புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2014

நிராகரிக்கப்பட்ட பிரேரணை சில இன்று அமர்வுக்கு வரும் 
வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத சில பிரேரணைகள், பிரேரணையின் கடினத்தன்மை குறைக்கப்பட்டு இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்கு அவைத் தலைவரும், வடக்கு முதலமைச்சரும் சம்மதித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

 
வடக்கு மாகாணசபையின் எட்டாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுத்துக் கொள்வதற்காக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சில பிரேரணைகள் அவைத் தலைவரால் நிகழ்சி நிரலுக்குள் உள்வாங்கப்படவில்லை. 
 
அது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. அப்போது முல்லைத் தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் சமர்பிக்கப்பட்ட பிரேரணை, அதன் வடிவம் மாற்றப்பட்டு மென்மையாக்கப்பட்டு இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதே போன்று மற்றொரு ஆளுங்கட்சி உறுப்பினரான க.சிவாஜிலிங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட 4 பிரேரணைகளில் 2 பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2 பிரேரணைகளிலும் இனப்படுகொலை மற்றும் சில வார்த்தைகள் திருத்தியமைக்கப்பட்டு இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட அவைத் தலைவரும், வடக்கு முதலமைச்சரும் சம்மதித்துள்ளனர். 
 
இதேவேளை நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தன்னைப் பற்றி ஊடகங்களில் தவறான தகவல்கள் வருகின்றன என்றும், அது தொடர்பில் தான் பயப்படபோவதில்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.