புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014

298 பேரின் சாவுக்கும் ரஷ்யாவே காரணம் : அமெரிக்கா சாடல் 
மலேசிய பயணிகள் விமானம் MH17  உக்ரைன் நாட்டில் தாக்கி வீழ்த்தப்பட்டமைக்கு  ரஷ்யா உதவியாக இருந்தமைக்கான பெரும் ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
 
போராளிகளின் செயற்பாட்டுகளுக்கு ரஷ்யா பொறுப்பேற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
உக்ரைன் நாட்டின் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த மலேசிய பயணிகள் விமானம் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டமையினால் அதில் பயணித்த 298 பயணிகளும் உயிரிழந்துள்ளனர் .
 
உயிரிழந்தவர்களின் உடல்களை பகடைக்காய்களாக பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய ஆதரவு போராளிகளிடம் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூரி பிஷப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
அச்சடலங்களை உறவினர்களும் குடும்பத்தினரும் பொறுப்பேற்க காத்திருக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad