புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014

கல்முனையில் போலிஸ் உத்தியோகத்தர், முஸ்லிம் ஒருவர் வீட்டில் கொள்ளை அடித்தார் 
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்; உள்ள கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பணத்தைக் கொள்ளையிட்ட
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
வீடு ஒன்றில் கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இதுபற்றி தெரியவருவதாவது
கல்முனைக்குடி தைக்கா நகர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான இன்று புதன்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும் போது வீட்டை திறந்து வைத்துள்ள நிலையில் கொள்ளையர் வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையிட்ட போது வீட்டின் உரிமையாளர்கள் கொள்ளையனைக் கண்டு சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் கொள்ளைரை மடக்கிப் பிடித்தது நையப்புடைப்பு செய்தனர்.
இதனையடுத்து 119 பொலிஸ் அவசர சேவைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் கொள்ளையரை கைது செய்து விசாரணையின் போது அவர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 40 வயதுடைய சாய்ந்தமருதைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad