புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014


ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் டொக்டர் ஜோன் டபிள்யூ அஷ், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இலங்கையில் ஆரம்பமான சர்வதேச இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்.

சந்திப்பின்போது இவர்கள் இருவரும் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளனர் என ஜனாதிபதி அலுவலம் தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக, இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஏனைய துறைகளில் பெண்களில் ஈடுபாடு, சுகாதாரத் துறை, தொழில்நுட்பத்துறை மற்றும் விளையாட்டு போன்றவை குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலே குறிப்பிட்ட துறைகளில் இலங்கையில் வளர்ச்சி காணப்படுவதாக ஐ.நா பொதுச் சபையின் டொக்டர் ஜோன் டபிள்யூ அஷ் தெரிவித்துள்ளார்.
சுமார் 30 வருடங்களாக பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டு மக்கள் அவதியுற்றதாக ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
தற்போது இலங்கையின் வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 7 சத விகிதம் உள்ளதாகவும், வடக்கில் 22 சதவிகிதம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் சீனாவுக்குப் பிறகு இலங்கையின் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்துள்ளதாகவும் சமூகத்துடன் இணைத்துள்ளதாகவும், சிறுவர் போராளிகளை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிகள், புகையிரதம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடைந்துள்ளன.
தற்போது, உயர்கல்வி பயிலும் மாணவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணத்திலிருந்தே தெரிவாகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
சில சர்வதேச நாடுகளின் அழுத்தமே இலங்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாக டொக்டர் ஜோன் டபிள்யூ அஷ்ஷிடம் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

ad

ad