28 ஏப்., 2014


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம் பெற கடன்

40,000 ரூபாவை 6 வருடங்களில் செலுத்த சலுகை
கிராமப்புறத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை முன்னேற்றும் மஹிந்த சிந்தனை
தொலைநோக்குக்கு இணைவாக அவர்களுக்கு மின் இணைப்பை வழங்குவதற்காக கடன் உதவித் திட்டம் அறிமுகம் செய்யப்படும். அமைச்சர் பவித்ரா வன்னிஆராய்ச்சியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மின்சார சபை இத்திட்டத்தை மேற்கொள்ளும்.
ஆசிய அபிவிருத்தி வங்கி 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் தீர்வையற்ற நிதி அனுசரணையை வழங்கும்.
முதல்கட்டமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி மாவட்டங்களில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.
ஒரு குடும்பத்துக்கு 40, 000 ரூபா கடன் உதவி வழங்கப்படும்.
இத்தொகை தவணை அடிப்படையில் ஆறு வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். புதிய மின் இணைப்புக்களை பெறுவதற்காக அருகிலுள்ள மின்சார பொறியியலாளர்களைச் சந்தித்து கடன் உதவிக்கான விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என கடன் திட்டத்துக்கு பொறுப்பான முகாமையாளர் ஜயந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
வீடுகளில் உள்ள வயரிங். மின் இணைப்பு பெற்றுக்கொள்ள இந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம்.
2014 வருட இறுதிக்குள் நாட்டில் மின்சார வசதி இல்லாத சகல வீடுகளுக்கும் மின்சாரத்தை வழங்க வேண்டுமென்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவாகும்.
இந்த உத்தரவின் பேரில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.