புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014


 மோடிக்கு நடந்தது பால்ய விவாகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் இந்த தேர்தலில்தான் தனது வேட்புமனுவில் தனக்கு திருமணம் ஆனதை குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் போட்டியிட்ட எந்த ஒரு தேர்தலிலும் அவர் தனக்கு திருமணம் ஆனதையோ அல்லது மனைவி பெயரையோ தெரிவிக்காமல்
இருந்துவந்தார்.
இதனால் மோடி தனக்கு திருமணம் ஆனதை மறைத்துவிட்டார் என்றும், மோடி பெண்களை மதிக்காதவர் என்றும், மனைவியை ஒதுக்கி வைத்தவர் நாளை பெண்களை எப்படி மதிப்பார்? என்றும் பல்வேறு கட்சிகளும் விமர்சித்திருந்தன.
இந்நிலையில் மோடிக்கு நடந்தது பால்ய விவாகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜோயலை ஆதரித்து,   தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் இன்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது, '' குஜராத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மோடி திருமணம் செய்ததை மறைத்தவர், இவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவரா? என்று கருணாநிதி கேட்கிறார். மோடிக்கு நடந்தது பால்ய விவாகம். 19 வருடம் தாயை கூட பார்க்காமல், குடும்ப வாழ்க்கை நடத்தாமல் இருந்தார். தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர் மோடி.

சேது கால்வாய் திட்டத்தை நான் விட்டுவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். அண்ணா சொன்ன போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்னை இல்லை. ராமசாமி முதலியார், கோயில்பிள்ளை ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும் போது சுற்றுச்சூழல் பிரச்னை இல்லை. தற்போது சுற்றுச்சூழல் பிரச்னை வந்துள்ளது. மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டால் தான் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினேன். கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்க ஆயுதம், பணம் கொடுத்தது சோனியா காந்தி கூட்டம். மீனவ மக்களின் கண்ணீரிலும், துன்பத்திலும் பங்கு பெற்றவன் நான். மோடி தமிழ் ஈழத்தை ஆதரிப்பார் என்று கூறவில்லை. ஆனால் வாஜ்பாய், ஆயுதம் தர மாட்டோம், பணம் தர மாட்டோம் என்று கூறினார். அதனை மோடி பின்பற்றுவார். அவர்களது பொது சிவில் சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை.

தமிழ்நாட்டை 2 கட்சிகளின் தலைமைகள் சீரழித்துவிட்டன. சுயநலத்துக்காகவும், குடும்பத்துக்காவும் கட்சியை பாழ்படுத்தினார் கருணாநிதி. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க.வில் எதேச்சை அதிகாரம், சுயநல தலைமை, கொள்கை இல்லாத தலைமை உள்ளது. இந்த தேர்தலில் இருதரப்பில் இருந்தும் அதிக பணம் கொடுக்க உள்ளனர். ஆனால் அதற்கு ஆப்பு வைக்க இளம் தலைமுறையினர் வந்துவிட்டனர். பணத்தின் ஆதிக்கம் இந்த தேர்தலோடு ஒழியட்டும். நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சி அமைய பம்பரம் சின்னத்தில் வாக்களியுங்கள்" என்றார்.

ad

ad