புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2014

தற்போதைய செய்தி 
இலங்கைக்கு பேரிடி .4 ஆண்டுகள் இலங்கை ஐ.நா. கண்காணிப்பில் ; கிடுக்கிப்பிடி போட்டார் நவிப்பிள்ளை 
news
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

 
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் மோசமாகக் காணப்படுகின்றது என்று பல்வேறு அமைப்புக்களும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் மனித உரிமைகள் நிலைப்பாடுகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் இணைத்துக் கொண்டுள்ளார் நவநீதம்பிள்ளை. 
 
அதன்படி எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு வரையான 4 ஆண்டுகள் இலங்கை விவகாரங்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையால் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ""குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, இலங்கையை குறித்த நான்கு ஆண்டு காலப் பகுதியில் கண்காணிக்கும்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கொள்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த எதிர்வரும் நான்கு ஆண்டுகளிலும் சகல வளங்களும் பயன்படுத்தப்படும். நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் உரிமைகளையும் உறுதி செய்யக் கூடிய வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த விசாரணைகளை நடத்துவதற்கு மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அதிகாரம் வழங்கியிருந்தது அந்தத் தீர்மானம். அதையடுத்து சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் வேலைத் திட்டங்களை முழுமூச்சுடன் ஆரம்பித்துள்ளது மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகம். எதிர்வரும் ஜூன் மாதமளவில் குறித்த விசாரணைப் பொறிமுறை தொடர்பில் ஆணையாளர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்தநிலையிலேயே இலங்கை தொடர்பில் இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார் நவநீதம்பிள்ளை 

ad

ad