புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


மேயர் பதவியை ராஜினாமா செய்தார் செ.ம.வேலுசாமி;கோவையில் பரபரப்பு
 கோவை மாநகராட்சி மேயராக இருந்தவர் செ.ம.வேலுசாமி. இவர் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கோவை மாநகர்
மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தமிழக முதல்–அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செ.ம.வேலுசாமி விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக அமைச்சரும், கோவை புறநகர் மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, மாநகர் மாவட்ட செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மேயர் செ.ம.வேலுசாமி நேற்று இரவு 11 மணி அளவில் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கோவை மாநகராட்சி கமிஷனர் லதாவிடம் கொடுத்தார்.
அதில் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக மட்டும் செ.ம.வேலுசாமி குறிப்பிட்டுள்ளார். பதவி விலகுவதற்கான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கமிஷனர் லதா அந்த கடிதத்தின் நகல்களை நகராட்சி நிர்வாக ஆணையாளர், உள்துறை செயலாளர், முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலருக்கு அனுப்பியுள்ளார்.
மேயர் பதவியை செ.ம. வேலுசாமி ராஜினாமா செய்தது மற்றும் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad