புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014




ட்சியமைக்கப் போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு வடமாநிலங்களில் மட்டுமின்றி, தென்மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி அமையவேண்டும். வழக்கமாக இம்மாநிலங்களில் அதிக இடங்களைப் பெறக்கூடிய காங்கிரஸ் கட்சி பழைய வலிமையுடன் இல்லை. அதே நேரத்தில், பா.ஜ.க.வும் காங்கிரசின் இடங்களையெல்லாம் கைப்பற்றக்கூடிய செல்வாக்குடன் இல்லை.

ஆந்திரபிரதேசம்

தென்னிந்திய மாநிலங்களில் அதிகத் தொகுதிகளைக் கொண்டது ஆந்திராதான். மொத்தம் 42 தொகுதிகள். இத்தனை தொகுதிகளுடன் இம்மாநிலம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது இதுவே கடைசிமுறை. அடுத்த தேர்தலில் சீமாந்திரா என்றும் தெலங்கானா என்றும் இரண்டு மாநிலங்களாகத்தான் தேர்தலை சந்திக்கும். அதிகாரப்பூர்வமான மாநிலப் பிரிவினை இன்னும் முழுமையடையவில்லை என்றாலும் இப்போது ஆந்திர மாநிலத்தில் கட்சிகளெல்லாம் இரண்டு மாநிலங்களாகக் கணக்கிட்டுத்தான் களம் காண்கின்றன. 

சீமாந்திரா பகுதியில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 25. தெலங்கானாவில் 17 தொகுதிகள் உள்ளன. சீமாந்திராவில் அதிக சீட்டுகளை ஜெயிக்கப்போவது ஜெகன்மோகன்ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசா, சந்திரபாபுநாயுடுவின் தெலுங்குதேசமா என்ற போட்டி நிலவிய நிலையில், தெலுங்குதேசமும் பா.ஜ.கவும் கூட்டணி சேர்ந்துள்ளன. தொகுதிப் பங்கீடு உள்பட பல விஷயங்களிலும் இவ்விரு கட்சிகளுக்குமிடையே நிலவிய பூசல்கள் ஒருவழியாகப் பூசி சரிசெய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சீமாந்திராவில் சரியான தலைமையின்றி, மக்களின் அதிருப்திக்குள்ளாகித் தவிக்கிறது.‘சிரஞ்சீவி போன்ற சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களைத் தான் அது நம்பவேண்டியுள்ளது.

தெலங்கானா பகுதியைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியும் புதிய மாநில உருவாக்கத்திற்குத் தாங்கள்தான் காரணம் என பிரச்சாரம் செய்கின்றன. சந்திரசேகர்ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் பலிக்க வில்லை. அதனால் சந்திரசேகர்ராவை காங்கிரஸ் விமர்சிக்கிறது. அவரது கட்சியில் இருந்த நடிகை விஜயசாந்தி  இப்போது காங் கிரஸ் கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறார். ஆந்திராவின் மொத்த சீட்டுகளில் 20 வரை ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் எதிர்பார்க்க, 15க்கு மேற்பட்ட இடங்களில் ஜெயிக்க வேண் டும் என பா.ஜ.க- தெலுங்கு தேசம் கூட்டணி கணக்கிடு கிறது. தெலங்கானா ராஷ்ட் ரிய சமிதி 5 இடங்களுக்கு குறையக்கூடாது எனப் பாடுபடுகிறது. மிஞ்சுகின்ற தொகுதிகள்தான் கடந்த  முறை 31 தொகுதிகளை வென்ற காங்கிரசுக்கு இம்முறை கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கர்நாடகா

தென்மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு நம்பிக்கை தரும் ஒரே மாநிலம் கர்நாடகம் தான். இங்குள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 17 அன்று வாக்குப்பதிவு நடந்தது. எடியூரப்பா தனிக்கட்சி கண்டதால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி யடைந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததை தொகுதிவாரியான வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடும் இம்மாநில அரசியல் களஆய்வாளர்கள் தற்போது எடி யூரப்பா மீண்டும் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்ப தாலும், தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மோடி அலை வீசுவதாலும் பா.ஜ.க கூடுதல் இடங்களில் வெற்றிபெறும் என்கிறார்கள். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை நடத்தும் முதல்வர் சித்தராமையாவின் மக்கள் நலத்திட்டங்கள் கர்நாடகாவில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பட்ட கெட்டபெயர் இல்லை. அதனால் பா.ஜ.கவை எதிர்கொள்ள முடியும் என்று சொல்பவர் களும் இருக்கிறார்கள்.

கர்நாடக மாநில அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் விளங்கியது முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம். தேவகவுடாவின் மகன் குமாரசாமி இக்கட்சியின் சார்பில் மாநில முதல்வராகப் பொறுப்பு வகித்தார். பா.ஜ.கவின் ஆதரவைப் பெறவும் அக்கட்சி அப்போது தயங்கவில்லை. ஆனால், பலவித குற்றச்சாட்டுகளால் செல்வாக்கிழந்து, கடந்த சில தேர்தல்களில் பெரியளவில் வெற்றிபெற முடியாமல் போன மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு தற்போது ஓரளவு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதைக் கள நிலவரம் காட்டுகிறது. இதன் மூலம் அதிகளவில் சீட்டுகளைப் பிடிக்க மதசார்பற்ற ஜனதாதளத் தால் முடியாது என்றாலும், அக்கட்சி வாங் கும் வாக்குகளால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பா, காங்கிரசுக்கு பாதிப்பா என்பதைப் பொறுத்தே இங்கு தேர்தல் முடிவுகள் அமையக்கூடும். பா.ஜ.க. அதிக எதிர்பார்ப்புடன் உள்ள தென்மாநிலம் இது.

கேரளா

இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் மாறி மாறி ஆதரவளித்து வரும் கேரள மாநிலத்தில் உள்ள தொகுதி களின் எண் ணிக்கை 20. ஏப்ரல் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. கடந்த எம்.பி. தேர்தலிலும் அதன்பின் சட்டமன்றத் தேர்தலிலும் சி.பி.எம் தலைமையிலான இடதுசாரி முன்னணி இங்கே பின்னடை வைச் சந்தித்தது. இம்முறை அந்தளவு பின் னடைவு இல்லையென்றாலும் முழுமை யான மீட்சியும் இல்லை. இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ள சில மாநிலங்களில் கேரளாவுக்கு முன்வரிசையில் இடம் உண்டு. 15 இடங்கள் வரை பெறு வோம் என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். அந்தளவுக்கு விடமாட்டோம், 20-ல் 10-க்கு மேல் பிடிக்கவேண்டும் என்று களப் பணியாற்றியுள்ளோம் என்கிறார்கள் இடதுசாரித் தோழர்கள். 

கேரளாவில் பா.ஜ.கவுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. மாறாக, முஸ்லிம் லீக்கிற்கு குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதுடன் அங்கு வெற்றியும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், இம்முறை கேரளாவில் ஒரு எம்.பி தொகுதியையாவது ஜெயிக்க வேண்டும் எனத் தீவிரமாக செயல்படு கிறது. வாஜ்பாய் ஆட்சி யில் அமைச்சராக இருந்த ஓ.ராஜகோபால் போட்டி யிடும் மாநிலத் தலை நகரான திருவனந்தபுரத் தில் வெற்றி கிடைக்கலாம் என பா.ஜ.க நிர்வாகிகள் நம்புகிறார்கள். இங்குதான் சர்ச்சைக்குரிய காங்கிரஸ் அமைச்சர் சசி தரூரும் போட்டி யிடுகிறார். திருவனந்தபுரத்தைவிட கர்நாடக மாநிலம் மங்களூரை ஒட்டியுள்ள கேரள மாநிலத் தொகுதி யான காசர்கோடில் மோடி அலை வீசக் கூடும் என்றும் பா.ஜ.க.வுக்கு எதிர் பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அலை யெல்லாம் கர்நாடக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குள் வர முடியாது என்பதில் மாநிலத்தில் எதிரெதிராக இருக்கும் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் ஒருசேர சொல்கின்றன.

யூனியன் பிரதேசங்கள்

இந்தியாவின் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கப் போகும் மாநிலங்களையடுத்து சில யூனியன் பிர தேசங்களும் இருக்கின்றன. இந்த யூனியன் பிரதேசங் களில் தலா ஒரு தொகுதி மட்டுமே உள்ளன. புதுச் சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகள், சண்டிகார், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன்-டையூ என 6 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இன்றைய நிலையில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க ஒவ்வொரு தொகுதியும் முக்கியத்துவம் பெறுவதால் இவற்றின் மீது காங்கிரசும் பா.ஜ.க.வும் கவனம் செலுத்துகின்றன. 

முக்கியமான தேசியக் கட்சிகள் இரண்டின் நம்பிக்கை கணக்கின் அடிப்படையில் பார்த்தால் காங்கிரசுக்கு மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கையில்லை. 150 இடங்களுக்குக் குறையாமல் வெற்றிபெற்று, மாநிலக்கட்சிகளால் உருவாகும் மூன்றாவது அணியின் தயவில் தனது ஆட்சி யையோ அல்லது தனது தயவில் மூன்றாவது அணியின் ஆட்சியையோ அமைத்து பா.ஜ.கவின் ஆட்சிக்கனவை முறியடிக்க நினைக்கிறது. பா.ஜ.கவும் தான் நம்புகிற மோடி அலையால் தனி மெஜாரிட்டி சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணிக்கே ஆட்சியமைக்கத் தேவையான 272 தொகுதிகள் கிடைக்குமா என்றும் உறுதியாக அதனால் நம்ப முடியவில்லை. 

உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா, மகாராஷ்ட்ரா, கர்நாடகம், ஆந்திரபிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றன என்பதைப் பொறுத்தே மத்தியில் அமையும் அரசை முடிவு செய்யும் என நினைக்கும் தேசியக் கட்சிகள் இரண்டும் தமிழகத் தேர்தல் முடிவுகளை மற்ற மாநிலங்களைவிட கூடுதலாகக் கவனிக்கின்றன. இந்திய அர சியலை நிர்ணயிப்பதில் தவிர்க்க முடியாத மாநிலமாகத் தொ டர்ந்து நீடிக்கிறது நம் தமிழகம்.

ad

ad