புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவு வேதனை தருகிறது: பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது. அதே சமயத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜேட்லி கூறியதாவது,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு அமைப்புகளும் கருணையுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பா.ஜ.க. ஏற்கவில்லை. அந்த முடிவுகள் ஏமாற்றம் தருகிறது. உண்மையில் தமிழக அரசின் முடிவு எனக்கு வேதனையைத் தருகிறது. அந்த முடிவை மாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

ad

ad