சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் பலி
உக்ரைனில் கடந்த 17-ந் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச் 17 விமானத்தில், மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையொருவர் உயிரிழந்துள்ளார்.
சுபாஷினி ஜெயரத்னம் என்ற சுபா ஜெயா என்ற தமிழ் நடிகையே இவ்வாறு பலியாகியுள்ளார். இவருடன் சேர்ந்து பயணித்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவரின் கணவர் மற்றும் மகளும் இந்த சம்பத்தின் போது பலியாகியுள்ளனர்.
இவர் மரணமடைவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
நாடகம், நடனம், சினிமா, தொலைக்காட்சி என்று பல்துறைகளில் சிறந்து விளங்கிய சுபா ஜெயா, இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.TAMILWIN.com/show-RUmsyHRVLclu4.html#sthash.RLxweCwn.dpufஇவர் மரணமடைவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
நாடகம், நடனம், சினிமா, தொலைக்காட்சி என்று பல்துறைகளில் சிறந்து விளங்கிய சுபா ஜெயா, இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.