புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


முடிந்தால் பாருங்கள்;எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்;இதை சவாலாக விடுக்கிறேன் : ஞானதேசிகன் பேச்சு
 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதையடுத்து குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.


இந்த நிலையில் குற்ற வாளிகள் யாரையும் விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும், ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 தமிழர்களுக்கும் நீதி கேட்டும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசியபோது,
’’ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கொலையாளிகள் அல்ல என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளிக்கவில்லை. 4 பேருக்கு தூக்கு தண்டனையும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
அதன் பிறகுதான் கணவரை இழந்த தவிப்பும் தந்தையை இழந்த குழந்தைகளின் தவிப்பும் எனக்கு புரிகிறது. எனவே ஒரு குழந்தைக்கு தாயான நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுங்கள் என்று சோனியாகாந்தி கடிதம் கொடுத்தார்.
நமது நாட்டை பொறுத்த வரை பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி மும்பையில் தாக்குதல் நடத்திய கசாப்புக்கு வக்கீல் வைத்து வாதாட சட்ட உரிமை வழங்கியுள்ளது. அதே போல் தான் பிரதமரை கொன்றவருக்கும் சட்ட உரிமை கொடுத்தது.
தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும் நாங்கள் குற்றவாளிகள்தான் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறையுங்கள் என்று ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தனர். இந்த அரிச்சுவடி கூட வைகோவுக்கு தெரியவில்லையே.
11 ஆண்டு கருணை மனு மீது முடிவெடுக்க காலதாமதம் ஆனதால் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது மற்ற கொலை வழக்கை விட இந்த வழக்கு வித்தியாசமானது. இலங்கையில் சதி திட்டம் தீட்டப்பட்டு 13 விடுதலைப் புலிகள் இந்தியாவில் ஊடுருவி தங்கள் திட்டத்தை நிறை வேற்றியி ருக்கிறார்கள்.
எனவே இவர்களுக்கும், மும்பையில் ஊடுருவிய கசாப்புக்கும் வித்தியாசம் இல்லை. இவர்கள் 3 பேர் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து காலை 11 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது. மறுநாள் காலை 11 மணிக்கு 7 பேரையும் விடுதலை செய்கிறேன். தமிழக அரசு அறிவிக்கிறது. இது மிகப்பெரும் அநீதி. தேசத்துக்கே சவால் விடும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. அப்போது நளினிதான் 14 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதாகவும் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது மற்ற கொலைகளுக்கும், ராஜீவ் கொலைக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே விடுதலை செய்ய முடியாது என்று அவரது கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. உடனே நளினி ஐகோர்ட்டு சென்றார். ஐகோர்ட்டும் அவரை விடுதலை செய்ய மறுத்து விட்டது.

ad

ad