புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014


துப்பாக்கிகளுடன் நால்வர் நுழைந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டனர்! நகைக்கடை காவலாளி
துப்பாக்கிகளுடன் நால்வர் கடையினுள் நுழைந்து, காவலில் இருந்த என்னை ஒருவர் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையிட்டார். இவ்வாறு நேற்றிரவு நீர்கொழும்பு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து அங்கிருந்த காவலாளி தெரிவித்தார்
நீர்கொழும்பிலிலுள்ள நகைக் கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நகை மற்றும் பணத்தினை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
நீர்கொழும்பு கிரீன்ஸ் வீதியில் அமைந்துள்ள நகைக்கடையிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஜக்கட் மற்றும் ஹெல்மட் அணிந்து வந்த ஆறு பேரைக் கொண்ட குழுவே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது
துப்பாக்கிகளுடன் நால்வர் கடையினுன் நுழைந்து, காவலில் இருந்த என்னை ஒருவர் வெளியில் தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையிட்டார் மற்றையவர் நகைகளை கொள்ளையிட்டார். அவர்கள் தாம் கொண்டு வந்த பையினுள் அதனை போட்டனர்.
சம்பவம் இடம்பெறும் போது வாடிக்கையாளர்கள் ஏழு பேரும்,கடை ஊழியர்கள் 24 பேரும் கடையினுள் இருந்தனர்.
அவர்கள் கடையை விட்டு வெளியேறும் போது கடைக்கு வெளியே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கடையின் காவலாளி தெரிவித்தார்.
இதேவேளை, இச்சம்பவத்திற்கு ரி . 56 ரக துப்பாக்கிகள் இரண்டும் மேலும் சில ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு வருகை தந்துடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ad

ad