புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2014


பாமக-வி.சி மோதல்: 31 பேர் மீது வழக்கு

திண்டிவனம் அருகே பெரிய அண்டப்பட்டு கிராமத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 31 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை
வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 மயிலம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாமகவினர் நடுக்குப்பத்துக்கும், பெரிய அண்டப்பட்டு பகுதிக்கும் இடையில் மரத்தில் பாமக கொடியை கட்டியுள்ளனர். இதே மரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும் தங்கள் கொடியை கட்டியுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
 இந் நிலையில் தேர்தல் நாளன்று பாமகவினர் பெரிய அண்டப்பட்டு பகுதியில் உள்ளவர்களிடம் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கும்படி வற்புறுத்தியாக கூறப்படுகிறது. அதற்கு அப் பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் அவர்கள் விருப்பப்பட்ட சின்னத்துக்கு வாக்களிப்பாளர்கள், நீங்கள் என்ன கூறுவது என்று வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் பாமக-விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவரை ஒருவர் தடி, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
 இம் மோதலில் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பைச் சேர்ந்த கார்வண்ணன் மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள்(35), பார்த்தசாரதி, பாமகவைச் சேர்ந்த சரத்குமார், ராமமூர்த்தி, சதீஷ் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இது குறித்து மயிலம் போலீஸ் நிலையத்தில் கார்வண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடுக்குப்பத்தைச் சேர்ந்த வினோத், சரத்குமார், லோகநாதன், மகாலிங்கம், மூர்த்தி, சிவலிங்கம், அய்யப்பன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இதே பிரச்சினையில் பாமகவைச் சேர்ந்த சரத்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வடிவேல், தமிழரசன், பாட்ஷா, தினேஷ் லெனின் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 பாமக-விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நடுóகுப்பம், பெரிய அண்டப்பட்டு பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ad

ad