புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டி 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஒக்லாந்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது நாளான நேற்று 407 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது இந்திய அணி 96.3
ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 366 ஓட்டங்களை எடுத்தது. ஆரம்ப வீரர் ஷிகன் தவான் 115 ஓட்டங்களை பெற்றார். எனினும் நியூஸிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசியதில் வெகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். போல்ட் மற்றும் சவ்தீ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முன்னதாக நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 503 ஓட்டங்களைப் பெற்றதோடு இந்தியா தனது முதல் இன்னிங்ஸ¤க்காக 202 ஓடங்களைக் குவித்தது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் 105 ஓட்டங்களுக்கே சுருண்டது.

ad

ad