புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


முன்னாள் பிரதம நீதியரசருக்கு சார்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்தது
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக மேன்முறையீடடு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று இரத்துச் செய்துள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வலுவற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் நீதியரசர் எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா இந்த தீர்ப்பை வழங்கியிருந்தார்.
அவர் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களான சலிம் மர்சூக், சந்திரா ஏக்கநாயக்க, சத்திய ஹெட்டிகே, ஈவா வனசுந்தர மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய 5 பேர் அடங்கிய அமர்வு இன்று இரத்துச் செய்தது.
மேன்முறையீடடு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஏற்கவே மேன்முறையீடு செய்திருந்த சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ அந்த தீர்ப்பு தவறான முன்ணுதாரணம் எனவும் நீதிமன்றத்தினால் நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

ad

ad