புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


விமான நிலையங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை

முழு அதிகாரமும் மத்திய அரசிடமே
விமான நிலையங்களை நிறுவுவதற்கான முழு அதிகாரம் நாட்டின் மத்திய அரசாங்கத்திடமேயுள்ளது. இலங்கை அரசியல் யாப்பில் எந்தவொரு இடத்திலும் இதற்குரிய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே மூன்றாவது விமான சேவையினை நிறுவுவது தொடர்பில் வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளப்போவதில்லையென தகவல் ஊடகத்துறையமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.இதேவேளை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசாங்கத்தை தொடர்ந்தும் குறை கூறி வருவதிலிருந்து அவரது நேர்மையில் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளதெனவும் அமைச்சர் கெஹெலிய கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறையமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இந்தியாவுக்கான விமான சேவையின் அவசியம் குறித்து வட மாகாண சபை நிறைவேற்றியிருக்கும் பிரேரணை தொடர்பில் செய்தியாளரொருவர் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்குகையி லேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வட மாகாணத்தின் பலாலியிலிருந்தும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையி லிருந்தும் இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சி வரையிலான விமான சேவையின் அவசியம் குறித்தே இறுதியாக நடைபெற்ற வட மாகாண சபை அமர்வின்போது பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் யாப்பினை பொறுத்தவரையில் விமான சேவைகள் மற்றும் துறைமுகத்தினை நிறுவுவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசாங்கத் திடமே உள்ளது. மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை சொல்லும் அரசியல மைப்பின் 13 வது திருத்தத்தில் கூட மாகாண சபைக்கென தனியானதொரு விமான சேவையை நிறுவுவது பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில் இவ்வாறானதொரு பிரேரணை எந்தவகையிலும் செயற்படுத் தப்பட முடியாத ஒரு விடயமெனவும் அமைச்சர் கெஹெலிய விளக்கமளித்தார்.
வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும். அவை எதவும் இதுவரை நிறைவேற்றப்பட வில்லையென குற்றம் சுமத்தியுள்ளாரே யென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்யிய வினாவுக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய, ஜனாதிபதியை சந்தித்து அவர் உரையாடியுள்ளார். அவர் முன்வைத்த சில கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்றியதுடன் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றார். எனினும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல இடங்களிலும் எதற்காக அரசாங்கத்தை குறைகூறி வருகிறாரென எனக்குப் புரியவில்லை. அவரது நேர்மையில் எனக்கு சந்தேகம் உண்டு. எனவே அவரது கருத்துகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லையெனவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் வெளிப்படை யாகவே கூறினார்.

ad

ad