக மத்திய அரசு கூறுவதை ஏற்கக் கூடாது. தூக்குத் தண்டனை பெற்றவர்களின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும். மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது என கல்வி, இசை கற்றதாக மூவரும் விளக்கம் அளித்துள்ளனர். 

ad

ad