புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நடவடிக்கையின் விளைவாக 3 பேரின் விடுதலைக்கு சிக்கல்: கிருஷ்ணசாமி பேட்டி
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம்
கட்சியின் நிறுவனரும், எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி,

தமிழக முதல் அமைச்சர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்கள் காலதாமதம் ஆனாலும் கூட, எல்லா விதமான சட்ட விதிமுறைகளையும் ஆலோசித்து மத்திய அரசின் இணக்கத்தோடு நடவடிக்கை எடுத்திருந்தால், இது நிச்சயமாக வெற்றிகரமாக இருந்திருக்கும்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நடவடிக்கையின் விளைவாக தற்போது மீண்டும் அவர்கள் 3 பேரின் விடுதலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுபொறுப்பையும் தமிழக முதல் அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்

ad

ad