புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014

அச்சுவேலி கதிரிப்பாய் படுகொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலைக ளுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல் லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் தனது மனைவியின் சகோதரி, மனைவி யின் சகோதரன் மற்றும் மனைவியின் தாயார் ஆகியோரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தனஞ்சயன் என்பவர் நேற்றுமுன்தினம் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.குறித்த சம்பவத்தில் தனஞ்சயனின் மனைவியும், மனைவியின் சகோதரி யின் கணவரும் படுகாயமடைந்த நிலை யில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான தனஞ்சயன் கைது செய்யப்பட்டதுடன், கொலை யாளி பயன்படுத்தியதாக நம்பப்படும் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நேற்றுக்காலை அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகக் கூடிய கிராம மக்கள் குறித்த நபரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆக்ரோசமாக கூச்சலிட்டனர். எனினும், பொலிஸார் குறித்த நபரை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்ற வளாகத்திலும் பெருமளவு மக்கள் கூடியிருந்தனர். மூவரைக் கொலை செய்தமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளில் ஒத்துக்கொண்டு ள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்

ad

ad