புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2014


மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்

மு.க.அழகிரி ஆதரவாளர்கள் என கூறப்படும் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் 10 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறி இருப்பதாவது:–
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.எம்.கருப்பசாமி, டி.சுப்புலட்சுமி மற்றும் எம்.உதயகுமார், மிசா எம்.பாண்டியன், என்.சிவக்குமார், ப.கோபிநாதன், வி.என்.முருகன், ஆர்.எஸ்.ராமலிங்கம், க.இசக்கிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கவுஸ்பாட்சா ஆகிய 10 பேர் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தி.மு.க.வுக்கு எதிராக செயல்படுவதாக அறியப்படுகிறது.எனவே, இவர்கள் அனைவரும் தி.மு.க. உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.