புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்ததையடுத்து, அந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை புதன்கிழமை கூடி முடிவு செய்தது. இது தொடர்பாக மத்திய அரசு 3 நாள்களில் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கெடு விதித்து புதன்கிழமை கடிதம் அனுப்பியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "ராஜீவ் கொலை வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்தி, குற்றவாளிகள் 7 பேருக்கும் தடா சட்டம், ஆயுதச் தடைச் சட்டம் ஆகிய மத்திய அரசின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை முறைச் சட்டம் 435- பிரிவின் படி, மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சட்ட விரோதமானது; சட்டப்படி செல்லுபடியாகாது என்பதால் அவர்களை விடுவிக்கக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகளை விடுவிப்பதாக அறிவிப்பதற்கு முன்னர், தற்போதைய நீதிபதியின் கருத்தையோ அல்லது இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் கருத்தையோ தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் அதை தமிழக அரசு செய்யத் தவறிவிட்டது என்று கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad