புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014

வடக்கு முதல்வருக்கு பதவி நாற்காலி எப்படி கிடைத்தது- புதுக்கதை கூறும் சுசில் பிரேமஜயந்த 
இராணுவத்தினரின் உயிர் தியாகத்தின் காரணமாகவே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அந்த பதவி நாற்காலி கிடைத்ததாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர், நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் வவுனியாவை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு சென்றதில்லை.

வவுனியாவை தாண்டி செல்ல முடியாத சூழ்நிலை காணப்பட்டது. எமது இராணுவத்தினர் உயிர்களை தியாகம் செய்த காரணத்தினாலேயே விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.

ஆனால் தற்போது வடக்கு மாகாண முதலமைச்சர் தற்போது ஒவ்வொரு கதைகளை கூறி வருகிறார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் காரணமாவே மக்களுக்கு சகல பிரதிபலன்களும் கிடைத்து வருகிறது. இதனால் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த எதிர்க்கட்சிகளிடம் காரணங்கள் இல்லை.

விரும்பிய இடத்தில் வாழ, விரும்பிய இடத்திற்கு செல்ல மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad